Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இணையத்தில் கசிந்தது தக் லைஃப் படம்… அதிர்ச்சியில் படக்குழு!

Thug Life Movie: நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான படம் தக் லைஃப். இந்தப் படத்தில் நடிகர் சிலம்பரசனும் நாயகனாக நடித்து இருந்தார். படம் நேற்று திரையரங்குகளில் வெளியான நிலையில் படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இது படக்குழுவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இணையத்தில் கசிந்தது தக் லைஃப் படம்… அதிர்ச்சியில் படக்குழு!
தக் லைஃப்Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 06 Jun 2025 11:10 AM

இயக்குநர் மணிரத்னம் (Director Maniratnam) மற்றும் கமல் ஹாசன் (Actor Kamal Haasan) கூட்டணி 37 ஆண்டுகளுக்குப் பிறகு தக் லைஃப் படத்திற்காக கூட்டணி வைத்தது. இந்தப் படத்தில் அறிவிப்பு வெளியானதில் இருந்தே படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது. மேலும் இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்களின் பட்டியல் வெளியானபோதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்தப் படத்தில் நடிகர்கள் கமல் ஹாசன் மற்றும் சிலம்பரசன் உடன் இணைந்து நடிகைகள் அபிராமி, த்ரிஷா கிருஷ்ணன், சான்யா மல்கோத்ரா, ஐஸ்வர்யா லட்சுமி நடித்து உள்ளனர். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் அசோக் செல்வன், ஜோஜூ ஜார்ஜ், நாசர் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தில் பாடல்கள் அனைத்தும் படம் வெளியாகி முன்பே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

இணையத்தில் கசிந்த தக் லைஃப் படம்:

இந்த நிலையில் படம் நேற்று ஜூன் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இதனைத் தொடர்ந்து திரையரங்குகளில் தக் லைஃப் படம் வெளியான சில மணி நேரங்களுக்குப் பிறகு படத்தின் திருட்டு பதிப்புகள் பல்வேறு இணைய தளங்களில் வெளியாகியுள்ளது. இந்த ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படம் இணையத்தில் கசிந்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தக் லைஃப் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

தக் லைஃப் படத்திற்கு வரும் கலவையான விமர்சனம்:

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தக் லைஃப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் நேற்று திரையரங்குகளில் வெளியானது. கன்னட மொழி சர்ச்சை காரணமாக கர்நாடகா மாநிலத்தில் மட்டும் படம் திரையிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பெங்களூருவில் இருக்கும் கமல் ஹாசனின் ரசிகர்கள் ஓசூர் திரையரங்குகளுக்கு சென்று தக் லைஃப் படத்தை பார்த்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று படத்தைப் பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனத்தை தெரிவித்து உள்ளனர். அதன்படி படம் சிறப்பாக உள்ளது என்று சிலர் கூறியுள்ள நிலையில் சிலர் எதிர்பார்த்த அளவிற்கு படம் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் சிலர் நடிகர்களின் நடிப்பு சிறப்பாக இருந்தது ஆனால் திரைக்கதை வலுவாக இல்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜூன் 14 தான் கடைசி தேதி - அதற்குள் ஆதாரில் இத பண்ணிடுங்க!
ஜூன் 14 தான் கடைசி தேதி - அதற்குள் ஆதாரில் இத பண்ணிடுங்க!...
தன்னை காப்பாற்றிய ஜேசிபிக்கு நன்றி தெரிவித்த யானை - வைரல் வீடியோ
தன்னை காப்பாற்றிய ஜேசிபிக்கு நன்றி தெரிவித்த யானை - வைரல் வீடியோ...
நண்பனின் கேரக்டரை காப்பியடித்த சந்தானம்.. என்ன படம் தெரியுமா?
நண்பனின் கேரக்டரை காப்பியடித்த சந்தானம்.. என்ன படம் தெரியுமா?...
 நாளை வெளியாகிறது அட்லீ - அல்லு அர்ஜூன் படத்தின் புதிய அப்டேட்
 நாளை வெளியாகிறது அட்லீ - அல்லு அர்ஜூன் படத்தின் புதிய அப்டேட்...
ரயிலில் கிடைக்காமல் போன உதவி.. கிரிக்கெட் வீரர் மரணம்
ரயிலில் கிடைக்காமல் போன உதவி.. கிரிக்கெட் வீரர் மரணம்...
தக் லைஃப் படத்தைப் வெகுவாகப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்...
தக் லைஃப் படத்தைப் வெகுவாகப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்......
தெளிவான வீடியோ கால் பேச உதவும் வாட்ஸ்அப்பின் Low Light Mode!
தெளிவான வீடியோ கால் பேச உதவும் வாட்ஸ்அப்பின் Low Light Mode!...
திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம் நேரம் அறிவிப்பு!
திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம் நேரம் அறிவிப்பு!...
நடிகர் விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் எப்போது?
நடிகர் விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் எப்போது?...
ரெப்போ வட்டி குறைப்பை தொடர்ந்து FD-களின் வட்டியை குறைத்த வங்கிகள்
ரெப்போ வட்டி குறைப்பை தொடர்ந்து FD-களின் வட்டியை குறைத்த வங்கிகள்...
வாசற்படிக்கே வந்த ஆபத்து.. மத்திய அரசை சாடிய முதல்வர் ஸ்டாலின்!
வாசற்படிக்கே வந்த ஆபத்து.. மத்திய அரசை சாடிய முதல்வர் ஸ்டாலின்!...