AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தனுஷ் உடன் மோதும் அதர்வா… டிஎன்ஏ படத்தின் ரிலீஸ் தேதி இதோ

DNA Movie: தமிழ் சினிமாவில் இந்த மாதம் பெரிய நடிகர்கள் படங்கள் தொடர்ந்து வெளியாக காத்திருக்கின்றது. முன்னதாக மூன்று முக்கிய நடிகர்களின் படங்களின் அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில் தற்போது அதர்வாவும் அந்த வரிசையில் இணைந்துள்ளார். அதன்படி அவரது டி.என்.ஏ படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.

தனுஷ் உடன் மோதும் அதர்வா… டிஎன்ஏ படத்தின் ரிலீஸ் தேதி இதோ
=டிஎன்ஏ
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 03 Jun 2025 11:43 AM IST

நடிகர் அதார்வாவின் (Actor Atharvaa) நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் நிறங்கள் மூன்று. கடந்த 2024-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இந்த நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் அதர்வா நாயகனாக நடிக்கும் மூன்று படங்கள் இந்த ஆண்டு மட்டுமே திரையரங்குகளில் வெளியாக பணிகள் நடைப்பெற்று வருகின்றது. அந்த வகையில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் டி.என்.ஏ. இந்தப் படத்தில் நடிகர் அதர்வாவிற்கு நாயகியாக நடிகை நிமிஷா சஜயன் நடித்துள்ளார். ஒளிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக், விஜி சந்திரசேகர், சேத்தன், ரித்விகா கேபி, சுப்ரமணியன் சிவா, கருணாகரன், மற்றும் பசங்க சிவகுமார் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் பணிகளு முன்னதாகவே தொடங்கிய நிலையில் படத்தின் வெளியீடு குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி படம் வருகின்ற ஜூன் மாதம் 20-ம் தேதி 20205-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அப்டேட் வெளியாகியுள்ளது. இதன் காரணகாம அதர்வா தனுஷின் குபேரா படத்துடன் போட்டிப்போட உள்ளது குறிப்பிடத்தக்கது.

டி.என்.ஏ படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

இதனைத் தொடர்ந்து நடிகர் அதர்வா நாயகனாக மட்டும் இல்லாமல் இரண்டாம் நாயகனாகவும் நடித்து வருகிறார். அதன்படி இவர் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திக்யேன நடிக்கும் படம் பராசக்தி. சிவகார்த்திகேயனின் 25-வது படமான இதில் நடிகர் அதர்வா இரண்டாவது நாயகனாக நடித்து வருகிறார். மேலும் ரவி மோகனும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இது மட்டும் இன்றி நடிகர் அதர்வா நடிப்பில் அடுத்தடுத்து படங்களின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. அதில் அட்ரெஸ், தனல், இதயம் முரளி படங்களின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்தப் படங்கள் அடுத்தடுத்து நடிகர் அதர்வாவின் நடிப்பில் படங்கள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த மறைந்த நடிகர் முரளியின் மூத்த மகன் தான் அதர்வா. பாணா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்த இவர் தற்போது கோலிவுட்டில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us