டிராமா குயின் என்ற பட்டத்தை ஆனந்திக்கு போட்டியாளர்கள் – கதறிய ஆனந்தி!
Bigg Boss Tamil 10: பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது சிறப்பாக ஒளிபரப்பாகிவருகிறது. இன்றுடன் இந்நிகழ்ச்சி தொடங்கி கிட்டத்தட்ட 16 நாட்களாகியுள்ளது. இழியில், இன்று வெளியான 2வது புரோமோவில், யார் யாருக்கு எந்தவிதமான பட்டம் பொருந்தும் என டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஆனந்திக்கு உடனிருக்கும் பல போட்டியாளர்களும் 'டிராமா குயின்' என படத்தை வழங்கியுள்ளனர்.
தென்னிந்திய மொழிகளில் ஒரே நேரத்தில் தொடங்கப்பட்டிருந்த பிரம்மாண்ட ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருப்பதுதான் பிக் பாஸ் (Bigg Boss). தமிழில் பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது தொடங்கி மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றுவரும் நிலையில், கிட்டத்தட்ட 2 வாரங்களை கடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுக்கும் நிலையில், 2 வாரங்களில் இந்த நிகழ்ச்சியிலிருந்து கிட்டத்தட்ட 3 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் மிகவும் பிரம்மாண்டமாக வரவேற்கப்பட்டுவருகிறது. பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது பலவாறு விமர்சனங்கள் மற்றும் பல்வேறு சர்ச்சைகளையும் ஏற்படுத்திவருகிறது. வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்த ஆனந்தி (Aananthi), இந்த வீட்டில் வந்த முதல் நாளிலே பிரச்சனையை ஏற்படுத்தியிருந்தார்.
மேலும் டாஸ்குகளில் இவர் செய்த விஷயங்களை ஜேசன் போடு உடைத்திருந்தார். இதனால் சக போட்டியாளர்களும் ஆனந்தியை சகித்துவரும் நிலையில், இன்று (22/09/2026) போட்டியாளர்களின் குணாதிசயங்களை வைத்து பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புரோமோ வெளியாகியுள்ளது.




இதையும் படிங்க: சக போட்டியாளர்களை செய்கையால் கடுப்பேத்திய முனியம்மாள் – கடுப்பான லட்சுமி பிரியா – வைரலாகும் புரோமோ!
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 13வது நாளின் 2வது புரோமோ குறித்த வீடியோ பதிவு:
#Day16 #Promo2 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision pic.twitter.com/n6pkUkazNw
— Vijay Television (@vijaytelevision) September 22, 2026
இந்த புரோமோ வீடியோவில், அவினாஷ் அசோக், தனது கையில் “நான் ஒரு டிராமா குயின்” என்று பெயர் பொறிக்கப்பட்டுள்ள பலகையை வைத்துள்ளார். அதை ஆனந்திக்கு வழங்க தான் நினைப்பதாக கூறினார். இதை யாரெல்லாம் ஆனந்திக்கு வழங்குவதற்கு ஒப்புக்கொள்கிறீர்கள், கையை தூக்குங்கள் என கேட்டார். உடனே கிட்டத்தட்ட 10 போட்டியாளர்களும் கையை உயர்த்தினார், இதனால அவர் ஆனந்திக்கு “டிராமா குயின்” என டைட்டில் வைக்கப்பட்ட பலகையை வழங்கியிருந்தார்.
இதையும் படிங்க: அன்பில் அவன் படத்திற்காக என் பெற்றோரின் வீட்டை அடமானம் வைத்தேன் – மேடையில் எமோஷனலான அசோக் செல்வன்!
உடனே கோபப்பட்ட ஆனந்தி, என்னால் இதை ஏற்றுக்கொள்ளமுடியாது என கூறினார். உடனே அவினாஷ், அதை கழுத்தில் போடுங்க என கூறினார். அதை கழுத்தில்போட ஆனந்தி மறுத்த நிலையில், உடன் இருந்த வினோத் பாபு, அதை போடவேண்டும் என்றுதான் கொடுக்கப்பட்டுள்ளது. என அவரை ஜாடையாக பேசியிருந்தார். தற்போது இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது. மேலும் இன்றைய எபிசோடு நிச்சயம் சுவாரஸ்யமாக இருக்கும் என தெரிகிறது.