AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இளைஞரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் பிக்பாஸ் பிரபலம் வர்ஷினி கைது

Bigg Boss Tamil Season 8 Varshini Venkat | பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே பிரபலமானவர் வர்ஷினி வெங்கட். இவர் இளைஞரை மிரட்டி பணம்பறிக்க முயன்ற வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இளைஞரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் பிக்பாஸ் பிரபலம் வர்ஷினி கைது
வர்ஷினி வெங்கட்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 23 Sep 2026 11:13 AM IST

தமிழ் சின்னத்திரையில் பலதரப்பட்ட சேனல்களில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றது. இதில் எல்லா நிகழ்ச்சிகளும் தமிழக மக்களிடையே கவனத்தை ஈர்க்கிறதோ இல்லையோ பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி மட்டும் ஒட்டுமொத்த தமிழக மக்களிடையேயும் பரிச்சையமான ஒன்றாக உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2017-ம் ஆண்டு முதல் இந்த நிகழ்ச்சி தமிழக மக்களிடையே பிரபலமான ஒன்றாக உள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் முன்பு மக்களிடையே பரிச்சையமானவர்களாக இல்லாமல் இருந்தாலும் இந்த பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு பரிசையமாகிவிடுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே பிரபலமானவர்தான் வர்ஷினி வெங்கட். இவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்னதாக ஜிம்மில் ஒர்கவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு சமூக வலைதளத்தில் பிரபலமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் வைல்கார்ட் போட்டியாளராக உள்ளே நுழைந்த இவர் சுமார் 20 நாட்களுக்குப் பிறகு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் ஒரு இளைஞரை மோசடி செய்த வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… நானியின் ப்ளடி ரோமியோ படத்தில் இணைந்த பிரித்விராஜ் சுகுமாரன்? வைரலாகும் தகவல்

இளைஞரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் பிக்பாஸ் பிரபலம் வர்ஷினி கைது:

அதன்படி இன்று வெளியான செய்தியின்படி பிக்பாஸ் பிரபலம் வர்ஷினி வெங்கட் கிண்டியில் உள்ள இளைஞரிடம் குறும்படம் எடுப்பதாக கூறி முதலில் 5 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து அதே இளைஞரிடம் மீண்டும் ரூபாய் 27 லட்சம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகின்றது. இந்த வழக்கில் தற்போது பிக்பாஸ் பிரபலம் வர்ஷினி வெங்கட்டை கைது செய்த கிண்டி காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… பிக்பாஸில் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் பட்டம்… உடைந்து அழுத சாந்தினி – வைரலாகும் வீடியோ

Follow Us