Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இயக்குநர் ராமின் பிரதிபலிப்புதான் கற்றது தமிழ் – நடிகர் ஜீவா!

Kattradhu Thamizh Movie: நடிகர் ஜீவா தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் இயக்குநர் ராம் இயக்கத்தில் நான் கடவுள் படத்தில் நடித்த அனுபவம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

இயக்குநர் ராமின் பிரதிபலிப்புதான் கற்றது தமிழ் – நடிகர் ஜீவா!
கற்றது தமிழ்
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 05 Jun 2025 15:30 PM

இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிகர் ஜீவா (Actor Jiiva) நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் கற்றது தமிழ். இந்தப் படத்தில் நடிகை அஞ்சலி நாயகியாக நடித்து இருந்தார். மேலும் அவர் தமிழில் நாயகியாக அறிமுகம் ஆன முதல் படம் ஆகும். இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் கருணாஸ், அழகம் பெருமாள், ஸ்ரீராம், வென்பா, கணேஷ் பாபு மற்றும் செந்தில் குமாரி என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்தினை சல்மாரா முகமது ஷெரீஃப் தயாரித்து இருந்த நிலையில் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். இவரது இசையில் பாடலாசிரியர் நா.முத்துகுமார் எழுதிய பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

கற்றது தமிழ் படத்தில் நடிக்க முதலில் மறுத்தேன்:

கற்றது தமிழ் படத்தின் கதையை இயக்குநர் ராம் முதல்ல என்கிட்ட சொல்லும்போதே நான் அவர்கிட்ட அண்ணா நா இந்த படத்தை பன்னலனா உட்ருங்க அண்ணா என்று கெஞ்சினேன். அவரும் ஏண்ணா ஏன் என்று திரும்ப என்னிடம் கேட்டார். இல்ல இது பயங்கற ஸ்டாங்கான கதையா இருக்கு. டெப்த்தா இருக்கு என்று கூறினேன்.

அதுகப்பறம் பாத்தா தயாரிப்பாளர் எல்லாம் ரெடி பன்னிட்டு கூட்டிட்டு வராரு. இந்தப் படதில நடிக்கிறத தவிர்ப்பதற்காக இஷ்டத்துக்கும் சம்பளம் சொல்றேன். அதுக்கும் ஒத்துக்கிட்டாங்க அய்யயோ நாம மாட்னோம் வேற வழியே இல்லனு அப்பறம் தான் நடிக்க ஆரம்பிச்சேன். ஆனா ஷூட்டிங் போறதுக்கு முன்னாடியே ரொம்ப கஷ்டப்பட போறேன்னு எனக்கு தெரிஞ்சுடுச்சு.

நடிகர் ஜீவா இன்ஸ்டா பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Jiiva (@actorjiiva)

அந்தப் படம் முடியுறதுக்கு உள்ள மொத்த படக்குழுவும் பயங்கராம கஷ்டப்பட்டோம். 6 நாள் அந்த சைக்கில் சீன் மட்டும் அந்த வெயில்ல எடுத்தோம் தாடி ஒட்டி தாடி இல்லாமனு ரொம்ப கஷ்டப்பட்டு அந்தப் படத்த எடுத்தோம். இந்தப் படம் முழுக்க முழுக்க இயக்குநர் ராமின் பிரதிபலிப்புதான் என்றும் ஜீவா அந்தப் பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

கற்றது தமிழ் படத்தின் கதை என்ன:

கற்றது தமிழ் படம் என்பது சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த ஜீவா பள்ளியில் விடுதியில் தங்கி படிக்கிறான். பள்ளி விடுமுறையில் கூட விடுதியிலேயே தங்கி இருக்கும் அவனை பள்ளியில் தமிழ் ஐயாவகவும் விடுதியில் வார்டனாக இருக்கும் அழகம் பெருமாள் பார்த்துக் கொள்கிறார். அவர் மீது ஏற்பட்ட பாசத்தின் காரணமாக பள்ளி முடித்துவிட்டு கல்லூரியில் தமிழை தேர்ந்தெடுத்து படிக்கிறார்.

உலகமயமாக்களின் ஆரம்பம்ப காலக்கட்டத்தில் ஐடி என்பதே சமூகத்தில் அதிக மதிக்கத்தக்க ஒன்றாக இருந்தது. அந்த நேரத்தில் இந்த மாதிரி தமிழ் படித்தவர்களை ஏளனமாக பார்க்கும் எண்ணமும் இருந்தது. இந்த நேரத்தில் ஒரு வேலையில் சேர்ந்து வாழ்க்கையை நடந்த விரும்புகிறான். அந்த நேரத்தில் தன்னுடன் சிறு வயதில் இருந்த தோழி அஞ்சலியை சந்திக்கிறார்.

அதன்பிறகு இவர்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட அது கைகூடியதா? வாழ்க்கையில் அடுத்தக்கட்டத்திற்உ ஜீவா முன்னேறினாரா என்பதே படத்தின் கதை.