AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மொழி குறித்து பேச நீங்க யார்? கமல் ஹாசனிடம் சரமாரி கேள்வி எழுப்பிய கர்நாடக நீதிமன்றம்

Actor Kamal Haasan: தமிழ் நாடு முழுவதும் கமல் ஹாசனின் தக் லைஃப் படம் தொடர்பாக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் கர்நாடகா மாநிலத்தில் கன்னட மொழி குறித்து கமல் ஹாசன் பேசிய சர்ச்சை இன்னும் ஓயவில்லை. தற்போது நீதிமன்றத்தில் கமல் ஹாசனிடம் சரிமாரி கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது.

மொழி குறித்து பேச நீங்க யார்? கமல் ஹாசனிடம் சரமாரி கேள்வி எழுப்பிய கர்நாடக நீதிமன்றம்
கமல் ஹாசன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 03 Jun 2025 14:11 PM IST

நடிகர் கமல் ஹாசன் (Actor Kamal Haasan) நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் படம் வருகின்ற 5-ம் தேதி ஜூன் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா முன்னதாக சென்னையில் கடந்த 24-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு நடைப்பெற்றது. இதில் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் மட்டும் இன்றி பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு படம் குறித்தும் கமல் ஹாசன் குறித்தும் பேசினர். இந்த நிகழ்ச்சியில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் கலந்துகொண்டு கமல் ஹாசன் குறித்து பேசினர். பின்னர் கமல் ஹாசன் பேசியபோது சிவராஜ் குமார் தனது குடும்பத்தில் ஒருத்தர் என்று தமிழில் இருந்து பிரிந்து சென்றதுதான் கன்னட மொழி என்றும் மேடையில் பேசினார். இது கன்னடர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

சர்ச்சையை கிளப்பிய மொழிப் பிரச்னை:

கமல் ஹாசனின் இந்தப் பேச்சி கர்நாடகாவில் சர்ச்சையை கிளப்பியது. மேலும் கமல் ஹாசன் கன்னட மொழி குறித்து பேசியதற்கு மன்னிப்பு கோர வேண்டும் என்று மொழிப் பற்றாளர்களும் ஆர்வளர்களும், தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அப்படி அவர் மன்னிப்பு கோரவில்லை என்றால் கர்நாடகாவில் அவரது தக் லைஃப் படம் வெளியாகாது என்றும் மிரட்டல் விடுத்தனர்.

மேலும் கர்நாடகா அமைச்சர் வெளிப்படையாகவே கமல் ஹாசனுக்கும் மிரட்டல் விடுத்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய நடிகர் கமல் ஹாசன் மொழி குறித்து பேச எந்த அரசியல்வாதிகளுக்கும் தகுதி இல்லை என்றும் ஏன் எனக்கு கூட தகுதி இல்லை என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.

அமைச்சரின் மிரட்டலுக்கு பதிலளிக்கும் விதமாக கமல் பேசிய வீடியோ:

தக் லைஃப் படத்தை வெளியிட தடை:

கமல் ஹாசன் மன்னிப்பு கேட்காவிட்டால் தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிட மாட்டோம் என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சங்கம் அறிவிப்பை வெளியிட்டது. இதனை எதிர்த்து நேற்று கமல் ஹாசன் கர்நாடக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

கமல் ஹாசனிடம் சரமாரி கேள்வி எழுப்பிய நீதிமன்றம்:

இன்று நடிகர் கமல் ஹாசன் தொடர்ந்த வழக்கு விசாரனைக்கு வந்தபோது கமல் ஹாசனிடம் சரமாரியாக கேள்விகள் எழுப்பப்பட்டது. நீங்கள் என்ன மொழி ஆய்வாளரா இல்லை என்றால் வரலாற்று ஆய்வாளரா மொழி குறித்துப் பேச என்று கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் இந்த சர்ச்சை கிளம்பிய போதே நீங்கள் மன்னிப்பு கேட்டு இருந்தால் இது இவ்வளவு தூரத்திற்கு வந்து இருக்காது என்றும் கருத்து தெரிவித்துள்ளது.

நீங்கள் கமல் ஹாசனோ அல்லது யாரா வேண்டுமானாலும் இருக்கலாம். உங்களின் பேச்சு மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக இருக்கக் கூடாது என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும், மக்களிடம் பிரபலமான நபராக இருக்கும் நீங்கள் இந்த மாதிரி பொருப்பு இல்லாமல் பேசக்கூடாது.

தொடர்ந்து கர்நாடக மக்கள் உங்களிடம் இருந்து மன்னிப்பை மட்டுமே எதிர்பார்த்தனர். ஆனால் நீங்க இப்போ இங்க பாதுகாப்பை தேடி வந்து இருக்கீங்க. ஒரு மன்னிப்பு கேட்டு இருந்தால் எல்லா பிரச்னையும் முடிந்து இருக்கும் என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது. மேலும் அப்படி கமல் ஹாசன் மன்னிப்பு கோர விரும்பவில்லை என்றால் அவரது படம் கர்நாடகாவில் வெளியிட அவர் ஏன் விரும்புகிறார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

கருத்து சுதந்திரம் மக்களின் உணர்வுகளை புன்படுத்துவதாக இருக்கக்கூடாது என்று தெரிவித்த நீதிமன்றம் பாதுகாப்பு கொடுப்பதா இல்லையா என்பது குறித்த உத்தரவை அறிவிப்போம் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் கமல் ஹாசன் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் அவர் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் பேசவில்லை என்று தெரிவித்து உள்ளார்.

Follow Us