Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நடிகர் மாதவனின் நடிப்பில் மிஸ் செய்யக்கூடாத படங்களின் லிஸ்ட் இதோ

Actor Madhavan: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் மாதவன் இன்று தனது 55-வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். இந்த நிலையில் அவரது நடிப்பில் தமிழில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தப் படங்களின் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

நடிகர் மாதவனின் நடிப்பில் மிஸ் செய்யக்கூடாத படங்களின் லிஸ்ட் இதோ
நடிகர் மாதவன்Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 01 Jun 2025 19:49 PM

அலைபாயுதே: இயக்குநர் மணிரத்னம் (Director Maniratnam) இயக்கத்தில் கடந்த 2000-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தப் படம் அலைபாயுதே. இந்தப் படத்தில் நடிகர் மாதவன் நாயகனாக நடித்து இருந்தார். இது இவர் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆன முதல் படம் ஆகும். இந்தப் படத்தில் நாயகியாக நடிகை ஷாலினி அஜித் நடித்திருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ஜெயசுதா, விவேக், பிரமீட் நடராஜன் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்துக்கொள்ளும் இளைஞர்களை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி இருந்தது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார். படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட். குறிப்பாக மாதவனின் என்ட்ரிக்கு மேடி மேடி ஓ ஓ மேடி என்ற பின்னணி இசையை ஏ.ஆர்.ரகுமான் தெரிக்கவிட்டு இருப்பார். இதனைத் தொடர்ந்தே ரசிகர்கள் மாதவனை மேடி என்று அழைக்கத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

மின்னலே: இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2001-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானப் படம் மின்னலே. இந்தப் படத்தின் மூலமாகவே இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்குநராக சினிமாவில் அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நாயகியாக நடிகை ரீமாசென் நடித்து இருந்தார்.

இவர்களுடன் இணைந்து நடிகர்கள் அப்பாஸ், விவேக், நாகேஷ், ஃபாத்திமா பாபு, ராஜிவ் சௌத்ரி என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ராஜ் இசையமைத்து இருந்தார். மேலும் இதுதான் இவருக்கு இசையமைப்பாளராக அறிமுகம் ஆன முதல் படம் ஆகும். படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

டும் டும் டும்: இயக்குநர் அழகம் பெருமாள் இயக்கத்தில் கடந்த 2001-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் டும் டும் டும். இந்தப் படத்தில் நாயகனாக நடிகர் மாதவன் நடித்திருந்த நிலையில் நடிகை ஜோதிகா நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் விவேக், மணிவண்ணன், முரளிதரன் பிள்ளை, வி.கே.ராமசாமி, கல்பனா, டெல்லி குமார் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையமைத்து இருந்தார். படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனது குறிப்பிடத்தக்கது.

ஜே ஜே: இயக்குநர் சரண் இயக்கத்தில் கடந்த 2003-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ஜே ஜே. இந்தப் படத்தில் நடிகர் மாதவன் நாயகனாக நடித்து இருந்தார். நடிகை பிரியங்கா கோதாரி நாயகியாக நடித்து இருந்தார். வித்யாசமான கதைக்களத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பூஜா, கலாபவன் மணி, சார்லி, டெல்லி கணேஷ், தாமு மற்றும் மாளவிகா அவினாஷ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையமைத்து இருந்தார். பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

கட்டுக்கட்டாக பணம்.. டெல்லியை அதிரவைத்த சம்பவம்!
கட்டுக்கட்டாக பணம்.. டெல்லியை அதிரவைத்த சம்பவம்!...
விறுவிறுப்பான த்ரில்லர்.. ஓடிடியில் பார்க்க அருமையான படம்!
விறுவிறுப்பான த்ரில்லர்.. ஓடிடியில் பார்க்க அருமையான படம்!...
போலி கஸ்டமர் கேர்: ரூ.10000 மீட்க ஒரு லட்சத்தை இழந்த விவசாயி..!
போலி கஸ்டமர் கேர்: ரூ.10000 மீட்க ஒரு லட்சத்தை இழந்த விவசாயி..!...
இரண்டு பேரையும் சினிமாவிற்கு வரவேண்டானு அப்பா சொன்னாரு- கார்த்தி!
இரண்டு பேரையும் சினிமாவிற்கு வரவேண்டானு அப்பா சொன்னாரு- கார்த்தி!...
தூத்துக்குடியை அதிர வைத்த இரட்டை கொலை.. நடந்தது என்ன?
தூத்துக்குடியை அதிர வைத்த இரட்டை கொலை.. நடந்தது என்ன?...
வாழ்நாள் சிறப்பு பயணம்- இந்தியா விசிட் குறித்து பேசிய உஷா வான்ஸ்!
வாழ்நாள் சிறப்பு பயணம்- இந்தியா விசிட் குறித்து பேசிய உஷா வான்ஸ்!...
மாதாந்திர ரயில் டிக்கெட் பெற செயலி கட்டாயம்..? பயணிகள் அவதி
மாதாந்திர ரயில் டிக்கெட் பெற செயலி கட்டாயம்..? பயணிகள் அவதி...
ஐபிஎல் பைனலில் மோதும் RCB vs PBKS! எந்த அணி இதுவரை ஆதிக்கம்?
ஐபிஎல் பைனலில் மோதும் RCB vs PBKS! எந்த அணி இதுவரை ஆதிக்கம்?...
வீடு புகுந்து கல்லூரி மாணவி குத்திக் கொலை.. பொள்ளாச்சியில் ஷாக்
வீடு புகுந்து கல்லூரி மாணவி குத்திக் கொலை.. பொள்ளாச்சியில் ஷாக்...
முதல் கோப்பை யாருக்கு..? மோதும் RCB-PBKS! போட்டியை எங்கு காணலாம்?
முதல் கோப்பை யாருக்கு..? மோதும் RCB-PBKS! போட்டியை எங்கு காணலாம்?...
உள்ளம் கேட்குமே படத்தால எனக்கு லைலாவ பிடிக்காமயே போயிடுச்சு...
உள்ளம் கேட்குமே படத்தால எனக்கு லைலாவ பிடிக்காமயே போயிடுச்சு......