Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கமல் ஹாசனின் பேச்சால் நெகிழ்ந்த நடிகர் நானி… வைரலாகும் வீடியோ!

Actor Nani: நடிகர் நானி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியபோது நடிகர் கமல் ஹாசன் விருமாண்டி படத்தில் நடித்த ஒரு காட்சி குறித்து பேசியிருந்தார். அது குறித்து நடிகர் கமல் ஹாசன் தற்போது பேசியது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் நானி நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.

கமல் ஹாசனின் பேச்சால் நெகிழ்ந்த நடிகர் நானி… வைரலாகும் வீடியோ!
கமல் ஹாசனுடன் நடிகர் நானிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 29 May 2025 17:32 PM

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் நானி (Actor Nani). ரசிகர்களால் அனுபுடன் நேச்சுரல் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ஹிட் 3. இந்தப் படம் கடந்த 1-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் நடிகர் நானியின் ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து இந்த ஹிட் 3 படத்தில் சூரியா ஸ்ரீவாஸ், ராவ் ரமேஷ், சமுத்ரகனி, நெப்போலியன், ரவீந்த்ர விஜய் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படத்தை இயக்குநர் சைலேஷ் கொலானு எழுதி இயக்கி இருந்தார். மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் மிக்கி ஜே. மேயர் இசையமைத்து இருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு முன்னதாக நடிகர்கள் நானி மற்றும் ஸ்ரீ நிதி ஷெட்டி உட்பட படக்குழுவினர் அனைவரும் தென்னிந்திய மாநிலங்களுக்கு சென்று தங்களது புரமோஷன் பணிகளில் ஈடு பட்டு வந்தனர். அப்போது நடிகர் நானி தமிழகத்திற்கு வந்த போது பேட்டி ஒன்றில் நடிகர் கமல் ஹாசனின் நடிப்பு குறித்து புகழ்ந்து பேசியிருந்தார்.

கமல் ஹாசனின் நடிப்பு குறித்து நடிகர் நானி பேசிய வீடியோ:

அதில், விருமாண்டி படத்தில் வரும் ஒரு கோர்ட் காட்சியில் நடிகர் கமல் ஹாசன் பெஞ்சில் அமர்ந்து தூங்கிக் கொண்டிருப்பார். அப்போது அருகில் இருந்தவர் அவரை எழுப்பும் போது நிஜமாகவே தூங்கிக் கொண்டிருந்த நபர் எப்படி எழுந்துகொள்வாறோ அப்படி இருந்தது கமல் ஹாசனின் நடிப்பு. இதனை நான் ஹாய் நானா என்றப் படத்தில் ட்ரை செய்து பார்த்தேன்.

ஆனால் என்னால் கமல் ஹாசன் அளவிற்கு அதனை அத்தனை தத்ரூபமாக செய்ய முடியவில்லை. அவர் ஒரு லெஜெண்ட் என்று குறிப்பிட்டு பேசியிருந்தார். இந்த வீடியோ அப்போ நானி பேசிய போதே ரசிகர்கள் வைரலாக்கினர். மேலும் விருமாண்டி படத்தில் வரும் அந்த காட்சியும் அதிக அளவில் பகிரப்பட்டது.

நானி குறித்து பேசிய கமல் ஹாசன்:

தக் லைஃப் படத்தின் புரமோஷன் பணிகளில் தீவிரமாக இருக்கும் நடிகர் கமல் ஹாசனிடம் நானி விருமாண்டி படத்தில் அவரது நடிப்பு குறித்து பேசியதை அவரது பெயரைக் குறிப்பிடாமல் செய்தியாளர் ஒரு கேள்வியை எழுப்ப முயல்கிறார். அதற்கு உடனே பதிலளித்த கமல் ஹாசன் நானி பேசினது சொல்றீங்களா என்கிறார்.

நடிகர் கமல் பேசிய வீடியோ:

தொடர்ந்து பேசிய கமல் ஹாசன் நான் நானினு சொன்னதே போது அவருக்கு. அது புரியும் நான் நன்றி நானி என்று சொல்லத் தேவையில்லை. ஒரு நடிகனுக்கு தனது நடிப்பு சரியாக புரிந்துகொள்ளப்படுவதே மகிழ்ச்சி என்றும், அதே போல நானிக்கு நன்றி சொல்லாமல் அவர் பெயரை நான் குறிப்பிடுவதே அவருக்கு போதும் என்று தெரிவித்தார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலான நிலையில் நடிகர் நானி தனது எக்ஸ் தள பக்கத்தில் போதும் சார் என்று பதிவிட்டு நடிகர் கமல் ஹாசனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்தப் பதிவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகர் நானியின் எக்ஸ் தள பதிவு: