Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

எத்தனை மகள்களுக்கு கிடைக்கும் இந்த பாக்கியம்… ஸ்ருதி ஹாசன்!

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நாயகன் கமல் ஹாசன். இவர் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நாயகனாக இருக்கிறார். மேலும் இவரது மகள்கள் தற்போது நடிகைகளாக வலம் வருகிறார்கள். இதில் நடிகை ஸ்ருதி ஹாசன் நடிப்பது மட்டும் இன்றி பாடலும் பாடி வருவது குறிப்பிடத்தக்கது.

எத்தனை மகள்களுக்கு கிடைக்கும் இந்த பாக்கியம்… ஸ்ருதி ஹாசன்!
கமல் ஹாசனுடன் நடிகை ஸ்ருதி ஹாசன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 04 Jun 2025 18:47 PM

நடிகர் கமல் ஹாசனின் (Shruti Haasan) நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் தக் லைஃப். இந்தப் படத்தில் நடிகர் கமல் ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் விண்வெளி நாயகா என்ற பாடலைப் பாடியுள்ளார். இசை வெளியீட்டு விழாவில் இவர் பாடியது ரசிகர்களிடையே வைரலானது. இசையமைப்பாளர்  ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் தனது தந்தைக்காகா பாடல் பாடியது குறித்து நடிகை ஸ்ருதி ஹாசன் மனம் நெகிழ்ந்து பேசியுள்ளார். அதில் நடிகை ஸ்ருதி ஹாசன் பேசியுள்ளதாவது, நான் என் வாழ்க்கையில் நீண்ட நாட்களாக நிறைய பாடல்களைப் பாடி வருகிறேன். ஆனால் உண்மையிலேயே இது போன்ற ஒரு பாசிட்டிவான வரவேற்பை நான் ஒருபோதும் பார்த்தது இல்லை. எத்தானை மகள்களுக்கு இந்த பாக்கியம் கிடைக்கும். அவர்களது அப்பாவிற்காக அவர்கள் இப்படி பாட முடியும் என்று எனக்கு தெரியவில்லை. என் வாழ்க்கையின் மிகச்சிறந்த தருணம் இது என்றும் தெரிவித்து இருந்தார்.

ஏ.ஆர்.ரகுமான் குறித்து பேசிய ஸ்ருதி ஹாசன்:

வழக்கமாக நான் ஒரு பாடலை பாடச் செல்லும்போது அந்த இசையமைப்பாளரின் ஸ்டுடியோவிற்கு சென்று அங்கையே பாடல் பெற்றுக்கொண்டு அங்கேயே பாடிவிட்டு வருவேன். ஆனால், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சார் சில நாட்களுக்கு முன்பு பாடலை எனக்கு அனுப்பி வைத்துவிட்டார், நாம் என் வீட்டிலேயே என் பியானோவுடன் அந்தப் பாலைப் பாடிக் கற்றுக்கொண்டேன். அது எனக்கு மிகவும் உதவியாக இருந்தது என்று நடிகை ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.

தக் லைஃப் படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

இணையத்தில் வைரலான ஸ்ருதி ஹாசன் பாடிய பாடல்:

கடந்த மே மாதம் 24-ம் தேதி 2025-ம் ஆண்டு தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைப்பெற்றது. அந்த விழாவில் ஸ்ருதி ஹாசன் நேரடியாகப் பாடிய விண்வெளி நாயகா பாடல், பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

நடிகையாகவும் பாடகியாகவும் சினிமாவில் வலம் வரும் ஸ்ருதி ஹாசன் தனது தந்தைக்காக பாடியப் பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமார் இசையில் இவர் பாடிய பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.