Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நடிகர் ஆர்யாவின் 36-வது படத்தின் அப்டேட்டை கொடுத்த படக்குழு – உற்சாகத்தில் ரசிகர்கள்

Actor Arya New Movie Update: தமிழ் சினிமாவில் எந்தவித கதாப்பாத்திரமாக இருந்தாலும் இறங்கி சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் நடிகர் ஆர்யா. 2005-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆன ஆர்யா 2025-ம் ஆண்டு 20 ஆண்டுகளில் முன்னணி நடிகராக மாறியுள்ளார்.

நடிகர் ஆர்யாவின் 36-வது படத்தின் அப்டேட்டை கொடுத்த படக்குழு – உற்சாகத்தில் ரசிகர்கள்
நடிகர் ஆர்யாImage Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 08 Jun 2025 11:52 AM

நடிகர் ஆர்யாவின் நடிப்பில் உருவாகவுள்ள 36-வது படத்தின் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் ஆர்யா (Actor Arya) இறுதியாக நடித்தப் படம் காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம் படம் 2023-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை இயக்குநர் முத்தையா இயக்கி இருந்த நிலையில் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து 2 வருடங்களாக ஆர்யா நடிப்பில் படம் வெளியாகாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது நடிகர் ஆர்யா இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவ் அரும் வேட்டுவம் படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக மிஸ்டர் எக்ஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் முன்னதாக இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பாட்ட பரம்பரை படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ஆர்யாவின் 36-வது படத்தின் அப்டேட்:

இந்த நிலையில் நடிகர் ஆர்யாவின் நடிப்பில் உருவாக உள்ள 36-வது படம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகர் ஆர்யாவின் 36-வது படத்தை இயக்குநர் ஜியென் கிருஷ்ணமூர்த்தி இயக்க உள்ளார். இவர் முன்னதாக ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியான ரன் பேபி ரன் படத்தை இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் படத்தை தயாரிப்பு நிறுவனம் மினி ஸ்டூடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் வினோத் குமார் தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படத்தின் முதல் பார்வை மற்றும் அறிவிப்பு வீடியோ வெளியாகும் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி படத்தின் முதல் பார்வை மற்றும் அறிவிப்பு வீடியோ வருகின்ற ஜூன் மாதம் 9-ம் தேதி 2025-ம் ஆண்டு வெளியாகும் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆர்யாவின் 36-வது படத்தின் அறிவிப்பை வெளியிட்ட படக்குழு:

ஆர்யாவின் நடிப்பில் ஹிட் அடித்தப் படங்கள்:

கடந்த 2005-ம் ஆண்டு வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆன ஆர்யா அதனைத் தொடர்ந்து, உள்ளம் கேட்குமே, கலாப காதலன், பட்டியல், நான் கடவுள், சர்வம், மதராசப் பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், அவன் இவன், வேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், பெங்களூரு நாட்கள், கடம்பன், மகாமுனி, டெடி, சார்பாட்ட பரம்பரை என பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

18 வருடங்களில் ரூ.1.18 கோடியாக வளரக் கூடிய சிறிய முதலீடு!
18 வருடங்களில் ரூ.1.18 கோடியாக வளரக் கூடிய சிறிய முதலீடு!...
சிம்மத்தில் இணையும் கேது - செவ்வாய்.. இந்த 5 ராசிகள் கவனமா இருங்க
சிம்மத்தில் இணையும் கேது - செவ்வாய்.. இந்த 5 ராசிகள் கவனமா இருங்க...
வாடிவாசல் படம் குறித்து தயாரிப்பாளர் கொடுத்த விளக்கம் விளக்கம்
வாடிவாசல் படம் குறித்து தயாரிப்பாளர் கொடுத்த விளக்கம் விளக்கம்...
ஷமியின் இந்த பந்தால் 3 மாதம் பேட்டிங் செய்யவில்லை - ஸ்டீவ் ஸ்மித்
ஷமியின் இந்த பந்தால் 3 மாதம் பேட்டிங் செய்யவில்லை - ஸ்டீவ் ஸ்மித்...
நீரிழிவு நோய் இருந்தால் நினைவாற்றல் இழப்பு ஏற்படுமா?
நீரிழிவு நோய் இருந்தால் நினைவாற்றல் இழப்பு ஏற்படுமா?...
உடலையும் மனதையும் உற்சாகப்படுத்தும் 7 காலைப் பழக்கங்கள்...!
உடலையும் மனதையும் உற்சாகப்படுத்தும் 7 காலைப் பழக்கங்கள்...!...
கேவலமாக திட்டிய 2 பேர்.. சினிமாவே வேண்டாம் என போன பிரகதி!
கேவலமாக திட்டிய 2 பேர்.. சினிமாவே வேண்டாம் என போன பிரகதி!...
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அமித்ஷா!
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அமித்ஷா!...
பாகுபலி படத்தின் 2 பாகங்களையும் இணைந்து ஒரே படமாக வெளியிட திட்டம்
பாகுபலி படத்தின் 2 பாகங்களையும் இணைந்து ஒரே படமாக வெளியிட திட்டம்...
மாயமான வேடசந்தூர் மருத்துவர், காரில் சடலமாக மீட்பு..
மாயமான வேடசந்தூர் மருத்துவர், காரில் சடலமாக மீட்பு.....
குன்றத்தூர் முருகனுக்கு இப்படி ஒரு சிறப்பா? - நீங்களே பாருங்க!
குன்றத்தூர் முருகனுக்கு இப்படி ஒரு சிறப்பா? - நீங்களே பாருங்க!...