ஓடிடியில் வெளியாகி உள்ள நிவின் பாலியின் சர்வம் மாயா படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
Sarvam Maya Movie Review: மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் நிவின் பாலி. இவரது நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் சர்வம் மாயா. இந்தப் படம் தற்போது ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
மலையாள சினிமாவில் கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கடந்த 2025-ம் ஆண்டு 25-ம் தேதி டிசம்பர் மாதம் வெளியான படம் சர்வம் மாயா. இந்தப் படம் ஹாரர் காமெடி மற்றும் செண்டிமெண்ட் பாணியில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. திரையரங்குகளில் வெளியான போது விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் இந்த சர்வம் மாயா படம் சாதனைப் படைத்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் நிவின் பாலி நாயகனாக நடித்து இருந்தார். இவருடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்த சர்வம் மாயா படத்தை இயக்குநர் அகில் சத்யன் எழுதி இயக்கி இருந்த நிலையில் பிரபல தயாரிப்பு நிறுவனங்களான ஃபயர்ஃப்லை ஃபிலிம்ஸ் மற்றும் அகில் சத்யன் பிலிம்ஸ் இணைந்து தயாரித்து இருந்தது.
திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த சர்வம் மாயா படம் தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் இந்தப் படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
நிவின் பாலியின் சர்வம் மாயா படம் எப்படி இருக்கு?
கேரளாவில் மிகவும் பிரபலமான நம்பூதரி குடும்பத்தைச் சேர்த்த நிவின் பாலி தனது அம்மாவின் இறப்பிற்குப் பிறகு தந்தை மீது கோபமடைந்து வீட்டை விட்டு வெளியே சென்று கிட்டாரிஸ்டாக பணிபுரிகிறார். ஆனால் அந்த வேலையில் சரியான வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் மீண்டும் வீட்டிற்கு வந்து தனது அத்தை மகனாக அஜூ வர்கீஸ் உடன் இணைந்து நம்பூதரி வேலையை செய்து வருகிறார்.




அம்மாவின் இறப்பிற்கு பிறகு கடவுள் நம்பிக்கையில்லை என்று சொல்லிக்கொண்டே இருக்கும் நிவின் பாலி அஜு வர்கீஸ் உடன் இணைந்து நம்பூதரி வேலை செய்துக்கொண்டிருக்கும் போது அஜூ வர்கீஸிற்கு விபத்து ஏற்பட்டு படுத்தபடுக்கை ஆகிறார். அதன்பிறகு தனியாக அந்த வேலையை செய்துவந்த நிவின் பாலிக்கு ஒரு நாள் பள்ளியில் படிக்கும் சிறுவனுக்கு பேய் பிடித்துள்ளது என்று அதனை ஓட்ட செல்கிறார்.
Also Read… 2026ல் வெளியாகும் நயன்தாராவின் 6 படங்கள் – என்னென்ன தெரியுமா?
அங்கு சென்ற இடத்தில் நிவின் பாலி எதுவும் செய்வதற்கு முன்பே அந்த பையனுக்கு சரியாகிவிடுகிறது. இதனைத் தொடர்ந்து யோசித்துக்கொண்டே வீட்டிற்கு வரும் நிவின்பாலியின் கண்களுக்கு அந்த பேய் தெரிகிறது. அவர்தான் நாயகி ரியா ஷிபு. இவர் எப்படி உயிரிழந்தார் என்பது அவருக்கே தெரியவில்லை. முதலில் அவரைப் பார்த்து நிவின்பாலி பயந்தாலும் போக போக இருவரும் நெறுக்கமாகிறார்கள்.
இந்தப் படத்தைப் பார்க்கும் பார்வையாளர்களுக்கும் இது ஒரு பேய் என்பதே மறந்து போகும் அளவிற்கு அவர்கள் இருவரின் உறவு அழகாக தெரியும். இறுதியில் ரியா ஷிபு தான் எப்படி உயிரிழந்தார் என்பதை எவ்வாறு தெரிந்துகொள்கிறார் என்பதே படத்தின் கதை. இந்தப் படத்தைப் பாப்பவர்களுக்கு நிச்சயமாக ஒரு உணர்வு ஏற்படும். அது என்ன என்றால் ஏன் இவ்வளவு சீக்கிறம் இந்த படம் முடிந்தது என்பதுதான். இவ்வளவு அழகான ஒரு பேய் படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் மிஸ் செய்யாதீர்கள்.
Also Read… நடிகர் ராம் சரணுக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்.. இரட்டிப்பு மகிழ்ச்சியில் சிரஞ்சீவி குடும்பம்!