Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நடிகர் ரியோ ராஜின் ஆண் பாவம் பொல்லாதது படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ

தொலைக்காட்சியில் விஜேவாக வேலை செய்யும் போதே தனக்கு என ரசிகர்களிடையே ஒரு வரவேற்பை பெற்றவர். அதனைத் தொடர்ந்து சின்னத்திரையில் நாயகனாக நடிக்கத் தொடங்கி தமிழ் சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கியுள்ளார். இந்த நிலையில் இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் ரியோ ராஜின் ஆண் பாவம் பொல்லாதது படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ
ஆண் பாவம் பொல்லாததுImage Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 08 Jun 2025 18:05 PM

விஜய் தொலைக்காட்சியில் வெளியான கனா காணும் காலங்கள் சீரியலில் நடிகராக அறிமுகம் ஆனவர் ரியோ ராஜ் (Actor Rio Raj). அதனைத் தொடர்ந்து வாய்ப்புக்காக போராடித் திரிந்தவர் பின்னர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியகளை தொகுத்து வழங்கி வந்தார். அந்த வகையில் தமிழ் தொலைக்காட்சியில் இசை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ரியோ ராஜ் அப்போதே தமிழக மக்களிடையே வரவேற்பைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் தமிழகத்தில் உள்ள மூலை முடுக்கு எங்கும் பிரபலம் ஆனார். அதனைத் தொடர்ந்து கோலிவுட் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். பின்பு 2019-ம் ஆண்டு இயக்குநர் கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் வெளியான நெச்சமுண்டு நேர்மையுண்ட எனற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார்.

இந்த நிலையில் நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ஆண்பாவம் பொல்லாதது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கி வருகிறார். முன்னதாக நடிகர் ரியோ ராஜ் உடன் இணைந்து ஜோ படத்தில் நடித்த நடிகை மாளவிகா மனோஜ் நாயகியாக நடித்து உள்ளார்.

ஆண் பாவம் பொல்லாதது படத்தின் ஃபர்ஸ் சிங்கிள்:

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சித்து குமார் இசையமைத்துள்ளார். மேலும் இந்தப் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் இந்தப் படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு குறித்து படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தப் படத்திலிருந்து ஜோடிப் பொருத்தம் என்ற பாடல் வருகின்ற ஜூன் மாதம் 9-ம் தேதி 2025-ம் ஆண்டு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

முன்னதாக நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ஸ்வீட் ஹார்ட். மிகவும் வித்யாசமான கதைக்களத்தில் உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும் நடிகர் ரியோ ராஜிற்கு இன்னும் பெரிய அளவிற்கு ஒரு படம் வெற்றியைக் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஓடும் ரயிலில் தொங்கியபடி செல்ஃபி எடுத்த நபருக்கு நேர்ந்த துயரம்!
ஓடும் ரயிலில் தொங்கியபடி செல்ஃபி எடுத்த நபருக்கு நேர்ந்த துயரம்!...
500 ரூபாய் நோட்டு கைவிடப்படுவதாக உலா வரும் தகவல் பொய்யானது - அரசு
500 ரூபாய் நோட்டு கைவிடப்படுவதாக உலா வரும் தகவல் பொய்யானது - அரசு...
முழங்கால்களில் வலி இருக்கிறதா? இந்த நோயின் அறிகுறியாக இருக்கலாம்!
முழங்கால்களில் வலி இருக்கிறதா? இந்த நோயின் அறிகுறியாக இருக்கலாம்!...
கமல் நடிப்பில் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய காமெடிப் படங்கள்
கமல் நடிப்பில் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய காமெடிப் படங்கள்...
கூகுள் குரோம் பயன்படுத்துகிறீர்களா ? காத்திருக்கும் ஆபத்து
கூகுள் குரோம் பயன்படுத்துகிறீர்களா ? காத்திருக்கும் ஆபத்து...
திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது, ஆனால்.. அமித் ஷா ட்விஸ்ட்!
திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது, ஆனால்.. அமித் ஷா ட்விஸ்ட்!...
இதெல்லாம் உலகில் ஒரே மனிதன் நம் ஏ.ஆர்.ரகுமானால் மட்டுமே முடியும்
இதெல்லாம் உலகில் ஒரே மனிதன் நம் ஏ.ஆர்.ரகுமானால் மட்டுமே முடியும்...
பிரமாண்டமாக நடந்த ரிங்கு சிங் - பிரியா சரோஜ் நிச்சயதார்த்தம்!
பிரமாண்டமாக நடந்த ரிங்கு சிங் - பிரியா சரோஜ் நிச்சயதார்த்தம்!...
ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு: ஹோம் லோனில் ஏற்படப்போகும் மாற்றம்?
ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு: ஹோம் லோனில் ஏற்படப்போகும் மாற்றம்?...
3-வது தலைமுறையாக இசைத் துறையில் இணைந்த இளையராஜா பேரன்!
3-வது தலைமுறையாக இசைத் துறையில் இணைந்த இளையராஜா பேரன்!...
இந்தியாவில் 6000 ஐ கடந்த கொரோனா.. அதிகரிக்கும் உயிரிழப்புகள்!
இந்தியாவில் 6000 ஐ கடந்த கொரோனா.. அதிகரிக்கும் உயிரிழப்புகள்!...