விற்றுத் தீர்ந்தது விஜய்யின் ஜன நாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமை
Jana Nayagan Movie: நடிகர் விஜய் நடிப்பில் தற்போது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் ஜன நாயகன். தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருக்கும் இவருக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு வயதினரையும் கவர்ந்தவர் என்ற பெருமை இவருக்கு உள்ளது.

நடிகர் விஜய் (Actor Vijay) கோலிவுட் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போது தனது சினிமா வாழ்க்கையை விட்டு விலகி அரசியலில் ஈடுபட்டு மக்களுக்காக பணியாற்ற முடிவு செய்துள்ளார். இதன் காரணமாக நடிகர் விஜய் நடிக்கும் கடைசிப் படம் இது என்று அவர் முன்னதாக அறிவித்து இருந்தார். விஜயின் 69-வது படமாக இருக்கும் இந்தப் படத்தை யார் இயக்க உள்ளார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த போது இயக்குநர் எச். வினோத் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இவர் முன்னதாக சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் யார் என்று அறிவித்த பிறகு படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்களை தொடர்ந்து படக்குழு வெளியிட்டு வருகின்றது.
இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகர் விஜய்க்கு நாயகியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இவர் முன்னதாக விஜய் உடன் இணைந்து பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார். மேலும் இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன், பிரியாமணி, ஸ்ருதி ஹாசன், மமிதா பைஜு, மோனிஷா பிளெஸ்ஸி மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
விஜய்யின் 69-வது படத்திற்கு என்ன தலைப்பு இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் படத்திற்கு ஜன நாயகன் என படக்குழு பெயரை அறிவித்தது. விஜய் தீவிர அரசியலில் ஈடுபட உள்ள நிலையில் இந்த தலைப்பு வெளியானது வைரலானது. மேலும் படம் அரசியல் கதையை மையமாக வைத்து உருவாகி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
ஜன நாயகன் படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
பொங்கலுக்கு வருகிறோம்!
ಸಂಕ್ರಾಂತಿಗೆ ಬರುತ್ತಿದ್ದೇವೆ!
సంక్రాంతికి వస్తున్నాం!
पोंगल पर आ रहे हैं!
പൊങ്കലിന് വരുന്നു!
09.01.2026 ❤️#JanaNayaganFromJan9#Thalapathy @actorvijay sir #HVinoth @thedeol @prakashraaj @menongautham #Priyamani @itsNarain @hegdepooja @_mamithabaiju… pic.twitter.com/WIYOpyyQlN
— KVN Productions (@KvnProductions) March 24, 2025
ஜன நாயகன் படத்தில் இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்திரன் இசையமைத்து வருகிறார். மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரடெக்ஷன் தயாரித்து வருகிறது. மேலும் இந்த தயாரிப்பு நிறுவனம் தமிழில் தயாரிக்கும் முதல் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படம் வருகின்ற ஜனவரி மாதம் 9-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் படத்தின் சாட்டிலைட் உரிமை விற்பனை குறித்த தகவல்கள் சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைராகி வருகின்றது.
அதன்படி படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சன் டிவி வாங்கியுள்ளதாக தெரிவிக்கின்றனர். மேலும் சுமார் ரூபாய் 55 கோடிகள் கொடுத்து வாங்கியதாகவும் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.