AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திரையரங்குகளில் 25 நாட்களைக் கடந்த பராசக்தி படம் – போஸ்டர் வெளியிட்டு கொண்டடும் படக்குழு

25 Days Of Parasakthi Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான பராசக்தி திரைப்படம் தற்போது 25 நாட்களைக் கடந்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு கொண்டாடி வருகின்றது.

திரையரங்குகளில் 25 நாட்களைக் கடந்த பராசக்தி படம் – போஸ்டர் வெளியிட்டு கொண்டடும் படக்குழு
பராசக்தி படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 03 Feb 2026 17:47 PM IST

தமிழ் சினிமா மட்டும் இன்றி பான் இந்திய அளவில் சினிமாவில் மக்கள் கொண்டாடும் பண்டிகை காலங்களில் தொடர்ந்து படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது. அதன்படி இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்கள் பலரின் படங்கள் தொடர்ந்து திரையரங்குகளில் வெளியானது. அதன்படி தமிழ் சினிமாவில் மட்டும் கார்த்தி, ஜீவா மற்றும் சிவகார்த்திகேயனின் படங்கள் திரையரங்களில் வெளியானது. அதன்படி நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான படம் பராசக்தி. இந்தப் படம் கடந்த 10-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான நிலையில் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து நடிகர்கள் பலர் இணைந்து நடித்து இருந்தனர்.

மேலும் இந்தப் படத்தினை இயக்குநர் சுதா கொங்கரா எழுதி இயக்கி இருந்த நிலையில் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் ஆகாஸ் பாஸ்கரன் தயாரித்து இருந்தார். படம் வசூலில் இதுவரை 100 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக முன்னதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது.

திரையரங்குகளில் 25 நாட்களைக் கடந்த பராசக்தி படம்:

இந்த நிலையில் படம் இந்தி எதிர்ப்பு கொள்கையை மையமாக வைத்து உருவாகி இருந்த நிலையில் படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி 25 நாட்களைக் கடந்துள்ளது. மேலும் இந்தப் படத்தில் இருந்து தொடர்ந்து பாடலின் வீடியோ வெளியாகி வைரலாகி வரும் நிலையில் இன்று 25 நாட்களைக் கடந்ததை முன்னிட்டு போஸ்டர் வெளியிட்டு படக்குழு கொண்டாடி வருகின்றது. மேலும் இதனை ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

Also Read… துல்கர் சல்மன் – மிருணாள் தாக்கூர் நடிப்பில் வெளியானது ஆல்பம் பாடல்

பராசக்தி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… தனுஷ் – எச்.வினோத் கூட்டணியில் புது திருப்பம்.. எச்.வினோத்தின் புது படம் யாருடன்?

Follow Us