Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்வதை நிறுத்துங்கள் – நடிகை பிரியங்கா மோகன் காட்டம்!

Actress Priyanka Mohan: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை பிரியங்கா மோகன். இவரது நடிப்பில் தொடர்ந்து படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் ஏஐ மூலம் தவறான புகைப்படங்கள் வெளியாவது குறித்து நடிகை பிரியங்கா மோகன் காட்டமாக பேசியுள்ளார்.

ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்வதை நிறுத்துங்கள் – நடிகை பிரியங்கா மோகன் காட்டம்!
நடிகை பிரியங்கா மோகன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 11 Oct 2025 12:01 PM IST

கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ஓந்த் கதே ஹெல்லா என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார் நடிகை பிரியங்கா மோகன் (Actress Priyanka Mohan). அதனைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் நானிஸ் கேங் லீடர் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் நடிகர் நானி நாயகனாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் தெலுங்கு ரசிகர்களிடம் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவில் பிரபலமானார் நடிகை மாளவிகா மோகனன். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகை பிரியங்கா மோகனுக்கு தமிழ் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி கடந்த 2021-ம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியானது டாக்டர் படம். இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கி இருந்தார்.

அதன்படி டார்க் காமெடி பாணியில் வெளியான இந்த டாக்டர் படத்தில் நடிகை பிரியங்கா மோகன் நாயகியாக நடித்து இருந்தார். இதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார் நடிகை பிரியங்கா மோகன். இந்த டாக்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகை பிரியங்கா மோகன் தமிழ் சினிமாவில் எதற்கும் துணிந்தவன், டான், டிக்டாக், கேப்டன் மில்லர் மற்றும் பிரதர் ஆகியப் படங்களில் நடித்துள்ளார். மேலும் நடிகர் தன்ஷ் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடிகை பிரியங்கா மோகன் நடனம் ஆடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்வதை நிறுத்துங்கள்:

இந்த நிலையில் தனது எக்ஸ் தள பக்கத்தில் நடிகை பிரியங்கா மோகன் ஏஐ புகைப்படங்கள் தொடர்பான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, என்னைப் பற்றி தவறாக சித்தரிக்கும் சில ஏஐயால்-உருவாக்கப்பட்ட படங்கள் பரவி வருகின்றன. தயவுசெய்து இந்த போலி காட்சிகளைப் பகிர்வதையோ அல்லது பரப்புவதையோ நிறுத்துங்கள். ஏஐ என்பது தவறான தகவல்களுக்கு அல்ல, நெறிமுறை படைப்பாற்றலுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும். நாம் என்ன உருவாக்குகிறோம், என்ன பகிர்ந்து கொள்கிறோம் என்பதில் கவனமாக இருப்போம். நன்றி என்று நடிகை பிரியங்கா மோகன் தெரிவித்து இருந்தார். இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… ஆன்மீக சுற்றுழா சென்றுள்ள ரஜினிகாந்த் – இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்

நடிகை பிரியங்கா மோகன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… தண்ணீருக்காக பிக்பாஸ் வீட்டில் சண்டையிடும் கம்ருதின் மற்றும் ஆதிரை – வைரலாகும் வீடியோ