Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஐஸ்வர்யா லட்சுமியுடைய நேர்மை, நல்ல மனசு அவரை இன்னும் உயரத்திற்கு கொண்டு செல்லும் – புகழ்ந்து தள்ளிய நடிகர் சூரி

Actor Soori: நடிகர்கள் சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இருவரும் இணைந்து நடித்தப் படம் மாமன். இந்தப் படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தில் தன்னுடன் நடித்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி குறித்து நடிகர் சூரி வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஐஸ்வர்யா லட்சுமியுடைய நேர்மை, நல்ல மனசு அவரை இன்னும் உயரத்திற்கு கொண்டு செல்லும் – புகழ்ந்து தள்ளிய நடிகர் சூரி
ஐஸ்வர்யா லட்சுமி, சூரிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 06 Jun 2025 19:00 PM

நடிகர் சூரி (Actor Soori) நாயகனாக நடித்து சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் மாமன். இந்தப் படம் கடந்த மே மாதம் 16-ம் தேதி 2025-ம் ஆண்டு திரயரங்குகளில் வெளியானது. இதில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாக நடித்து இருந்தார். இந்த நிலையில் மாமன் படத்தில் தன்னுடன் நடித்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி குறித்து நடிகர் சூரி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது ஐஸ்வர்யா லட்சுமி இந்த படத்துக்கு பெரிய ஆதரவாக இருந்தார். உண்மையில் டாக்டரா இருப்பதால, திரையில் டாக்டர் கதாபாத்திரத்தை நம்பிக்கையுடனும், இயல்பான முறையிலும் சிறப்பாக செய்திருக்கிறார். படத்தில முக்கியமான சில காட்சிகளை முழுக்க அவர் தாங்கி சென்றார்.

அவருடைய நேர்மை மற்றும் நல்ல மனசு அவரை இன்னும் உயரம் நோக்கி கொண்டு செல்லும். படத்தைப் பிரமோட் செய்யவும், முழு முயற்சியுடன் ஈடுபட்டதுக்கும் ஐஸ்வர்யா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி என்று நடிகர் சூரி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகர் சூரி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

சூரியின் மாமன் படத்தின் கதை என்ன?

நடிகர் சூரி நாயகனாக நடிக்கத் தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து மிகவும் சீரியசான கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த நிலையில் மாமன் படத்தின் மூலம் அதற்கு ஒரு ப்ரேக் கொடுத்துள்ளார். முழுக்க முழுக்க காமெடி மற்றும் செண்டிமெண்டை மையமாக வைத்து இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

தாய் மாமன் மற்றும் மருகனின் பாசத்தை மையமாக வைத்து உருவான இந்தப் படத்தில் இந்தப் பாசத்தால் ஏற்படும் மகிழ்ச்சி, துன்பம் என அனைத்தையும் இந்தப் படத்தில் காட்டியுள்ளனர். குடும்ப உறவுகளில் ஏற்படும் சிக்கள்கள் குறித்து இந்தப் படம் வெளிப்படையாக பேசியுள்ளது.

இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலர் வாழ்த்தி வரும் நிலையில் சிலர் படத்தில் உள்ள சில சிக்கள்களையும் விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது. படம் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படம் விரைவில் ஜீ 5 ஓடிடியில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.