கர்ணனாக ராகவா லாரன்ஸ்.. வெளியானது மஹாவீர் கர்ணா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
Mahaveer Karna First Look: தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நடிகராகவும் இயக்குநராகவும் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ராகவா லாரன்ஸ். இவரின் நடிப்பில் பல படங்கள் வெளியாகிவருகிறது. இந்நிலையில் தற்போது தெலுங்கு இயக்குநர் இயக்கத்தில், புராண கதைக்களத்தில் நடிக்கிறார். அந்த படம்தான் மஹாவீர் கர்ணா. தற்போது இப்படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது.
கோலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக இருந்துவருபவர் ராகவா லாரன்ஸ் (Raghava Lawrence). இவர் தமிழில் தொடர்ந்து ஹாரர் மற்றும் நகைச்சுவையான திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் இறுதியாக வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் (Jigarthanda DoubleX). இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2023ம் ஆண்டில் இப்படமானது வெளியாகியிருந்தது. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் ஆக்ஷன் கதாநாயகனாக நடித்திருந்த நிலையில், இது அவருக்கு கலவையான விமர்சனங்களை கொடுத்திருந்தது. இந்த படத்திற்கு பின் இவரின் நடிப்பில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த திரைப்படங்களும் வெளியாகவில்லை. ஆனால் இவரின் கைவசத்தில் கிட்டத்தட்ட 6 படங்களுக்கும் மேல் வைத்துள்ளார்.
இவர் தனது இயக்கத்தில் காஞ்சனா 4 (Kanchana 4 ) படத்தை உருவாக்கிவருகிறார். இந்நிலையில் தற்போது தெலுங்கு இயக்குநர் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளார். இயக்குநர் ரமேஷ் வர்மா (Ramesh Varma) இயக்கத்தில், புராண கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுவரும் படம்தான் மஹாவீர் கர்ணா (Mahaveer Karna). இதில் ராகவா லாரன்ஸ் கர்ணனாக நடிக்கும் நிலையில், இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.




இதையும் படிங்க: ஒரே நேரத்தில் 37 கலைஞர்களின்.. கின்னஸ் சாதனை படைத்த ராக்கா படக்குழு!
நடிகர் ராகவா லாரன்ஸ் பகிர்ந்த மஹாவீர் கர்ணா படத்தின் முதல் பார்வை குறித்த எக்ஸ் பதிவு:
I’m truly happy and blessed to portray one of the most legendary characters from our mythology, #Karna 🏹⚔️
I never expected this script to come to me, and my thanks to director @DirRameshVarma for bringing this script to me and making this happen.
I take on this journey with… pic.twitter.com/hdGmzxAE6G
— Raghava Lawrence (@offl_Lawrence) September 22, 2026
இந்த பதிவில் ராகவா லாரன்ஸ், இந்து புராணங்களில் உள்ள மிகவும் புகழ்பெற்ற கதாபாத்திரங்களில் ஒன்றான கர்ணனாக நடிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் ஆசீர்வாதத்தையும் அளிக்கிறது. இந்தக் கதை என்னிடம் வரும் என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. இந்தக் கதையை என்னிடம் கொண்டு வந்து இதைச் சாத்தியமாக்கிய இயக்குநர் ரமேஷ் வர்மாவுக்கு எனது நன்றிகளும் வாழ்த்தும். இந்தப் பயணத்தை நான் நன்றியுடனும் பணிவுடனும் மேற்கொள்கிறேன், உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்களும் ஆதரவும் எனக்குத் தேவை என தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சக போட்டியாளர்களை செய்கையால் கடுப்பேத்திய முனியம்மாள் – கடுப்பான லட்சுமி பிரியா – வைரலாகும் புரோமோ!
கர்ணனாக நடிக்கும் ராகவா லாரன்ஸ்:
புராண கதைகளில் மிகவும் பிரம்மாண்ட இதிகாசங்களில் ஒன்றுதான் மகாபாரதம். இந்த புராண கதையானது மிகவும் பிரம்மாண்டமானது என்ற நிலையில், அதில் மிகவும் பிரபலமான கேரக்டரில் ஒன்றுதான் கர்ணன். சூரிய புத்திரன் கர்ணனின் குணம் பற்றி அனைவருக்கும் தெரிந்ததே. அந்த வகையில் இவரின் வாழ்க்கையை படமாக ராகவா லாரசன் நடிக்கவுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழியை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கவுள்ள நிலையில், இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. தற்போது இது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.