AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிக்பாஸ் டெமோகிரஸி ரூமில் வெடித்த பிரச்சனை… சண்டையிடும் போட்டியாளர்கள்!

Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இன்று டெமோகிரஸி அறையில் அனைவரும் கூடி இதுவரை வீட்டில் நடந்த நிகழ்வுகள் குறித்து பேசுகிறார்கள். அப்போது குக்கிங் டீமிற்கும் எதிரணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது தற்போது பிரச்சனையாக வெடித்து உள்ளது.

பிக்பாஸ் டெமோகிரஸி ரூமில் வெடித்த பிரச்சனை… சண்டையிடும் போட்டியாளர்கள்!
பிக்பாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 24 Sep 2026 14:30 PM IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் முந்தைய சீசன்களில் இல்லாத பல புது விசயங்களை நிகழ்ச்சி குழு புகுத்தி உள்ளது. இது அனைத்தும் ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் முன்பு எப்போதும் இல்லாத ஒன்றாக காமென் மேன் என்ற நிகழ்ச்சியை நடத்தி பிக்பாஸில் கலந்துகொள்ள விரும்பிய சாதாரண மக்களுக்கு போட்டியை நடத்தி அவர்களில் இருந்து முதலில் 3 பேர் போட்டியாளர்களாக அனுப்பட்ட நிலையில் அடுத்ததாக ஒருவர் வைல்கார்ட் போட்டியாளராக நுழைந்தார். அது மட்டும் இன்றி இந்த பிக்பாஸ் வீட்டில் டெமோகிரஸி அறை என்ற ஒன்றை வைத்து வீட்டில் உள்ள போட்டியாளர்களை இரண்டு அணிகளாக பிரித்து விளையாடவும் செய்துள்ளனர். இதனால் அவர்களா சண்டை போட காரணங்கள் தேட வேண்டாம் அதுவாகவே நடைப்பெற்று வருகின்றது.

தொடர்ந்து இரண்டு வாரங்கள் முடிவடைந்து தற்போது மூன்றாவது வாரத்தில் உள்ள இந்த நிகழ்ச்சியில் வீட்டின் லீடராக அவினாஷ் தேர்வாகி உள்ளார். மேலும் இந்த வாரம் கிட்சன் அணியில் முழுவதுமாக ஆண்கள் மட்டுமே உள்ளனர். வீட்டின் க்ரோசரியில் உப்பு இல்லாமலே சமைத்து வருகின்றனர். இது ஒரு பக்கம் சிக்கலாம உள்ள நிலையில் இன்று டெமோகிரஸி ரூமில் கிட்சன் அணிக்கு எதிரணி கொடுத்த ஸ்டார்ஸ் அவர்களி எரிச்சலடைய செய்துள்ளது.

பிக்பாஸ் டெமோகிரஸி ரூமில் வெடித்த பிரச்சனை… வைரலாகும் வீடியோ:

அதன்படி முதலாவதாக இன்று வெளியான புரோமோவில் ஜேசன் எதிரணி தலைவரிடம் எந்த அடிப்பையில் இந்த ஸ்டார் வழங்கப்பட்டது என்று கேள்வி எழுப்ப அதற்கு எதிரணி தலைவர் ராகவ் அளித்த பதில் அவர்களை திருப்தி அடையசெய்யவில்லை. மாறாக தற்போது வெளியான புரோமோவில் ராகவின் பேச்சால் கிட்சன் அணியில் உள்ளவர்கள் கடுப்பாகி உள்ளது தெரிகிறது. இதனால அவர்களிடையே சண்டை ஏற்பட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… தேதி குறிச்சாச்சு… விஷ்ணு விஷாலின் இரண்டு வானம் படத்தின் ரிலீஸ் எப்போது – அப்டேட் இதோ

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… இயக்குநர் ராமின் இயக்கத்தில் வெளியானது ஏழு கடல் ஏழு மலை படத்தின் ரிலீஸ் ட்ரெய்லர்!

Follow Us