ரீ – ரிலீஸாகும் கரகாட்டகாரன் படம்… நடிகர் ராமராஜன் கொடுத்த அப்டேட்
Karakattakaran Movie Re Release: தமிழ் சினிமா ரசிகர்களிடையே தற்போது ரீ ரிலீஸ் என்ற கலாச்சாரம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த அவகையில் சுமார் 35 வருடங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியான கரகாட்டகாரன் படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

கோலிவுட் சினிமாவில் இயக்குநரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் (Gangai Amaran) இயக்கத்தில் கடந்த 1989-ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் கரகாட்டகாரன். இந்தப் படத்தில் நடிகர் ராமராஜன் நாயகனாகவும் நடிகை கனகா நாயகியாகவும் நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் சந்தான பாரதி, சந்திரசேகர், கவுண்டமணி, செந்தில், சண்முகசுந்தரம், ராஜா பகதூர், காந்திமதி மற்றும் கோவை சரளா என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். கரகாட்டம் ஆடும் குடும்பங்களை மையமாக வைத்து ரொமாண்டிக் காமெடியாக வெளியான இந்த கரகாட்டகாரன் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து இருந்தார். படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் தற்போதும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.
கரகாட்டக்காரன் ரீ ரிலீஸ்:
நேற்று ஜூன் மாதம் 2-ம் தேதி 2025-ம் ஆண்டு இசையமைப்பாளர் இளையராஜா தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவரை நேரில் சென்று சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துவிட்டு ஆசி வாங்கினார் நடிகர் ராமராஜன். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராமராஜன் பேசியதாவது, இன்று அண்ணன் இளையராஜா பிறந்த நாள்.
அதே போல வருகின்ற 16-ம் தேதி கரகாட்டகாரன் படம் வெளியாகி 36 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதன் காரணமாக அந்தப் படத்தை ரீ ரிலீஸ் செய்யும் பணிகளில் தற்போது ஈடுபட்டுள்ளோம். விரைவில் அந்தப் படம் திரையரங்களில் மீண்டும் வெளியாகும் என்று அவர் தெரிவித்தார்.
இளையராஜாவை நேரில் சந்தித்த ராமராஜன்:
Actor Ramarajan visits Maestro #ILAIYARAAJA ‘s residence to wish the legend a melodious birthday!#happybirthdayilayaraja pic.twitter.com/xG4N7tyhfz
— Studio Flicks (@StudioFlicks) June 2, 2025
முன்னதாக கரகாட்டகாரன் படத்தின் இயக்குநர் கங்கை அமரன் பேசுகையில் கரகாட்டகாரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளதாக தெரிவித்து இருந்தார். ஆனார் நடிகர் ராமராஜன் இரண்டாம் பாகம் எடுப்பதில் தனக்கு விருப்பம் இல்லை என்றும் அந்தப் படத்தை அப்படியே விட்டுவிடவேண்டும் என்றும் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
கரகாட்டக்காரன் படத்தின் கதை:
கரகாட்டம் ஆடும் ராமராஜன் மற்றும் கனகா இருவருக்கு இடையே காதல் ஏற்படுகிறது. பிறகுதான் தெரிகிறது அவர்களின் இரண்டு குடும்பமும் உறவுக்கார குடும்பம் என்றும் ஆனால் பல ஆண்டுகளாக பேசாமல் இருந்தது தெரிகின்றது. அந்த இரண்டு குடும்பமும் பிரிந்ததற்கான காரணம் என்ன அவர்கள் இருவரும் காதலில் ஜெயித்தார்களா இல்லையா என்பதே படத்தின் கதை.