இந்தியாவின் தலைசிறந்த நடிகர் மோகன்லால் – புகழ்ந்து தள்ளிய செல்வராகவன்
Director Selvaraghavan: நடிகர் மோகன்லால் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் துடரும், இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தை பார்த்த இயக்குநர் செல்வராகவன் வெகுவாகப் பாராட்டி உள்ளார்.

மோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லால் (Actor Mohanlal) நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் துடரும். இந்தப் படத்தை இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கி உள்ளார். மேலும் படம் கடந்த 25-ம் தேதி ஏப்ரல் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் தற்போது ஜியோ ஹார்ஸ்டார் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது. இந்த நிலையில் சமீபத்தில் இந்தப் படத்தைப் பார்த்த இயக்குநர் செல்வராகவன் படத்தையும் நடிகர் மோகன்லால் மற்றும் படக்குழுவினரையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார். மேலும் நடிகர் மோகன்லால் இந்தியாவின் தலைசிறந்த நடிகர் என்றும் இயக்குநர் செல்வராகவன் பாராட்டி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவு தற்போது வைரலாகி வருகின்றது.
இயக்குநர் செல்வராகவன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது, அற்புதமான அற்புதமான படம் துடரும். நடிகர் மோகன்லால் சாரால் மட்டுமே இந்தப் படத்தைப் நடிக்க முடியும் என்று செல்வராகவன் அந்தப் பதிவில் தெரிவித்து இருந்தார். மேலும் என்ன ஒரு நடிகர் இந்தியாவின் சிறந்த நடிகரைப் பார்த்து மயங்கிவிட்டேன் என்றும் மோகன்லாலை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
இயக்குநர் செல்வராகவன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Brilliant Brilliant movie * Thudarum * is ! Only @Mohanlal sir can pull of this film! What an actor! Mesmerised by the best actor in india!
— selvaraghavan (@selvaraghavan) June 3, 2025
மோகன்லாலின் துடரும் படத்தை கொண்டாடிய ரசிகர்கள்:
நடிகர் மோகன்லாலுக்கு ஆண்டு தொடங்கியதில் இருந்தே வெற்றிமுகம் என்றே சொல்லலாம். அப்படி தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் நடிகர் மோகன்லால் நடிப்பில் இறுதியாக வெளியான படம் துடரும். இந்தப் படம் வெளியானபோது ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாடித் தீர்த்தனர்.
மேலும் இந்தப் படத்தில் நடிகை சோபனா மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்தில் இணைந்து நடித்ததை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பிரகாஷ் வர்மா, ஃபர்ஹான் பாசில், மணியன்பிள்ளை ராஜு, பினு பப்பு, இர்ஷாத் அலி, ஆர்ஷா சாந்தினி பைஜு, தாமஸ் மேத்யூ, சங்கீத் பிரதாப் மற்றும் கிருஷ்ண பிரபா என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.
க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் திரைக்கதையை கே.ஆர்.சுனில் எழுதி இருந்தார். இந்தப் படம் வெளியான போது ரசிகர்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.