Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தக் லைஃப் படத்தில் வேலை செய்த குஷ்புவின் மகள்… நெகிழ்ச்சிப் பதிவு!

Thug Life: நடிகரும் இயக்குநருமான சுந்தர் சி மற்றும் நடிகை குஷ்புவின் இளைய மகள் அனந்திகா சுந்தர் இயக்குநர் மணிரத்தினத்திடம் உதவி இயக்குநராக தக் லைஃப் படத்தில் பணிபுரிந்துள்ளார். இதுகுறித்து நடிகை குஷ்பு அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தக் லைஃப் படத்தில் வேலை செய்த குஷ்புவின் மகள்… நெகிழ்ச்சிப் பதிவு!
குஷ்புவின் இளைய மகள் அனந்திதா சுந்தர்Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 05 Jun 2025 17:49 PM

தமிழ் சினிமாவில் கணவன் மற்றும் மனைவி என இருவருமே சினிமா துறையில் கொடிக்கட்டி பறக்கும் நிலையில் தற்போது தங்கள் குடும்பத்தில் இருந்து அடுத்த தலைமுறை சினிமாவிற்கு வந்ததை நடிகை குஷ்பு அறிவித்துள்ளார் (Actress Kushboo). நடிகை குஷ்பு இயக்குநரும் நடிகருமான சுந்திசியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் நடிகை குஷ்புவின் இளைய மகள் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள தக் லைஃப் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளார் என்று அவர் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி நடிகை குஷ்பு தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் தக் லைஃப் படத்தின் போது படக்குழுவின் பெயரில் தனது மகளின் பெயர் உதவி இயக்குநர் பட்டியலில் வந்ததை புகைப்படமாக பதிவிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மகள் குறித்து நெகிழ்ந்து பேசியுள்ள நடிகை குஷ்பு:

ஒரு பெற்றோராக, மணிரத்னம் படத்தில் அவரது சீடராக என் மகளின் பெயரைப் பார்ப்பது எனக்கு மிகுந்த பெருமையை அளிக்கிறது. கணுக்கால் எலும்பு முறிவு காரணமாக எனது மகளால்  தொடர்ந்து தக் லைஃப் படத்தில் பணியாற்ற முடிவில்லை. அவள் சிறிது காலம் உதவி இயக்குநராக வேலை செய்தாள். ஆனால், அவள் சேகரித்த அறிவும், மணி சாரிடமிருந்து அவள் கற்றுக்கொண்ட விஷயங்களும் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்.

அந்த அனுபவம் எனது மகளுக்கு உண்மையிலேயே செழுமையாக இருந்தது என்றே சொல்ல வேண்டும்.  மேலும் உங்கள் பெரிய மனதுக்கும், படத்தின் இறுதியில் எனது மகளின் பெயரையும் இணைத்து தவறவிடாமல் போட்டதற்கு நன்றி ஐயா என்று மணிரத்னத்திற்கு நன்றி தெரிவித்து இருந்தார்.

நடிகை குஷ்புவின் இன்ஸ்டா பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Kushboo Sundar (@khushsundar)

கமல் ஹாசன் நடிப்பில் வெளியான தக் லைஃப் படம்:

நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் இன்று ஜூன் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் தக் லைஃப். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் நடிகர் சிலம்பரசனும் நாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் இவர்களுடன் இணைந்து பலர் நடித்துள்ளனர்.

படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் பலரும் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தப் படம் தமிழ். தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

 நாளை வெளியாகிறது அட்லீ - அல்லு அர்ஜூன் படத்தின் புதிய அப்டேட்
 நாளை வெளியாகிறது அட்லீ - அல்லு அர்ஜூன் படத்தின் புதிய அப்டேட்...
ரயிலில் கிடைக்காமல் போன உதவி.. கிரிக்கெட் வீரர் மரணம்
ரயிலில் கிடைக்காமல் போன உதவி.. கிரிக்கெட் வீரர் மரணம்...
தக் லைஃப் படத்தைப் வெகுவாகப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்...
தக் லைஃப் படத்தைப் வெகுவாகப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்......
தெளிவான வீடியோ கால் பேச உதவும் வாட்ஸ்அப்பின் Low Light Mode!
தெளிவான வீடியோ கால் பேச உதவும் வாட்ஸ்அப்பின் Low Light Mode!...
திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம் நேரம் அறிவிப்பு!
திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம் நேரம் அறிவிப்பு!...
நடிகர் விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் எப்போது?
நடிகர் விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் எப்போது?...
ரெப்போ வட்டி குறைப்பை தொடர்ந்து FD-களின் வட்டியை குறைத்த வங்கிகள்
ரெப்போ வட்டி குறைப்பை தொடர்ந்து FD-களின் வட்டியை குறைத்த வங்கிகள்...
வாசற்படிக்கே வந்த ஆபத்து.. மத்திய அரசை சாடிய முதல்வர் ஸ்டாலின்!
வாசற்படிக்கே வந்த ஆபத்து.. மத்திய அரசை சாடிய முதல்வர் ஸ்டாலின்!...
வெள்ளை பிரட் சாப்பிட்டால் இந்த பிரச்னை வரும்.. இதை படிங்க!
வெள்ளை பிரட் சாப்பிட்டால் இந்த பிரச்னை வரும்.. இதை படிங்க!...
காஸாவில் 5 ரூபாய் பிஸ்கெட் விலை ரூ.2,342.. 500 மடங்கு அதிகம்..
காஸாவில் 5 ரூபாய் பிஸ்கெட் விலை ரூ.2,342.. 500 மடங்கு அதிகம்.....
ஐஸ்வர்யா லட்சுமியை புகழ்ந்து தள்ளிய நடிகர் சூரி
ஐஸ்வர்யா லட்சுமியை புகழ்ந்து தள்ளிய நடிகர் சூரி...