மலரே நின்னை காணாதிருந்நால்… 10 ஆண்டுகளை நிறைவு செய்தது நிவின் பாலி – சாய் பல்லவி நடிப்பில் வெளியான பிரேமம்!
10 Years Of Premam: இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி நாயகனாகவும் நடிகைகள் அனுபமா பரமேசுவரன், சாய் பல்லவி மற்றும் மடோனா செபாஸ்டின் ஆகியோர் நாயகிகளாவும் நடித்தப் படம் பிரேமம். இந்தப் படம் தாற்போது 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் (Director Alphones Puthran) இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் 29-ம் தேதி மலையாளத்தில் வெளியானது பிரேமம் படம். இந்தப் படத்தில் நடிகர் நிவின் பாலி நாயகனாக நடித்து இருந்தார். மேலும் நாயகிகளாக நடிகை அனுபமா பரமேசுவரன், சாய் பல்லவி, மடோனா செபாஸ்டின் ஆகியோர் நடித்து இருந்தனர். இவர்களுடன் இணைந்து ஷபரீஷ் வர்மா, கிருஷ்ணா சங்கர், சிஜு வில்சன், அனந்த் நாக், வினய் ஃபோர்ட், சௌபின் ஷாஹிர், ஷரபுதீன் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சாய் பல்லவி இந்தப் படத்தின் மூலமாக தான் நடிகையாக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேஷன் இசையமைத்து இருந்தார்.
படத்தில் வந்த பாடல்கள் மற்றும் பின்னணி இசை அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக மலரே நின்னை காணாதிருந்நால், ஆலுவா ஆகிய பாடல்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதுமட்டும் இன்றி படத்தின் பின்னணி இசையாக வந்த சின்ன சின்ன போர்ஷன்களும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
பிரேமம் படத்தின் கதை என்ன?
படத்தின் நாயகனாகா ஜார்ஜ் (நிவின் பாலி) வாழ்க்கையின் மூன்று பகுதிகளில் நடக்கும் காதல் கதையை மையமாக வைத்து வெளியான படம் தான் பிரேமம். இதில் பள்ளியில் படிக்கும் போது மேரி (அனுபமா பரமேசுவரன்) என்ற பெண்ணை சர்ச்சில் வைத்து பார்க்கிறார். அவரைப் பார்த்ததும் அவர்மீது காதல் வயப்படுகிறார்.
பின்னர் மேரியிடம் ஜார்ஜ் காதலை சொல்ல நினைக்கும் போது மேரி வேற ஒரு பையனை காதலிப்பது தெரிகிறது. மேலும் அந்த காதலுக்கு உதவ வேண்டும் என்று மேரி ஜார்ஜ்ஜிடமே கேட்க அவர் மிகவும் வருத்தம் அடைகிறார். ஆனாலும் மேரியின் காதலுக்கு உதவி செய்கிறார் ஜார்ஜ்.
அதனைத் தொடர்ந்து ஜார்ஜ் மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் பள்ளியில் இருந்தே ஒன்றாக இருக்கும் கோயா (கிருஷ்ணா சங்கர்) ஷம்பு (ஷபரீஷ் வர்மா) ஆகியோருடன் கல்லூரியில் படித்து வருகிறார். படிக்கும் போதே ஏற்பட்ட கேங் வார் காரணமாக கல்லூரியில் இருந்து ஜார்ஜ் மற்றும் அவரது நண்பர்கள் கோயா மற்றும் ஷம்பு ஆகியோரும் 15 நாட்களுக்கு டிஸ்மிஸ் செய்யப்படுகிறார்கள்.
அதனைத் தொடர்ந்து மீண்டும் கல்லூரிக்கு வரும் மூவரும் கல்லூரியில் புதிதாக சேர்ந்த மாணவர்களை ராகிங் செய்கிறார்கள். அப்போது புடவையில் சென்ற பெண் ஒருவரை அழைக்கிறார் ஜார்ஜ். உன் பேர் என்ன என்று கேட்க அவர் மலர் (சாய் பல்லவி) என்று கூறிகிறார். மலரா தமிழா என்று மூவரும் ஆச்சரியமாக பார்க்கிறார்கள்.
அதனை தொடர்ந்து மலரிடம் இங்க என்ன படிக்க வந்து என்று கேட்க மலர் நான் இங்க படிக்க வரல உதவி ஆசிரியராக வந்துள்ளேன் என்று தெரிவிக்கவிம் பிரின்சிபலிடம் சொல்லாதீங்க என்று மன்னிப்பு கேட்டுவிட்டு அவர்கள் அங்கு இருந்து உள்ளே செல்கிறார்கள். அங்கு சென்று வகுப்பில் இருக்கும் போதுதான் மலர் அவர்களது டிபார்ட்மெண்டுக்கு ஆசிரியராக வந்துள்ளார் என்பதை தெரிந்துகொள்கின்றனர்.
நடிகர் நிவின் பாலி வெளியிட்ட இன்ஸ்டா பதிவு:
View this post on Instagram
அப்போது ஜார்ஜுக்கு மலர் மீது காதல் வருகிறது. பின்பு அவருடன் பேசிப் பழகி மலருக்கும் ஜார்ஜ் மீது விருப்பம் வருகிறது. இருவரும் ஒன்றாக மகிழ்ச்சியாக இருக்கும் போது கல்லூரியின் விடுமுறை வரும்போது மலர் சொந்த ஊரான கொடக்கானலுக்கு செல்கிறார். அப்போது விபத்து ஏற்பட்டு பழைய நினைவுகள் அனைத்தையும் மறந்துவிடுகிறார்.
இதனால் ஜார்ஜ் மீதான காதலும் மலருக்கு மறந்துவிடுகிறது. இதனால் மனமுடைந்த ஜார்ஜ் காதல் தோல்வியில் இருக்கிறார். பின்பு அனைத்தையும் மறந்து ஒரு பேக்கரி ஒன்றை நடத்தி வருகிறார். அப்போது பேக்கரிக்கு கேக் வாங்க வருகிறார் செலின் (மடோனா செபாஸ்டின்). அங்கு கேக் வாங்கிவிட்டு சென்றபிறகு மீண்டும் ஒரு இடத்தில் இருவரும் சந்திக்கிறார்கள்.
அப்போது செலின் ஜார்ஜ்ஜிடம் நாம ஏற்கனவே சந்தித்துள்ளோம் என்று கூறுகிறார். அப்போது யோசிக்கும் ஜார்ஜ்ஜிடம் தான் மேரியின் தங்கை செலின் என்று சொல்கிறார். செலின் பள்ளியில் படிக்கும் போது ஜார்ஜ் காதலித்த மேரியின் தங்கை என்பதை புரிந்துகொள்கிறார். அதன் பிறகு இவருவரும் பேசி வருகிறார்கள். அப்போது செலின் மீது ஜார்ஜிற்கு காதல் ஏற்படுகின்றது.
அதிலும் ஒரு சிக்கல் வருகின்ற நிலையில் இனி காதல் வேண்டாம் என்று ஜார்ஜ் நினைக்கிறார். ஆனால் செலின் மீண்டும் ஜார்ஜிடம் காதலை தெரிவிக்கிறார். இதனைத் தொடர்ந்து இவர்களது திருமணம் சொந்தம் நண்பர்கள் உடன் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. இதற்கு ஜார்ஜ்ஜின் காதலி மலரும் வருகிறார்.
ஆனால் அவருக்குப் பழைய நினைவுகள் வந்தது எதையும் கூறாமல் ஜார்ஜ்ஜிடம் வாழ்த்துகளை தெரிவித்துவிட்டு தனது காதலுடன் அந்த இடத்தில் இருந்து செல்கிறார் மலர்… வெற்றியடைந்த ஜார்ஜ் – செலினின் காதலை விட பிரிந்த ஜார்ஜ் மற்றும் மலரின் காதலை ரசிகர்கள் அதிகமாகக் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.
மலையாளத்தில் இந்தப் படம் வெளியாகி இருந்தாலும் தென்னிந்திய ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாடித் தீர்த்தனர். குறிப்பாக தமிழ் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது பிரேமம் படம்… இது தற்போது 10 ஆண்டுகளை நிறைவு செய்ததை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.