Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நல்ல ஸ்கிரிப்ட்டிற்காக காத்துருக்கிறேன்.. கிடைச்சுதுனா தமிழ் சினிமாவிற்கு ஓடோடி வந்துடுவேன் – ராஷ்மிகா மந்தனா

Actress Rashmika Mandanna: பான் இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழில் நடிகர் கார்த்தியின் நடிப்பில் வெளியான சுல்தான் மற்றும் விஜயின் நடிப்பில் வெளியான வாரிசு ஆகிய இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இந்த நிலையில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் நடிப்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

நல்ல ஸ்கிரிப்ட்டிற்காக காத்துருக்கிறேன்.. கிடைச்சுதுனா தமிழ் சினிமாவிற்கு ஓடோடி வந்துடுவேன் – ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா மந்தனாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 02 Jun 2025 14:21 PM

ரசிகர்களால் நேஸ்னல் க்ரஷ் என்று அன்புடன் அழைக்கப்படுபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா (Actress Rashmika Mandanna). இவர் கன்னட் மொழியில் வெளியான படத்தில் நாயகியாக அறிமுகம் ஆகி இருந்தாலும் தெலுங்கு சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். கர்நாடகாவைப் பூர்விகமாகக் கொண்ட நடிகை ராஷ்மிகா தெலுங்கு மொழியில் அதிகம் படங்களை நடித்ததாலே அவர் கன்னடர் என்பதை ரசிகர்கள் பலருக்கும் தெரியாமல் உள்ளது. தற்போது தெலுங்கு மொழியில் மட்டும் இன்றி பான் இந்திய அளவில் பிரபல நடிகையாக உள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவரது நடிப்பில் இறுதியாக தெலுங்கில் புஷ்பா 2 மற்றும் இந்தியில் சிக்கர்ந்தர் ஆகிய படங்களில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது நடிகை ராஷ்மிகாவின் நடிப்பில் படங்கள் வெளியாக வரிசையாக காத்திருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று நடிகர்கள் தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா நாயகன் நாயகியாக நடித்துள்ள குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று 1-ம் தேதி ஜூன் மாதம் 2025-ம் ஆண்டு சென்னையில் நடைப்பெற்றது. இதில் நடிகர்கள் உட்பட படக்குழுவினர் பலரும் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் இன்ஸ்டா பதிவு:

செய்தியாளர்களிடம் ராஷ்மிகா மந்தனா சொன்ன விசயம்:

இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகை ராஷ்மிகா மந்தனா செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டார். அப்போது குபேரா படம் குறித்து பேசினார். மேலும் சென்னையில் இந்த விழாவில் கலந்துகொண்டது மிகவு மகிழ்ச்சியாக இருந்தது என்று அவர் தெரிவித்தார். அவரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மிகவும் கலகலப்பாக பதில் பேசியுள்ளார்.

குபேர படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை ராஷ்மிகா மந்தனா:

அப்போது சுல்தான் மற்றும் வாரிசு படங்களை தவிற ஏன் இன்னும் வேறு தமிழ் படங்களில் நடிக்கவில்லை என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த நடிகை ராஷ்மிகா மந்தனா ஒரு நல்ல ஸ்கிரிப்டிற்காக காத்திருக்கிறே. அப்படி ஒரு நல்ல ஸ்கிரிப்ட் கிடைத்தால் தமிழ் சினிமாவிற்கு ஓடோடி வந்துடுவேன் என்று தமிழில் அவர் பதிலளித்தது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் தற்போது குபேரா படம் வெளியீட்டிற்கு காத்திருக்கும் நிலையில் இந்தியில் இவர் நடித்த தமா படத்தின் பணிகளும் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் படமும் விரையில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.