Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Sardar 2 : கார்த்தியின் ‘சர்தார் 2’ பட ஷூட்டிங் ஓவர்.. புகைப்படத்தைப் பகிர்ந்த மாளவிகா மோகனன்!

Sardar 2 Shooting Wrap : நடிகர் கார்த்தியின் நடிப்பில் மிகப் பிரம்மாண்டமான ஆக்ஷன் திரைப்படமாக உருவாகிவருவது சர்தார் 2. இப்படத்தை இயக்குநர் பி.எஸ் மித்ரன் இயக்கியுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், கார்த்தி மற்றும் மாளவிகா மோகனன் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளனர்.

Sardar 2 : கார்த்தியின் ‘சர்தார் 2’ பட ஷூட்டிங் ஓவர்.. புகைப்படத்தைப் பகிர்ந்த மாளவிகா மோகனன்!
சர்தார் 2 படப்பிடிப்பு முடிந்ததுImage Source: X
barath-murugan
Barath Murugan | Published: 09 Jun 2025 17:33 PM

கோலிவுட் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் கார்த்தி (Karthi). இவரின் நடிப்பில் தமிழில் பல படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகி அனைவரின் மனதைக் கவர்ந்த திரைப்படம் மெய்யழகன் (Meiyazhagan) . இந்த படத்தில் கார்த்தியுடன் நடிகர்கள் அரவிந்த் சாமி, ஸ்ரீ திவ்யா இணைந்து நடித்திருந்தனர். கடந்த 2024ம் ஆண்டு வெளியான இப்படம் வசூல் ரீதியாக வெற்றியைப் பெறாவிட்டாலும், விமர்சனங்கள் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த இடத்தை தொடர்ந்து கார்த்தி அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமானார். அதில் கடந்த 2022 ஆண்டு வெளியான சர்தார் 1  (Sardar 1) படத்தின் தொடர்ச்சியாக உருவாகியிருக்கும் படம்தான் சர்தார் 2 (Sardar 2).

இந்த படத்தை பாகம் 1 படத்தை இயக்கிய அதே இயக்குநர் பிஎஸ் மித்ரன் (PS Mithran) இயக்கியுள்ளார். இந்த படமானது அதிரடி ஆக்ஷ்ன் கதைக்களத்துடன், பாகம் 1ன் தொடர்ச்சி கதைக்களத்துடன் உருவாகியிருக்கிறது. இப்படத்தில் முன்னணி நாயகியாக மாளவிகா மோகனன் (Malavika Mohanan) நடித்திருக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2025, ஜூன் 7ம் தேதியில் நிறைவடைந்த நிலையில், சர்தார் 2 படப்பிடிப்பில் எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். மேலும் நடிகர் கார்த்தியும் இது தொடர்பான புகைப்படங்களைப் பகிர்ந்திருக்கிறார்.

நடிகை மாளவிகா மோகனனின் எக்ஸ் தள பதிவு :

சர்தார் 2 படத்தின் கதைகளம் :

கார்த்திக் இந்த படத்தில் அப்பா மற்றும் மகன் என ரெட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். பாகம் 1ல் தண்ணீர் வியாபாரம் தொடர்பாக கதைக்களம் அமைக்கப்பட்டிருந்த நிலையில் பாகம் 2ல் தண்ணீர் ஒப்பந்தத்திற்கும் அதன் பிரச்சனைக்கும் யார் காரணம் என்பதாக இருக்கும். இப்படத்தில் முக்கிய வில்லனாக நடிகர் எஸ்.ஜே சூர்யா நடித்துள்ளார். இது குறித்து நடிகர் கார்த்தி சர்தார் 2 வெளியீட்டு விழாவில் பகிர்ந்திருந்தார். இந்த படமானது பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியிருக்கிறது என்று கார்த்தி தெரிவித்திருந்தார்.

நடிகர் கார்த்தி வெளியிட்ட எக்ஸ் பதிவு :

இந்த சர்தார் 2 படத்தைப் பிரபல தயாரிப்பு நிறுவனங்களான பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஐவிஒய் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையமைத்து வருகிறார். இவரின் இசையமைப்பில் இப்படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் தயாராகி வருகிறது. இப்படமானது இந்த 2025ம் ஆண்டு தீபாவளி அல்லது 2026ம் ஆண்டு வெளியிடப் படக்குழு யோசித்து வருகிறதாம். இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் ஆர்வம் இருந்து வரும் நிலையில், பாகம் 1ன் வெற்றியைத் தொடர்ந்து, சர்தார் 2 படமும் வெற்றி பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.