Baththa: விஜய் சேதுபதியின் பத்தா படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்!
Baththa Distribution Rights: தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நடிகராக இருந்துவருபவர் விஜய் சேதுபதி. இவரின் நடிப்பில் 2026ம் ஆண்டில் வெளியாக காத்திருக்கும் முதல் திரைப்படம் பத்தா. இப்படத்தின் தமிழகம் மற்றும் கேரளா ரிலீஸ் உரிமையைப் பெற்ற நிறுவனங்கள் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
கோலிவுட் சினிமாவில் இயக்குநர் பாலாஜி தரணீதரன் (Balaji Tharaneetharan) பிரபலமான இயக்குநராக இருந்துவருகிறார். இவரின் இயக்கத்தில் தமிழில் பல படங்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த 2026ம் ஆண்டில் இவரின் இயக்கத்தில் வெளியாக காத்திருக்கும் திரைப்படம்தான் பத்தா (Baththa). இதை இயக்குநர் பாலாஜி தரணீதரன் இயக்க, இயக்குநரும், தயாரிப்பாளருமான அட்லீ குமார் (atlee Kumar) தயாரித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை லிஜோமோல் ஜோஸ் (Lijo mol josh) இணைந்து நடித்துள்ளார். இந்த படமானது கிட்டத்தட்ட 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் நடக்கும் கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளது. அந்த விதத்தில் இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் (Sai Abhyankkar) இசையமைத்துள்ள நிலையில், இவரின் இசையில் இப்படத்தின் பாடல்கள் சிறப்பாக அமைந்துள்ளது. இப்படமும் விரைவில் வெளியாக காத்திருக்கும் நிலையில், இதன் தமிழகம் மற்றும் கேரளம் ரிலீஸ் உரிமையை பெற்ற நிறுவனங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.




இதையும் படிங்க: கர்ணனாக ராகவா லாரன்ஸ்.. வெளியானது மஹாவீர் கர்ணா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
விஜய் சேதுபதியின் பத்தா படத்தின் தமிழகம் மற்றும் கேரளம் ரிலீஸ் உரிமை குறித்த அப்டேட்:
இந்த பத்தா படமானது விஜய் சேதுபதியின் நடிப்பில் முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க, லிஜோமோல் ஜோஸ் இணைந்து நடித்துள்ளார். மேலும் சித்தா பட குழந்தை நட்சத்திரமும் இப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: தனுஷின் ஓம் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்.. எப்போது ரிலீஸ் தெரியுமா?
இந்நிலையில் இப்படமானது வரும் 2026ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதியில் வெளியாக காத்திருக்கும் நிலையில், இதன் தமிழகம் மற்றும் கேரளம் ரிலீஸ் உரிமையை பிரபல நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ஏஜிஎஸ் சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றிய நிலையில், கேரளாவில் E4 என்டேர்டைமென்ட் நிறுவனமானது பெற்றுள்ளதாம். இது குறித்த பதிவை படக்குழு பகிர்ந்துள்ளது.
விஜய் சேதுபதியின் பத்தா படத்தின் தமிழக ரிலீஸ் உரிமை பெற்ற நிறுவனம் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:
Bringing #Baththa closer to audiences hearts across Tamil Nadu with @AGSCinemas ♥️
Written & Directed by #BalajiTharaneetharan
A @SaiAbhyankkar musical#BaththaFromOct1Makkal Selvan @VijaySethuOffl @jose_lijomol @muthurajthangvl #SelvakumarSK @kalaivananoffl #ShruthiManjari… pic.twitter.com/o8kMq998e9
— AforApple (@aforapple_offcl) September 21, 2026
இந்த பத்தா படமானது மிகவும் பிரமாண்டமாகவும், மற்றும் வித்தியாசமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குநர் அட்லீ குமார் தயாரித்துள்ள நிலையில், இதன் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது. இப்படம் 2026ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதியில் வெளியாகவுள்ள நிலையில், விரைவில் ட்ரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.