Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தனுஷின் குபேரா படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்

Kubera Movie Trailer Update: கோலிவுட் சினிமாவில் ரசிகர்கள் அடுத்து ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் நடிகர் தனுஷின் குபேரா படம் தான். இந்தப் படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகுன் என்ற ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தனுஷின் குபேரா படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்
குபேரா Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 09 Jun 2025 14:10 PM

நடிகர் தனுஷ் (Actor Dhanush) நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் குபேரா. தெலுங்கு திரையுலக இயக்குநர் சேகர் கம்முலாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் வருகின்ற ஜூன் மாதம் 20-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்து உள்ளார். மேலும் நாகர்ஜுனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இந்த குபேரா படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு சென்னையில் நடைப்பெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு பேசியது இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் பேசியது:

இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் பேசிய பேச்சு ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றது. தனது வாழ்க்கையில் தற்போது எல்லாம் இருந்தாலும் ஒரு காலத்தில் ஒரு வேளை சாப்பாட்டிற்கே தான் கஷ்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் அப்போதும் தான் மகிழ்ச்சியாக இருந்தாகவும் இப்பவும் தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய தனுஷ் மகிழ்ச்சி என்பது நமது தேர்வு தான். எந்த விசயத்தை செய்தாலும் அதில் நமது மகிழ்ச்சியை நாம் தான் தேர்வு செய்ய வேண்டும் என்றும் அதை நமக்குள்ளே தான் தேட வேண்டும் என்றும் தெரிவித்தார். நமது வாழ்க்கையில் நிம்மதியும் சந்தோஷமும்தான் முக்கியம் என்றும் அவர் தனது ரசிகர்களுக்கு அறிவுறை கூறினார்.

குபேரா படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

தனுஷின் குபேரா படத்தின் ட்ரெய்லர் அப்டேட்:

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள குபேரா படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது படத்தின் ட்ரெய்லர் வெளியீடு குறித்த அப்டேட் ஒன்று சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி படம் ஜூன் 20-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லர் வருகின்ற 13-ம் தேதி ஜூன் மாதம் 2025-ம் ஆண்டு வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று சூர்யா 46 படத்தின் ஷூட்டிங் தொடங்கியது
இன்று சூர்யா 46 படத்தின் ஷூட்டிங் தொடங்கியது...
கார்த்தி - மாளவிகா மோகனனின் 'சர்தார் 2' ஷூட்டிங் நிறைவு!
கார்த்தி - மாளவிகா மோகனனின் 'சர்தார் 2' ஷூட்டிங் நிறைவு!...
சென்னை டூ சண்டிகர்! முக்கிய போட்டியின் இடத்தை மாற்றிய BCCI..!
சென்னை டூ சண்டிகர்! முக்கிய போட்டியின் இடத்தை மாற்றிய BCCI..!...
உங்களிடம் பல பிஎஃப் கணக்குகள் இருக்கா ? எப்படி இணைப்பது ?
உங்களிடம் பல பிஎஃப் கணக்குகள் இருக்கா ? எப்படி இணைப்பது ?...
விஜயை தொடர்ந்து இயக்குநர் எச்.வினோத் இயக்க உள்ளது யாரை தெரியுமா?
விஜயை தொடர்ந்து இயக்குநர் எச்.வினோத் இயக்க உள்ளது யாரை தெரியுமா?...
திராவிட மாடல் அரசு பெண்களுக்கு துணை நிற்கும் - அமைச்சர் ரகுபதி
திராவிட மாடல் அரசு பெண்களுக்கு துணை நிற்கும் - அமைச்சர் ரகுபதி...
மக்கள் நிச்சயம் துருவ நட்சத்திரம் படத்தை விரும்புவார்கள்- சிம்ரன்
மக்கள் நிச்சயம் துருவ நட்சத்திரம் படத்தை விரும்புவார்கள்- சிம்ரன்...
பெண்களுக்கான பெர்சனல் லோன் 2025: தேர்ந்தெடுப்பது எப்படி?
பெண்களுக்கான பெர்சனல் லோன் 2025: தேர்ந்தெடுப்பது எப்படி?...
தமிழ்நாட்டில் ஒரு கங்கை நதி.. இந்த கோயில் பற்றி தெரியுமா?
தமிழ்நாட்டில் ஒரு கங்கை நதி.. இந்த கோயில் பற்றி தெரியுமா?...
அடுத்த 7 நாட்கள் அடைமழை ரெடி.. எங்கெங்கு தெரியுமா..?
அடுத்த 7 நாட்கள் அடைமழை ரெடி.. எங்கெங்கு தெரியுமா..?...
வைரலாகும் நடிகை பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டா பதிவு!
வைரலாகும் நடிகை பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டா பதிவு!...