Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

3 படத்தின் ரிலீசுக்கு பிறகு 2 வருசம் பட வாய்ப்பே வரல… நடிகை ஸ்ருதி ஹாசன் ஓபன் டாக்

Actress Shruti Haasan: உலகம் எங்கும் உள்ள சினிமா ரசிகர்களால் உலக நாயகன் என்று அன்புடன் அழைக்கப்படும் கமல் ஹாசனின் மூத்த மகள் தான் ஸ்ருதி ஹாசன். இவர் சினிமாவில் நடிகையாக மட்டும் இல்லாமல் பாடகியாகவும் தன்னை தொடர்ந்து முன்னிருத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

3 படத்தின் ரிலீசுக்கு பிறகு 2 வருசம் பட வாய்ப்பே வரல… நடிகை ஸ்ருதி ஹாசன் ஓபன் டாக்
3 படம்Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 04 Jun 2025 06:30 AM

தமிழ் சினிமா மட்டும் இன்றி தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன் (Actress Shruti Haasan). இவர் நடிப்பது மட்டும் இன்றி பாடல்களை பாடியும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முன்னதாக பேட்டி ஒன்றில் பேசிய நடிகை 3 படத்தில் நடித்ததற்கு பிறகு தனக்கு சினிமா வாழ்க்கையில் என்ன நடந்தது என்று வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் நடிகை ஸ்ருதி ஹாசன் பேசியதாவது, 3 படத்தின் ஜனனியை பல பேருக்கு பிடிக்கும் என்பதே எனக்கு 10 வருசத்துக்கு அப்பறம் தான் தெரியும். வெளிப்படையா சொல்லனும்னா 3 படத்தில் நான் நடிச்சு அது ரிலீசானதுக்கு அப்பறம் எனக்கு 2 வருசமா எந்த பட வாய்ப்பும் கிடைக்கல. ஏன் கதை சொல்றேன்னு கூட யாருமே என்னை அனுகவில்லை. அது ஏன்னு எனக்கு புரியவே இல்லை என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஸ்ருதி ஹாசன் அறிமுகம் ஆன படம்:

உலக நாயகன் கமல் மற்றும் நடிகை சரிகாவின் மூத்த மகளான நடிகை ஸ்ருதி ஹாசன் தனது தந்தை இயக்கி நடித்த ஹே ராம் என்ற படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகம் ஆனார். 2000-ம் ஆண்டு இந்தப் படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.  அதனைத் தொடர்ந்து 2009-ம் ஆண்டு முதல் இந்தி மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கத் தொடங்கினார்.

இந்த நிலையில் கடண்டஹ் 2011-ம் ஆண்டு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆனார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழில் அறிமுகம் ஆன முதல் படமே ஸ்ருதி ஹாசனுக்கு சூப்பர் ஹிட் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

நடிகை ஸ்ருதி ஹாசனின் இன்ஸ்டா பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Shruti Haasan (@shrutzhaasan)

ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான ஹிட் படங்கள்:

ஏழாம் அறிவு படத்திற்கு பிறகு நடிகை ஸ்ருதி ஹாசன் நடிப்பில் தமிழில் வெளியான 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3, புத்தம் புது காலை, லாபம் ஆகிய படங்கள் வரவேற்பைப் பெற்றது. மேலும் படங்களில் நடிப்பது மற்றும் இன்றி பாடல் பாடுவதிலும் நடிகை ஸ்ருதி ஹாசன் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

ரஜினியுடன் கூலி படத்தில் நடிக்கும் ஸ்ருதி ஹாசன்:

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் கூலி. இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடித்துள்ளார். வருகின்ற ஆக்ஸ்ட் மாதம் 14-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்தப் படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எஸ்பிஐக்கு கொஞ்சம் கொடுங்க சார்... விஜய் மல்லையாவுக்கு விமர்சனம்
எஸ்பிஐக்கு கொஞ்சம் கொடுங்க சார்... விஜய் மல்லையாவுக்கு விமர்சனம்...
'சூர்யா 45' படத்திலிருந்து ரசிகர்களுக்குக் காத்திருக்கும் ட்ரீட்!
'சூர்யா 45' படத்திலிருந்து ரசிகர்களுக்குக் காத்திருக்கும் ட்ரீட்!...
இன்ஸ்டாகிராமின் புதிய 'எடிட்ஸ்' ஆப் - ஈஸியா வீடியோ எடிட் பண்ணலாம்
இன்ஸ்டாகிராமின் புதிய 'எடிட்ஸ்' ஆப் - ஈஸியா வீடியோ எடிட் பண்ணலாம்...
ஆர்சிபி மற்றும் கர்நாடக கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப் பதிவு
ஆர்சிபி மற்றும் கர்நாடக கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப் பதிவு...
அடேங்கப்பா விலை இவ்வளவா? புது ரேஸ் காரை வாங்கிய அஜித் குமார்!
அடேங்கப்பா விலை இவ்வளவா? புது ரேஸ் காரை வாங்கிய அஜித் குமார்!...
வெற்றிமாறனுடன் புதிய படத்தில் இணையும் பிரபல நடிகர்?
வெற்றிமாறனுடன் புதிய படத்தில் இணையும் பிரபல நடிகர்?...
லைக்காவுக்கு ரூ.21 கோடியை விஷால் தர வேண்டும் - உயர்நீதிமன்றம்
லைக்காவுக்கு ரூ.21 கோடியை விஷால் தர வேண்டும் - உயர்நீதிமன்றம்...
சென்னையில் ஜூன் 6ல் 7 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!
சென்னையில் ஜூன் 6ல் 7 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!...
தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' பட ஷூட்டிங் புகைப்படம் லீக்..!
தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' பட ஷூட்டிங் புகைப்படம் லீக்..!...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்தப் படங்கள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்தப் படங்கள்...
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா : ஒரே நாளில் 564 பேருக்கு பாதிப்பு
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா : ஒரே நாளில் 564 பேருக்கு பாதிப்பு...