Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மெட்ராஸ் மேட்னி படத்தை பாராட்டிய இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்!

Madras Matinee Movie: தமிழ் சினிமாவில் சமீப காலமாக வெளியாகும் சிறிய பட்ஜெட் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. முன்னதாக டூரிஸ்ட் ஃபேமிலி படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது மெட்ராஸ் மேட்னி படத்தை ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்தி வருகின்றனர்.

மெட்ராஸ் மேட்னி படத்தை பாராட்டிய இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்!
கார்த்திக் சுப்பராஜ்Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 08 Jun 2025 16:53 PM

கோலிவுட் சினிமாவில் (Kollywood Cinema) கடந்த சில நாட்களாகவே சிறிய பட்ஜெட் படங்களாக இருந்தாலும் அந்தப் படத்தின் கதை நன்றாக இருக்கிறது என்றால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் முன்னதாக மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு ரெட்ரோ படத்துடன் போட்டிப்போட்டது டூரிஸ்ட் ஃபேமிலி. ரெட்ரோ மாதிரியான பெரிய பட்ஜெட் படத்துடன் டூரிஸ்ட் ஃபேமிலி மாதிரியான சிறிய பட்ஜெட் படம் போட்டி போட்டு வெற்றியடைய காரணம் படத்தின் கதை தான். அறிமுக இயக்குநராக இருந்தாலும் அபிஷன் ஜீவிந்தின் திரைக்கதை இயக்கத்தை கொண்டாடித் தீர்த்தனர் ரசிகர்கள். ரசிகர்கள் மட்டும் இன்றி பிரபலங்கள் பலரும் இந்தப் படத்தைப் பாராட்டித் தீர்த்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தைத் தொடர்ந்து இந்த வரிசையில் தற்போது வெளியான மெட்ராஸ் மேட்னி படம் ரசிகர்களிடையும் பிரபலங்கள் இடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மெட்ராஸ் மேட்னி படத்தைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்:

அதன்படி இயக்குநர் கார்த்திக் சுப்பராஸ் மெட்ராஸ் மேட்னி படக்குழுவை நேரில் அழைத்து தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது,  மெட்ராஸ் மேட்னி படம் மிகவும் இதயத்தை வருடும் மற்றும் அழகான கதையாக இருக்கிறது.

நாயகன் காளி வெங்கட்டின் அற்புதமான நடிப்புடன் இயக்குனர் கார்த்திகேயனின் அற்புதமான அறிமுகப் படம் மட்டும் இன்றி படத்தில் நடித்த ஒட்டுமொத்த நடிகர்கள் மற்றும் குழுவினரின் சிறந்த படைப்பாக இந்தப் படம் இருந்தது. தயவுசெய்து இந்த அருமையான படத்தை திரையரங்குகளில் பாருங்கள். படக்குழுவிற்கு வாழ்த்துகள் என்று அந்த எக்ஸ் தள பக்கத்தில் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

இந்த மெட்ராஸ் மேட்னி படத்தில் நடிகர் காளி வெங்கட் நாயகனாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் சத்யராஜ், ரோஷ்னி ஹரிப்ரியன், ஷெல்லி, விஷ்வா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மிடில் கிளாஸ் ஃபேமிலியின் கதையை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

கூகுள் குரோம் பயன்படுத்துகிறீர்களா ? காத்திருக்கும் ஆபத்து
கூகுள் குரோம் பயன்படுத்துகிறீர்களா ? காத்திருக்கும் ஆபத்து...
திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது, ஆனால்.. அமித் ஷா ட்விஸ்ட்!
திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது, ஆனால்.. அமித் ஷா ட்விஸ்ட்!...
இதெல்லாம் உலகில் ஒரே மனிதன் நம் ஏ.ஆர்.ரகுமானால் மட்டுமே முடியும்
இதெல்லாம் உலகில் ஒரே மனிதன் நம் ஏ.ஆர்.ரகுமானால் மட்டுமே முடியும்...
பிரமாண்டமாக நடந்த ரிங்கு சிங் - பிரியா சரோஜ் நிச்சயதார்த்தம்!
பிரமாண்டமாக நடந்த ரிங்கு சிங் - பிரியா சரோஜ் நிச்சயதார்த்தம்!...
ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு: ஹோம் லோனில் ஏற்படப்போகும் மாற்றம்?
ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு: ஹோம் லோனில் ஏற்படப்போகும் மாற்றம்?...
3-வது தலைமுறையாக இசைத் துறையில் இணைந்த இளையராஜா பேரன்!
3-வது தலைமுறையாக இசைத் துறையில் இணைந்த இளையராஜா பேரன்!...
இந்தியாவில் 6000 ஐ கடந்த கொரோனா.. அதிகரிக்கும் உயிரிழப்புகள்!
இந்தியாவில் 6000 ஐ கடந்த கொரோனா.. அதிகரிக்கும் உயிரிழப்புகள்!...
சிவகார்த்திகேயனுடன் இணையும் வைரல் நடிகை? இணையத்தில் கசிந்த தகவல்
சிவகார்த்திகேயனுடன் இணையும் வைரல் நடிகை? இணையத்தில் கசிந்த தகவல்...
டெல்லியைப் போல தமிழகத்திலும் 2026ல் பாஜக ஆட்சி - அமித்ஷா
டெல்லியைப் போல தமிழகத்திலும் 2026ல் பாஜக ஆட்சி - அமித்ஷா...
ஆண் பாவம் பொல்லாதது படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ
ஆண் பாவம் பொல்லாதது படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ...
கோலி, ரோஹித்துக்கு ஃபேர்வெல்.. கிரிக்கெட் ஆஸ்திரேலியா திட்டம்!
கோலி, ரோஹித்துக்கு ஃபேர்வெல்.. கிரிக்கெட் ஆஸ்திரேலியா திட்டம்!...