சிரஞ்சீவி படத்தில் நான் நடிக்கிறேனா? மாளவிகா மோகனன் விளக்கம்
Actress Malavika Mohanan: பான் இந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை மாளவிகா மோகனன். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் சமீபத்தில் இவர் எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்திய அளவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார் நடிகை மாளவிகா மோகனன் (Actress Malavika Mohanan). இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. சினிமாவில் தொடர்ந்து 12 ஆண்டுகளாக நடிகையாக வலம் வருகிறார் நடிகை மாளவிகா மோகனன். இவரது நடிப்பில் இறுதியாக மலையாள சினிமாவில் வெளியான படம் ஹிருதயபூர்வம். இந்தப் படத்தில் நடிகர் மோகன்லால் நாயகனாக நடித்து இருந்தார். படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து இந்தப் படத்தில் நடிகை மாளவிகா மோகனனின் நடிப்பு ரசிகர்களிடையே பாரட்டைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகை மாளவிகா மோகனன் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
அதன்படி இவர் தற்போது நடிகர் பிரபாஸ் உடன் இணைந்து தி ராஜா சாப் என்ற தெலுங்கு படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குநர் மாருது இயக்கத்தில் ரொமாண்டிக் ஹாரர் காமெடி படமாக உருவாகியுள்ள இந்தப் படம் வருகின்ற 9-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் தமிழில் நடிகை மாளவிகா மோகனன் நடிகர் கார்த்தி உடன் இணைந்து சர்தார் 2 படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து பிசியான நடிகையாக வலம் வரும் மாளவிகா மோகனன் அடுத்ததாக சிரஞ்சீவியின் 158-வது படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வந்தது.
சிரஞ்சீவியின் 158-வது படத்தில் நான் நடிக்கவில்லை:
அதன்படி நடிகை மாளவிகா மோகனன் இதுகுறித்து எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, வணக்கம் நண்பர்களே பாபி சார் இயக்கும் மெகா 158 படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதாக இணையத்தில் நிறைய செய்திகள் பரவி வருகின்றன. எனது தொழில் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் பிரபல நடிகர் சிரஞ்சீவி சாருடன் இணைந்து நடிக்க விரும்புகிறேன், ஆனால் இந்த படத்தில் நான் இல்லை என்பதையும், அந்த செய்திகள் தவறானவை என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன் என்று அந்தப் பதிவில் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read… தேரே இஸ்க் மெய்ன் படம் குறித்து ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட போஸ்ட்!
நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Hi guys
So there are a lot of reports circulating online that I’m a part of Mega 158 helmed by Bobby sir.
While I would love to share the screen with the iconic Chiranjeevi sir at some point in my career, but just wanted to clarify that I’m not a part of this project and the…— Malavika Mohanan (@MalavikaM_) October 29, 2025
Also Read… 9 ஆண்டுகளைக் கடந்தது கார்த்தியின் காஸ்மோரா படம் – கொண்டாடும் படக்குழு



