வெளியானது ராம் சரணின் பெடி படத்தின் புது ரிலீஸ் தேதி
Peddi Movie New Release Date: நடிகர் ராம் சரண் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் பெடி. இந்தப் படத்தின் வெளியீட்டு தேதி முன்னதாக அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது பெடி படத்தின் புது வெளியீட்டு தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது.
தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் சிரஞ்சீவி. இவர் சுமார் 50 வருடங்களுக்கு மேலாம தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். அதன்படி இவரது நடிப்பில் சமீபத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான மன சங்கர வர பிரசாத் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இவரது மகன் ராம் சரண் கடந்த 2007-ம் ஆண்டு முதல் தெலுங்கு சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகி நடித்து வருகிறார். தொடர்ந்து ராம் சரண் நடிப்பில் வெளியாகும் படங்களும் அவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் ராம் சரண் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் கேம் சேஞ்சர். இந்தப் படத்தை இயக்குநர் சங்கர் எழுதி இயக்கி இருந்தார். இது ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து இயக்குநர் புச்சி பாபு சனா உடன் கூட்டணி வைத்தார் நடிகர் ராம் சரண். இந்தப் படத்திற்கு பெடி என்று பெயர் வைத்தனர். படத்தில் நடிகர் ராம் சரணுக்கு ஜோடியாக நடிகை ஜான்வி கபூர் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில் பாடல்களும் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




வெளியானது ராம் சரணின் பெடி படத்தின் புது ரிலீஸ் தேதி:
முன்னதாக ராம் சரண் நடிப்பில் உருவாகி உள்ள பெடி படம் மார்ச் மாதம் 27-ம் தேதி 2026-ம் ஆண்டு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. பிறகு படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்படுவதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வந்தது. இந்த நிலையில் தற்போது படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 30-ம் தேதி 2026-ம் ஆண்டு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ராம் சரண் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… Silambarasan: எனக்கு அந்த மாதிரியான மனைவிதான் வேணும் – சிலம்பரசன் சொன்ன விஷயம்!
நடிகர் ராம் சரண் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#PEDDI will see you on 30th APRIL, 2026 💪🏻🔥@NimmaShivanna #JanhviKapoor @BuchiBabuSana @arrahman @vriddhicinemas @VenkataSKilaru @MythriOfficial @SukumarWritings @PeddiMovieOffl pic.twitter.com/TTfrxi773W
— Ram Charan (@AlwaysRamCharan) February 4, 2026