Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பர்த்டே பாய் நிவின் பாலியின் ஓம் சாந்தி ஓஷானா படத்தை பார்த்து இருக்கீங்களா? அப்போ மிஸ் செய்யாமல் பாருங்க

Actor Nivin Pauly: மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் நிவின் பாலி. இவருக்கு தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நடிகராக வலம் வரும் இவர் இன்று தனது 41-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

பர்த்டே பாய் நிவின் பாலியின் ஓம் சாந்தி ஓஷானா படத்தை பார்த்து இருக்கீங்களா? அப்போ மிஸ் செய்யாமல் பாருங்க
ஓம் சாந்தி ஓஷானாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 11 Oct 2025 16:39 PM IST

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் நிவின் பாலி (Actor Nivin Pauly). இவரது நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ஓம் சாந்தி ஓஷானா. இந்தப் படத்தை இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கி இருந்த நிலையில் படத்திற்கு திரைக்கதையை மிதுன் மானுவல் தாமஸ் மற்றும் ஜூட் ஆண்டனி ஜோசப் இணைந்து எழுதி இருந்தனர். மேலும் இந்தப் படத்தில் நடிகர் நிவின் பாலிக்கு ஜோடியாக நடிகை நஸ்ரியா நசீம் நாயகியாக நடித்து இருந்தார். மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் வினீத் சீனிவாசன், அஜு வர்கீஸ், ரெஞ்சி பணிக்கர், அஞ்சு குரியன், அக்‌ஷயா பிரேம்நாத், மஞ்சு சதீஷ், வினயா பிரசாத், நிக்கி கல்ராணி, விஜயராகவன், லால் ஜோஸ், ஷரஃப் யு தீன், ஹோபா மோகன், ஹரிகிருஷ்ணன், ஓஷின் மெர்டில், நிமிஷா சுரேஷ், பூஜிதா மேனன், சுஜா மேனன், பார்வதி, சுஜா மேனன், பார்வதி, டி. வள்ளுவச்சேரி, அனுமோத் சாகர், முரளி, சலீம் குமார், பிரதீப் கோட்டயம், மிதுன் மனுவேல் தாமஸ், தீனு என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

இந்தப் படத்தைப் பிரபல தயாரிப்பு நிறுவனமான அனன்யா பிலிம்ஸ் சார்பாக தயாரிப்பாளர் அல்வின் ஆண்டனி தயாரித்து இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரஹ்மான் இசையமைத்து இருந்தார். படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றதைப் போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்தப் படம் தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

ஓம் சாந்தி ஓஷானா படத்தின் கதை என்ன?

இந்தப் படத்தில் நடிகர் நிவின் பாலி ஒரு கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கிறார். விவசாயம் செய்யும் இவர் மீது நடிகை நஸ்ரியா நசீமிற்கு பள்ளியில் படிக்கும் போதே காதல் ஏற்படுகின்றது. தொடர்ந்து கல்லூரியை முடித்து மருத்துவராகிறார் நடிகை நஸ்ரியா நசீம்.

தனது குடும்பத்தில் செல்ல மகளாக இருக்கும் நடிகை நஸ்ரியாவின் விருப்பத்திற்கு மாறாக அவரது தந்தை நடந்துகொள்ள மாட்டார். ஒரு ஃபீல் குட் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். ரொமாண்டிக் காமெடி ஜானரில் உருவான இந்தப் படத்தை ஜியோ ஹாட்ஸ்டாரில் காணக் கிடைக்கின்றது.

Also Read… பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியை விட்டு தீடீரென வெளியேறிய போட்டியாளர் நந்தினி… காரணம் என்ன?

நடிகர் நிவின் பாலி வெளியிட்ட சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Nivin Pauly (@nivinpaulyactor)

Also Read… ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்வதை நிறுத்துங்கள் – நடிகை பிரியங்கா மோகன் காட்டம்!