Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மாமன் படத்தில் சுவாசிகாவின் நடிப்பை பாராட்டி பேசிய நடிகர் சூரி

நடிகர் சூரி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் படம் மாமன். இந்தப் படத்தில் சூரியின் அக்காவாக நடிகை சுவாசிகா நடித்து இருந்தார். இந்த நிலையில் சுவாசிகாவின் நடிப்பை பாராட்டி நடிகர் சூரி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மாமன் படத்தில் சுவாசிகாவின் நடிப்பை பாராட்டி பேசிய நடிகர் சூரி
சுவாசிகா, நடிகர் சூரிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 02 Jun 2025 10:29 AM

நடிகர் சூரி (Actor Soori) நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் மாமன். இந்தப் படத்தை விலங்கு என்ற சூப்பர் ஹிட் வெப் சீரிஸை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிகர் சூரியின் நாயகியாக நடித்து இருந்தார். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் தற்போது சென்சேஸ்னல் நடிகையாக இருக்கும் சுவாசிகா நடிகர் சூரியின் அக்காவாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ராஜ்கிரண், கீதா கைலாசம், பாலா சரவணன், பாபா பாஸ்கர் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படம் கடந்த மே மாதம் 16-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

மாமன் படம் உருவான கதை:

நாயகனாக நடிக்க தொடங்கிய பிறகு நடிகர் சூரி தொடர்ந்து சீரியசான கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார். முழுக்க முழுக்க காமெடி செண்டிமெண்ட் படத்தில் நடிக்க ஆசைப்பட்ட நடிகர் சூரி தானே ஒரு குடும்பக் கதையை எழுதியுள்ளார். அதனை பிரசாந்த் பாண்டியராஜனை வைத்து இயக்க முடிவு செய்துள்ளார் சூரி. அப்படி உருவான படம் தான் மாமன்.

இந்தப் படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் வசூல் ரீதியாகவும் படம் கலக்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தன்னுடன் நடித்த நடிகை சுவாசிகா குறித்தும் அவரது நடிப்பு குறித்தும் பாராட்டி சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் சூரியின் எக்ஸ் தள பதிவு:

சுவாசிகா குறித்து சூரியின் பதிவு:

அந்தப் பதிவில் நடிகர் சூரி கூறியுள்ளதாவது, என் அன்பும் நன்றிகளும் Girija அக்காவுக்கு, ஸ்வாசிகா மாமன் படத்தில் உங்கள் நடிப்பு என் மனதை ஆழமாக கவர்ந்தது. அக்கா, லட்டு அம்மா, மகள், மனைவி – ஒவ்வொரு வேடத்திலும் நீங்கள் காட்டிய திறமை ஒளிர்ந்தது. நீங்கள் நடித்த ஒவ்வொரு காட்சியிலும் உண்மையான உணர்வுகள் இருந்தன. அந்த உணர்ச்சிகள்தான் இந்தப் படத்தின் சிறப்பை உருவாக்கியது. உங்களோடு நடித்தது எனக்கு ஒரு நல்ல அனுபவமாகவும், நல்ல போட்டியாகவும் இருந்தது. நிச்சயமாக, நீங்கள் இந்திய சினிமாவுக்கு ஒரு அரிய செல்வம். உங்களிடமிருந்து கற்றுக் கொள்ளும் பயணம் எப்போதும் தொடரும்.