AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தக் லைஃப் படத்தில் ரசிகர்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றம்… என்ன ஆச்சு தெரியுமா?

Muththa Mazhai Song: நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த படம் தக் லைஃப், இந்தப் படத்திற்கு ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்திருந்தது போல படத்தில் முத்த மழை பாடலைப் பார்க்கவும் ரசிகர்கள் ஆவளாக இருந்தனர். ஆனால் தற்போது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்ததாக வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

தக் லைஃப் படத்தில் ரசிகர்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றம்… என்ன ஆச்சு தெரியுமா?
தக் லைஃப்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 06 Jun 2025 15:33 PM IST

தக் லைஃப் படம் கமல் ஹாசனின் (Kamal Haasan) நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றாலும் படத்தில் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தது குறித்து சமூக வலைதளத்தில் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். படம் வெளியீட்டிற்கு முன்னதாக ரசிகர்கள் பெரிதும் கொண்டாடிய முத்த மழை பாடல் படத்தில் இடம் பெறவில்லை என்று வருத்தம் தெரிவித்து வருகின்றனர். இந்த தக் லைஃப் படத்தில் முத்த மழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது தீ கலந்துகொள்ள முடியாத காரணத்தால் பாடகி சின்மயி முத்த மழை பாடலை பாடினார். இதில் யாருடைய குரல் சிறந்தது என்று ரசிகர்கள் சமூக வலைதளத்தில் போட்டி போட்டு வந்த நிலையில் படத்திலேயே பாடல் வராதது அவர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

முத்த மழை பாடலை சின்மயி குரலில் வெளியிட்ட படக்குழு:

இசை வெளியீட்டு விழாவில் வைரலான முத்த மழை பாடல்:

தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மே மாதம் 24-ம் தேதி 2025-ம் ஆண்டு நடைப்பெற்றது. அந்த் விழாவில் பாடகி சின்மயி பாடிய முத்த மழை பாடல் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. மேலும் படத்தில் பாடகி தீ பாடியிருந்தார். இந்த இரண்டில் எது சிறந்தது என்று ரசிகர்கள் போட்டி போட்டு வந்த நிலையில் படத்தில் யார் பாடியதும் வராதது ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்தது.

ரசிகர்கள் பதிவிட்ட எக்ஸ் தள பதிவு:

ரசிகர்கள் பதிவிட்ட எக்ஸ் தள பதிவு:

ரசிகர்கள் பதிவிட்ட எக்ஸ் தள பதிவு:

 

Follow Us