Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

உள்ளம் கேட்குமே படத்தால எனக்கு லைலாவ பிடிக்காமயே போயிடுச்சு – நடிகர் ஷாம் ஓபன் டாக்

Actor Shaam: தமிழ் சினிமாவில் குஷி படத்தில் நடிகர் விஜயின் நண்பனாக சிறிய வேடத்தில் நடித்த நடிகர் ஷாம். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நாயகனாகவும் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார். இந்த நிலையில் முன்னதாக பேட்டி ஒன்றில் நடிகை லைலா குறித்து பேசியது தற்போது வைரலாகி வருகின்றது.

உள்ளம் கேட்குமே படத்தால எனக்கு லைலாவ பிடிக்காமயே போயிடுச்சு – நடிகர் ஷாம் ஓபன் டாக்
நடிகர் ஷாம்Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 03 Jun 2025 07:30 AM

தமிழ் சினிமாவில் 2000 தொடங்கிய காலகட்டத்தில் ரசிகைகளின் ஃபேவரட் நாயகனாக இருந்தவர் நடிகர் ஷாம் (Actor Shaam). இவர் முன்னதாக பேட்டி ஒன்றில் பேசியபோது நடிகை லைலாவை தனக்கு பிடிக்காது என்று தெரிவித்துள்ளார். அதற்கு அவர் கூறிய காரணம் இவர்கள் இருவரும் 2005-ம் ஆண்டு இணைந்து நடித்த உள்ளம் கேட்குமே படம் தான் என்று ஷாம் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் ஜீவா எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் நடிகர் ஷாம் உடன் இணைந்து நடிகர்கள் ஆர்யா, லைலா, அசின் மற்றும் பூஜா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். கல்லூரியில் படிக்கும் நண்பர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

உள்ளம் கேட்குமே படத்தால் லைலாவை பிடிக்கவில்லை:

குறிப்பாக 90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்தப் படமாகவும் இது இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர்கள் ஆர்யா மற்றும் பூஜா இருவரும் காதலிப்பார்கள். அதே நேரத்தில் நடிகர் ஷாமை நடிகை லைலா காதலிக்கா ஆனால் அவர் அசினை காதலிப்பார். படத்தில் லைலாவின் கதாப்பாத்திரம் எரிச்சல் மூட்டும் நபராக காட்சிப் படுத்தி இருப்பார்கள்.

இந்தப் படத்தில் ஷாம் லைலாவைப் பார்த்தாலே கடுப்பகா வேண்டும் என்பது போல காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அந்த வகையில் இந்தப் படத்தில் நடித்ததாலே நடிகை லைலாவை தனக்கு பிடிக்காமல் போய் விட்டது என்றும் தனிப்பட்ட முறையில் எங்கள் இருவருக்கும் இடையேயும் எந்த கருத்து வேறுபாடு இல்லை என்றும் நடிகர் ஷாம் முந்தைய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

நடிகர் ஷாமின் நடிப்பில் வெளியான படங்கள்:

நடிகர் ஷாமி 12 பி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து இவர் பலப் படங்களில் நாயகனாக நடித்துள்ளார். மேலும் இரண்டாம் நாயகன் அண்ணன் தம்பி என பல கதாப்பாத்திரத்தில் நடிகர் ஷாம் நடித்துள்ளார். இவரது நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் அஸ்த்ரம்.

மார்ச் மாதம் 21-ம் தேதி 2025-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் இயக்கி இருந்தார். க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவான இந்தப் படம் ரசிகரக்ளிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் ஷாம் நடித்து வரும் படம் நொடிக்கு நொடி. இந்தப் படத்தின் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. படம் விரையில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Bengaluru Stampede: சின்னசாமி மைதானத்தில் உண்மையில் என்ன நடந்தது?
Bengaluru Stampede: சின்னசாமி மைதானத்தில் உண்மையில் என்ன நடந்தது?...
இந்தி சினிமாவிற்கு நோ சொன்ன காரணம் பற்றி நடிகை சிம்ரன் ஓபன் டாக்!
இந்தி சினிமாவிற்கு நோ சொன்ன காரணம் பற்றி நடிகை சிம்ரன் ஓபன் டாக்!...
'சிம்புதான் தக் லைஃப் படத்துக்கு பொருத்தமானவர்' - மணிரத்னம்!
'சிம்புதான் தக் லைஃப் படத்துக்கு பொருத்தமானவர்' - மணிரத்னம்!...
கோட் படத்தில் 'சிஎஸ்கே' காட்சி வைக்கக் காரணம் - வெங்கட் பிரபு!
கோட் படத்தில் 'சிஎஸ்கே' காட்சி வைக்கக் காரணம் - வெங்கட் பிரபு!...
ஆண்ட்ராய்டு மூலம் யூசர்களின் தகவல்களை திருடும் மெட்டா?
ஆண்ட்ராய்டு மூலம் யூசர்களின் தகவல்களை திருடும் மெட்டா?...
துணியில் சாயம் ஒட்டிவிட்டதா? இப்படி செய்து நீக்கலாம்: எளிய டிப்ஸ்
துணியில் சாயம் ஒட்டிவிட்டதா? இப்படி செய்து நீக்கலாம்: எளிய டிப்ஸ்...
அதிக உடற்பயிற்சியும் ஆபத்து.. இந்த விஷயத்தில் கவனமா இருங்க!
அதிக உடற்பயிற்சியும் ஆபத்து.. இந்த விஷயத்தில் கவனமா இருங்க!...
'தக் லைஃப்' பட மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு!
'தக் லைஃப்' பட மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு!...
'ஜன நாயகன்' பட தமிழக ரிலீஸ் உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்?
'ஜன நாயகன்' பட தமிழக ரிலீஸ் உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்?...
தவெக கொடிக்கும் பிஎஸ்பி கொடிக்கும் தொடர்பு இல்லை: என்.ஆனந்த்
தவெக கொடிக்கும் பிஎஸ்பி கொடிக்கும் தொடர்பு இல்லை: என்.ஆனந்த்...
சட்டென மாறிய வானிலை: சென்னையில் பரவலாக மழை..!
சட்டென மாறிய வானிலை: சென்னையில் பரவலாக மழை..!...