Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்வீடியோ

போதப் பழக்கத்திற்கு எதிராக யார் பேசுவது என்று ஒரு நியாயம் வேண்டாமா? – வைரலாகும் நடிகர் விநாயகன் பதிவு!

Actor Vinayakan : தென்னிந்திய சினிமாவில் வில்லனாக மிரட்டி வரும் நடிகர் விநாயகன். இவர் சமீப காலமாக போதையில் பொது இடத்தில் தகறாரு செய்வதாக கூறி தொடர்ந்து காவல்துறையினரால் கைது செய்யப்படுவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் நடிகர் விநாயகன் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

போதப் பழக்கத்திற்கு எதிராக யார் பேசுவது என்று ஒரு நியாயம் வேண்டாமா? – வைரலாகும் நடிகர் விநாயகன் பதிவு!
விநாயகன்Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 05 Jun 2025 10:50 AM

நடிகர் விநாயகன் (Vinayakan) மலையாள சினிமாவில் 1995-ம் ஆண்டு நடிகராகம் அறிமுகம் ஆனார். சுமார் 30 வருடங்களாக சினிமாவில் நடிகராக இருக்கும் இவர் மலையாளம் மட்டும் இன்றி தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகளில் நடிகராக வலம் வருகிறார். குறிப்பாக மலையாளம் தவிற மற்ற மொழிகளில் இவர் வில்லன் கதாப்பாத்திரைத்தையே அதிகமாக ஏற்று நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் இவர் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான திமிறு என்ற படத்தின் மூலமாகவே நடிகராக தமிழ் ரசிகர்களிடையே அறிமுகம் ஆனார். தமிழில் தான் நடித்த முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார். இதனைத் தொடர்ந்து தமிழில் பலப் படங்களில் நடித்த விநாயகன் சமீபத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவு இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

போதைப் பழக்கத்திற்கு எதிராக பேச தகுதி வேண்டாமா?

நடிகர் விநாயகன் தென்னிந்திய சினிமாவில் பெரிய நடிகராக வலம் வந்தாலும். இவர் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். அந்த வகையில் போதையில் இவர் பொது வெளியில் ரகளையில் ஈடுபடுவதாக கூறி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். அதன் பிறகும் தொடர்ந்து இந்த மாதிரியான வழக்குகளில் நடிகர் விநாயகன் கைதாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் விநாயகன் தனது முக நூல் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மதுவுக்கு அடிமையாகி உடல் உறுப்புகள் எல்லாம் சேதம் அடைந்து எழுந்து நிற்கவே 4 பேரின் உதவியை நாடுபவர்கள் எல்லாம் பொது வெளியில் போதைப் பழக்கத்திற்கு எதிராக பேசுவது வேடிக்கையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், போதைத் தரும் அனைத்துமே போதைப் பொருள் என்று தெரிவித்த நடிகர் விநாயகன் அது மதுவாக இருந்தாலும், கஞ்சாவாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாளும் போதை தரும் அனைத்தும் போதைப் பொருளே. இதில் எதை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தினாலும் நீங்களும் போதைக்கு அடிமை என்று தெரிவித்துள்ளார்.

இணையத்தில் வைரலாகும் போஸ்ட்:

ஜெயிலர் படத்தில் கலக்கிய நடிகர் விநாயகன்:

இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நாயகனாக நடித்தப் படம் ஜெயிலர். கடந்த 2023-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நடிகர் விநாயகன் வில்லனாக மிரட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது உருவாகி வரும் ஜெயிலர் 2-ம் பாகத்தில் நடிகர் விநாயகன் நடிக்கிறாரா இல்லையா என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

விராட் கோலி இடத்தில் யார் இறங்குவார்கள்..? ஓபனாக சொன்ன பண்ட்!
விராட் கோலி இடத்தில் யார் இறங்குவார்கள்..? ஓபனாக சொன்ன பண்ட்!...
தமிழக மீனவர் வலையில் சிக்கிய டூம்ஸ்டே மீன்..
தமிழக மீனவர் வலையில் சிக்கிய டூம்ஸ்டே மீன்.....
இனி ஏடிஎம் மையங்களில் ரூ.100, ரூ.200 தான் அதிகம் இருக்கும்!
இனி ஏடிஎம் மையங்களில் ரூ.100, ரூ.200 தான் அதிகம் இருக்கும்!...
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ பண்ணும் பாலிவுட் நடிகர்?
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ பண்ணும் பாலிவுட் நடிகர்?...
கோவை வெடி விபத்து.. என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் 4 பேர் கைது..
கோவை வெடி விபத்து.. என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் 4 பேர் கைது.....
கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்? எச்சரிக்கை..!
கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்? எச்சரிக்கை..!...
கீழடி அகழ்வாராய்ச்சி - தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
கீழடி அகழ்வாராய்ச்சி - தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்...
சுறாவிடம் சிக்கும் 5 பேர்... ஓடிடியில் காண வேண்டிய படம்!
சுறாவிடம் சிக்கும் 5 பேர்... ஓடிடியில் காண வேண்டிய படம்!...
இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை - பொதுமக்கள் பாதிப்பு!
இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை - பொதுமக்கள் பாதிப்பு!...
சென்னை கடற்கரை - திருவண்ணாமலை இடையே பயணிகள் ரயில் ரத்து!
சென்னை கடற்கரை - திருவண்ணாமலை இடையே பயணிகள் ரயில் ரத்து!...
அரசுப்பள்ளிக்கு பேருந்து நன்கொடை கொடுத்த கிராம மக்கள்
அரசுப்பள்ளிக்கு பேருந்து நன்கொடை கொடுத்த கிராம மக்கள்...