Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தெலுங்கு நடிகருக்கு நோ… மணிரத்னத்தின் அடுத்தப் பட நாயகன் இவரா?

Director Maniratnam: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருப்பவர் இயக்குநர் மணிரத்னம். இவர் தற்போது தக் லைஃப் படத்தை இயக்கியுள்ள நிலையில் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளது. இந்த நிலையில் அடுத்ததாக அவர் இயக்க் உள்ள படம் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தெலுங்கு நடிகருக்கு நோ… மணிரத்னத்தின் அடுத்தப் பட நாயகன் இவரா?
மணிரத்னம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 01 Jun 2025 17:34 PM

தமிழ் சினிமா மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் முன்னணி நடிகர்கள் முதல் சின்ன சின்ன நடிகர்கள் வரை ஒரு முறையாவது இந்த இயக்குநரின் இயக்கத்தில் நடித்து விட வேண்டும் என்று நினைப்பது மணிரத்னம் (Director Mani Ratnam) தான். அப்படி சினிமா துறையில் கொடிக்கட்டி பறக்கும் இயக்குநர் மணிரத்னம் தற்போது தக் லைஃப் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். முன்னதாக இவரது இயக்கத்தில் வெளியான பொன்னியில் செல்வன் படத்தின் பாகம் ஒன்று மற்றும் பாகம் இரண்டு ஆகியவை சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த நிலையில் அடுத்ததாக வெளியாக உள்ள தக் லைஃப் படத்தின் மீதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள தக் லைஃப்:

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள தக் லைஃப் படம் ஜூன் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. இந்தப் படத்தில் நடிகர்கள் கமல் ஹாசன் மற்றும் சிலம்பரசன் உடன் இணைந்து நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், ஜோஜூ ஜார்ஜ், அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, நாசர், சான்யா மல்கோத்ரா, வடிவுக்கரசி என பலர் நடித்துள்ளனர்.

தக் லைஃப் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

இயக்குநர் மணிரத்னம் இயக்கும் அடுத்தப் படத்தின் நாயகன் யார்?

இந்த நிலையில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் அடுத்தாக உருவாக உள்ள படம் குறித்த தகவல்க முன்னதாக வெளியாகி இணையத்தில் வைரலானது. அந்தப் படம் முழுக்க முழுக்க காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாக உள்ளது என்றும் அதில் தெலுங்கு நடிகர் நவீன் பொலிஷெட்டி நாயகனாகவும் நடிகை ருக்மணி நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வைரலானது.

இது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இயக்குநர் மணிரத்னம் தான் முழுக்க முழுக்க ஒரு காதல் கதையை படமாக பன்னவில்லை என்றும். அப்படி ஒரு படத்தை எடுக்க முடியாது என்றும் வெளிவரும் எந்த தகவல்களும் உண்மை இல்லை என்றும் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் மணிரத்னம் இயக்கும் அடுத்தப் படத்தில் நடிகர் சிம்புதான் நாயகன் என்று தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

நடிகர் சிம்பு மணிரத்னம் இயக்கத்தில் நிறைய படங்களில் நடிக்கவில்லை என்றாலும் இயக்குநர் மணிரத்தினத்திற்கு சிம்பு மீது தனி பாசம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை அவர் பல மேடைகளில் வெளிப்படையாக பேசியுள்ளார். இந்த நிலையில் சிம்பு அடுத்தப் படத்தில் நாயகன் என்றும் நடிகை ருக்மணி நாயகி என்றும் வெளியான தகவல் உண்மையாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.