தக் லைஃப் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்த தமிழக அரசு…!
Thug Life Movie: நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் தற்போது ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் தக் லைஃப். இந்தப் படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்திற்கு சிறப்பு காட்சி வெளியிட தற்போது தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

நடிகர் கமல் ஹாசன் (Actor Kamal Haasan) நடிப்பில் நாளை ஜூன் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் தக் லைஃப் (Thug Life). இந்தப் படத்தினை இயக்குநர் மணிரத்னம் இயக்கி உள்ளார். நடிகர் சிலம்பரசனும் நாயகனாக இந்தப் படத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், ஐஸ்வர்யா லட்சுமி, அபிராமி, சான்யா மல்கோத்ரா, அசோக் செல்வன், ஜோஜூ ஜார்ஜ், நாசர், வடிவுகரசி என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தில் இருந்து முன்னதாக பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மணிரத்னம் – ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியின் இதுவரை வெளியாகி வெற்றியடைந்தப் படங்களைப் போல இந்தப் படமும் வெற்றியடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தக் லைஃப் படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி:
நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள கமல் ஹாசனின் தக் லைஃப் படத்திற்கு சிறப்பு காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி நாளை தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் காலை காட்சி 9 மணிக்கு முதல் காட்சி தொடங்கி இரவு 2 மணி வரை 5 காட்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பாக உள்ளது என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும் திரையரங்குகளும் மல்டிப்ளெக்ஷ்களும் படத்தை வெளியிடும் போது கூட்டத்தை கட்டுப்படுத்தவும் உரிய பாதுகாப்புடன் வெளியிட வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
தக் லைஃப் படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
#Thuglife Releasing Worldwide from Tomorrow#Thuglife Bookings open#ThuglifeFromJune5 in Cinemas near you#KamalHaasan #SilambarasanTR
A #ManiRatnam Film
An @arrahman Musical@ikamalhaasan @SilambarasanTR_ #Mahendran @bagapath @trishtrashers @AishuL_ @AshokSelvan @abhiramiact… pic.twitter.com/zEF6dfsVmM— Raaj Kamal Films International (@RKFI) June 4, 2025
மொழி சர்ச்சையில் சிக்கிய கமல் ஹாசன்:
தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல் ஹாசன் கன்னட மொழி குறித்து பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனைத் தொடர்ந்து கர்நாடகாவில் படம் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டு நீதிமன்றத்தை நாடினார் கமல் ஹாசன். அதிலும் தீர்வு கிடைக்காத நிலையில் படத்தை கர்நாடகாவில் வெளியிடுவதை ஒத்தி வைப்பதாக தக் லைஃப் படக்குழு அறிவிப்பை வெளியிட்டது. இதனால் நாளை கர்நாடகாவில் தக் லைஃப் படம் வெளியாகாது என்பது குறிப்பிடத்தக்கது.