Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பே விற்றுத்தீர்ந்த சூர்யா 46 ஓடிடி உரிமை

Suriya 46 OTT update: நடிகர் சூர்யா தற்போது தனது 45-வது படத்தில் விறுவிறுப்பாக நடித்து வரும் நிலையில் அவர் தனது 46-வது படத்திற்காக இயக்குநர் வெங்கி அட்லூரி உடன் கூட்டணி வைத்துள்ளார். படத்தின் பூஜை சமீபத்தில் நடித்த நிலையில் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே ஓடிடி உரிமை விற்றுத் தீர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பே விற்றுத்தீர்ந்த சூர்யா 46 ஓடிடி உரிமை
மமிதா பைஜு, வெங்கி அட்லூரி, சூர்யாImage Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 01 Jun 2025 11:14 AM

நடிகர் சூர்யா (Actor Suriya) நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் ரெட்ரோ. இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருந்த இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவிற்கு நாயகியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் சுவாசிகா, நாசர், ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், சிங்கம்புலி என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு ஒரு ப்ளாக் பஸ்டர் ஹிட்டை கொடுத்தது இந்த ரெட்ரோ படம். இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார். படத்தில் வந்த அனைத்துப் பாடல்களுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சூர்யா அடுத்தடுத்தப் படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறார்.

ஆர்.ஜே.பாலாஜி உடன் கூட்டணி வைத்த சூர்யா:

ரெட்ரோ படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடையும் முன்னறே நடிகர் சூர்யா இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே.பாலாஜி உடன் கூட்டணி வைத்தார் தனது 45-வது படத்திற்காக. இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா நாயகியாக நடித்து வருகிறார். படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.

மேலும் படம் குறித்து சமீபத்தில் பேசிய தயாரிப்பாளர் ஷூட்டிங் விரைவில் முடிவடைய உள்ளதாகவும் படம் ஒரு பண்டிகை நாளில் தான் நிச்சயமாக வெளியாகும் என்று அவர் தெரிவித்தார். அப்போது தீபாவளிக்கு வெளியாகுமா என்று செய்தியாளர்கள் கேட்கும் போது சிரித்துக்கொண்டே பண்டிகை நாளில் என்று தெரிவித்தார்.

வெங்கி அட்லூரி உடன் கூட்டணி வைத்த சூர்யா:

ரெட்ரோ படத்தின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வரும் போதே நடிகர் சூர்யா வெங்கி அட்லூரி உடன் கூட்டணி வைத்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து சமீபத்தில் படத்தின் பூஜை நடைப்பெற்றது. இதில் நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் வெங்கி அட்லூரி உடன் நடிகை மமிதா பைஜு மற்றும் இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் குமாரும் இருந்தனர்.

சூர்யா 46 குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:

இதன் மூலம் சூர்யாவின் 46-வது படத்தில் நடிகை மமிதா பைஜு அவருக்கு நாயகியாக நடிக்க உள்ளதது உறுதி ஆனது. மேலும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைக்க உள்ளதும் உறுதி செய்யப்பட்டது. ஜி.வி.பிரகாஷ் குமார் முன்னதாக வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த லக்கி பாஸ்கர் படத்திற்கும் இசையமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா 46 ஓடிடி உரிமை:

நடிகர் சூர்யாவின் 46-வது படமாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகும் இதை பிரபல தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்குவதற்கு முன்பே படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கிவிட்டதாகவும் சுமார் 85 கோடிகள் கொடுத்து படத்தை வாங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.

'கமல் சார் சொன்னால் அதில் அர்த்தம் இருக்கும்' - கிஷோர் ஆதரவு
'கமல் சார் சொன்னால் அதில் அர்த்தம் இருக்கும்' - கிஷோர் ஆதரவு...
தனுஷின் குபேரா படத்திலிருந்து வெளியான இரண்டாவது சிங்கிள்!
தனுஷின் குபேரா படத்திலிருந்து வெளியான இரண்டாவது சிங்கிள்!...
கொரோனாவை கண்டறியும் புதிய கருவி - அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை
கொரோனாவை கண்டறியும் புதிய கருவி - அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை...
ஆசிய சாம்பியன்ஷிப்பில் 2ம் இடம்.. இந்திய வீரர்களை வாழ்த்திய மோடி!
ஆசிய சாம்பியன்ஷிப்பில் 2ம் இடம்.. இந்திய வீரர்களை வாழ்த்திய மோடி!...
மணிரத்னம் இயக்கத்தில் மிஸ் செய்யக்கூடாத படங்களின் லிஸ்ட் இதோ
மணிரத்னம் இயக்கத்தில் மிஸ் செய்யக்கூடாத படங்களின் லிஸ்ட் இதோ...
சென்சார் சான்றிதழ் வழங்க மறுப்பு தொடர்பாக வெற்றிமாறன் வழக்கு!
சென்சார் சான்றிதழ் வழங்க மறுப்பு தொடர்பாக வெற்றிமாறன் வழக்கு!...
தக் லைஃப் பட சர்ச்சையில் கர்நாடகா துணை முதல்வர் கருத்து!
தக் லைஃப் பட சர்ச்சையில் கர்நாடகா துணை முதல்வர் கருத்து!...
இந்த மூன்று நடிகர்களில் யார் படத்திற்கு நீங்க வெயிட்டிங்...
இந்த மூன்று நடிகர்களில் யார் படத்திற்கு நீங்க வெயிட்டிங்......
முதுகலை நீட் தேர்வு ஒத்திவைப்பு! அதிர்ச்சியில் மாணவர்கள்..!
முதுகலை நீட் தேர்வு ஒத்திவைப்பு! அதிர்ச்சியில் மாணவர்கள்..!...
மகன் பவனின் முதல் பிறந்தநாள்.. புகைப்படத்தைப் பகிர்ந்த SK!
மகன் பவனின் முதல் பிறந்தநாள்.. புகைப்படத்தைப் பகிர்ந்த SK!...
நடிகர் நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா...
நடிகர் நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா......