சினிமா ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்… ஓடிடியில் வெளியானது டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம்… எங்கு, எப்படி பார்க்கலாம்?
Tourist Family OTT Update: நடிகர் சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் திரயரங்குகளில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த டூரிஸ்ட் ஃபேமிலி படம் தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் பார்க்க மிஸ் செய்தவர்கள் தற்போது ஓடிடியில் பார்க்கலாம். இன்று எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

கோலிவுட் சினிமாவில் கடந்த மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் அபிஜன் ஜீவிந்த் இயக்கி இருந்தார். மேலும் நடிகர் சசிக்குமார் நாயகனாகவும் நடிகை சிம்ரன் நாயகியாகவும் நடித்து இருந்தனர். இவர்கள் இருவருக்கும் நடிகர்கள் மிதுன் ஜெய் சங்கர் மற்றும் காமேஷ் இருவரும் மகன்களாக நடித்து இருந்தனர். மேலும் நடிகர் யோகி பாபு சிம்ரனின் அண்ணனாக நடித்து இருந்தார். இலங்கையில் வருமையின் காரணமாக நாடு விட்டு கடல் வழியாக தமிழ் நாட்டிற்கு வருகின்றனர் சசிகுமாரின் குடும்பம். அவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க உதவுகிறார் நடிகர் யோகி பாபு. மிகவும் கடினமான சூழலைக் கூட மிகவும் காமெடியாக இயக்கி இருந்தார் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்.
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் கதை என்ன?
சசிகுமார் குடும்பத்துடன் வந்து சென்னையில் ஒரு பகுதியில் வசித்து வருகிறார். அங்கு வாழும் அனைவரின் மனதிலும் அந்த குடும்பம் நல்ல பெயருடன் இடம் பிடிக்கின்றனர். சசிகுமாரின் குணம் மற்றும் அவரது நடவடிக்கை அனைத்தும் அங்கு வாழ்பவர்களிடம் அவருக்கான மரியாதையை சம்பாதித்து கொடுக்கின்றது.




மிகவும் இறுக்கமான சூழ்நிலையையும் சாதாரணமாக கடந்து செல்ல வைத்துள்ளார் படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். ஒரு மனிதன் சக மனிதன் மீது காட்டும் அன்பு எந்த அளவிற்கு அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று இந்தப் படம் மிகவும் அழகாகக் காட்டியிருந்தது.
டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து ஜியோ ஹாட்ஸ்டார் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Entertainment alert: They are here 😍 #TouristFamily streaming now on #JioHotstar #TouristFamilyStreamingNow #JioHotstarTamil @abishanjeevinth @RSeanRoldanmusical @sasikumardir @SimranbaggaOffc @Foxy_here03 @barathvikraman @Yuvrajganesan @mageshraj @MithunJS5 @iYogiBabu… pic.twitter.com/PYgKLUmbqR
— JioHotstar Tamil (@JioHotstartam) June 2, 2025
ஓடிடியில் வெளியானது டூரிஸ்ட் ஃபேமிலி:
முன்னணி இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் முன்னணி நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான ரெட்ரோ படத்துடன் திரையரங்குகளில் போட்டிப்போட்ட இந்த டூரிஸ்ட் ஃபேமிலி படம் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. சாதாரண ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் இந்தப் படத்தை பார்த்து பாராட்டினர். இந்த நிலையில் படம் இன்று ஜூன் மாதம் 2-ம் தேதி 2025-ம் ஆண்டு ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
இந்த டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை திரையரங்குகளில் பார்க்காமல் தவரவிட்ட ரசிகர்கள் தற்போது ஓடிடியில் பார்த்துவிட்டு தங்களது மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். இந்தப் படத்தில் நடிகர்கள் சிம்ரன் மற்றும் சசிகுமார் உடன் இணைந்து நடிகர்கள் பக்ஸ், ரமேஷ் திலக் மற்றும் எம்.எஸ். பாஸ்கர் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.