Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Raghava Lawrence: ராகவா லாரன்ஸிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்.. வைரலாகும் வீடியோ!

Rajinikanth Wishes Raghava Lawrence: தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர், நடிகர், நடன இயக்குநர், தயாரிப்பாளர் என பல்வேறு பணிகளை சிறப்பாக செய்துவருபவர் ராகவா லாரன்ஸ். இவர் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். இவருக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், அந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

Raghava Lawrence: ராகவா லாரன்ஸிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்.. வைரலாகும் வீடியோ!
ரஜினிகாந்த் மற்றும் ராகவா லாரன்ஸ்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 29 Oct 2025 20:13 PM IST

தென்னிந்திய சினிமாவில் பல்வேறு பணிகளை சிறப்பாக செய்துவருபவர் ராகவா லாரன்ஸ் (Raghava Lawrence). இவரின் முன்னணி நடிப்பில் இறுதியாக வெளியான படம்தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் (Jigarthanda Double X) . இந்த படமானது இவருக்கு ஓரளவு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. இந்த படத்தை அடுத்ததாக இவரின் நடிப்பில் பென்ஸ் (Benz), புல்லட் (Bullet), காஞ்சனா 4 (Kanchana 4) என பல்வேறு திரைப்படங்கள் உருவாகிவருகிறது. இவ்வாறு தமிழில் தனது கைவசத்தில் கிட்டத்தட்ட 3 படங்களை இவர் வைத்திருக்கிறார். இவர் வெறும் நடிகராக மட்டுமில்லாமல், சினிமாவில் இயக்குநர், நடன இயக்குநர், நடிகர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என பல்வேறு பணிகளையும் செய்துவருகிறார். இதை தொடர்ந்து சமூக செயல்பாடுகளிலிலும் ஈடுபட்டுவருகிறார். இவர் புதிதாக கல்வி நிலையத்தையும் ஆரம்பிக்கவுள்ளதாக அவரே சமீபத்தில் அறிவித்திருந்தார்.

அந்த வகையில் பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கும் செய்துவருகிறார் ராகவா லாரன்ஸ். இந்நிலையில் இன்று 2025 அக்டோபர் 29ம் தேதியில் தனது 49வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். இவரின் பிறந்தநாளை முன்னிட்டு இவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) வாழ்த்து தெரிவித்துள்ளார். இவருக்கு வாய்ஸ் மெசேஜாக அனுப்பிய குரலை வீடியோவாக தனது இணையப் பக்கத்தில் மாஸ்டர் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: ஸ்ரீலீலாவின் முதல் தமிழ் படத்தை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.. நடிகர் சூர்யா பேச்சு!

நடிகர் ராகவா லாரன்ஸிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் தொடர்பான பதிவு:

இந்த பதிவில் நடிகர் ரஜினிகாந்த், “ஹேப்பி பர்த்டே மாஸ்டர், லவ் யு” என வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளார். இதை ராகவா லாரன்ஸ் வீடியோவாக தனது இணைய பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: விஷ்ணு விஷாலின் ஆர்யன் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

மேலும் அந்த பதிவில் இவர், “தலைவர் ரஜினிகாந்த், இன்று அதிகாலையில் எனக்கு ஒரு இனிமையான வாழ்த்துச் செய்தியை அனுப்பி என் பிறந்தநாளை மிகவும் சிறப்பானதாக்கினார். இதை பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவரது குரலைக் கேட்டது உண்மையிலேயே என் நாளை மகிழ்ச்சியடையச் செய்தது. அவரது அன்புக்கும் ஆசீர்வாதங்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்” என அந்த பதிவில் நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

ராகவா லாரன்ஸின் புதிய படங்கள் :

இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில், மற்றும் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடித்துவரும் படம் பென்ஸ் . இதில் நடிகர் நிவின் பாலி முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார். இப்படம் LCU பட தொகுப்பில் 4-வதாக இணைந்துள்ளது. இப்படத்தை அடுத்ததாக ராகவா லாரன்ஸ் அவரின் சகோதரன் நாயகனாக நடிக்கும் புல்லட் படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில் இறுதிக்கட்டப்பணிகளில் இருக்கிறது. இப்படத்தை அடுத்ததாக இவர் காஞ்சனா 4 படத்தை இயக்கி நடிப்பதில் பிஸியாக இருந்துவருகிறார். இதில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிப்பதாக கூறப்படுகிது.