Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கமல் ஹாசன் நடிப்பில் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய காமெடிப் படங்கள்

Actor Kamal Haasan: உலக நாயகன் என்று ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருபவர் நடிகர் கமல் ஹாசன். இவர் தமிழ் சினிமா மட்டும் இன்றி பான் இந்திய சினிமாவிலும் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இந்த நிலையில் இவரது நடிப்பில் காமெடியை மையமாக வைத்து வெளியான படங்கள் குறித்து தற்போது பார்கலாம்.

கமல் ஹாசன் நடிப்பில் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய காமெடிப் படங்கள்
கமல் ஹாசன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 08 Jun 2025 22:01 PM

பஞ்சதந்திரம்: நடிகர் கமல் ஹாசன் (Actor Kamal Haasan) நாயகனாக நடித்து கடந்த 2002-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பஞ்சதந்திரம். இந்தப் படத்தை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் கமல் ஹாசன் உடன் இணைந்து நடிகர்கள் கமல்ஹாசன், சிம்ரன், ஜெயராம், ரமேஷ் அரவிந்த், யூகி சேது, ஸ்ரீமன், ரம்யா கிருஷ்ணன், ஊர்வசி, சங்கவி, ஐசுவரியா, வித்தியா, நாகேஷ் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இன்றி இந்தப் படத்தை இயக்கியதுடன் கே.எஸ்.ரவிக்குமார் ஒரு கேமியியோ ரோலில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தேவா இசையமைத்து இருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அவ்வை சண்முகி: நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் கடந்த 1996-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் அவ்வை சண்முகி. இந்தப் படத்தை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு கிரேசி மோகன் திரைக்கதை எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் நடிகர் கமல் ஹாசன் உடன் இணைந்து நடிகர்கள் மீனா, ஜெமினி கணேசன், நாகேஷ், மணிவண்ணன், நாசர், டெல்லி கணேஷ், ஹிரா, எஸ். பி. பாலசுப்பிரமணியம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தேவா இசையமைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்: நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி 2004-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். இந்தப் படத்தை இயக்குநர் சரண் இயக்கி இருந்தார். இந்தியில் வெளியான முன்னாபாய் படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்தப் படம் ஆகும்.

மேலும் இந்தப் படத்தில் நடிகர் கமல் ஹாசன் உடன் இணைந்து நடிகர்கள் சினேகா, பிரபு, பிரகாஷ் ராஜ், கருணாஸ், கிரேசி மோகன், நாகேஷ், மாளவிகா மற்றும் நிதின் சத்யா என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையமைத்து இருந்தார்.

ரீமேக் படமாக இருந்தாலும் இந்தப் படத்தை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு எடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.