AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட மூதாட்டி – மாயமான வேலைக்காரியைத் தேடி பறக்கும் தனிப்படை!

Elderly Woman Murdered: கோவை நஞ்சுண்டாபுரத்தில் 82 வயதான கஸ்தூரி வீட்டில் கட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அவரை கவனித்த வேலைக்கார பெண் சுர்ஜா மற்றும் அவரது கணவர் நகை கொள்ளை முயற்சியில் கொலை செய்து தப்பியதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட மூதாட்டி – மாயமான வேலைக்காரியைத் தேடி பறக்கும் தனிப்படை!
மூதாட்டி கொலைImage Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 07 Mar 2026 15:00 PM IST

கோவை நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள பார்சன் குடியிருப்பில் வசித்து வந்தவர் கோபாலன் குட்டியின் மனைவி கஸ்தூரி (வயது 82). கணவர் கோபாலன் குட்டி இறந்துவிட்ட நிலையில், கஸ்தூரி தனது மகனான ஆயுர்வேத டாக்டர் ராம்குமார் குட்டியுடன் அந்த வீட்டில் வசித்து வந்தார். வயது முதிர்ந்த நிலையில் இருந்த தாயாரை பராமரிக்க வேண்டும் என்பதற்காக டாக்டர் ராம்குமார் குட்டி நேபாள நாட்டை சேர்ந்த சுர்ஜா என்ற வேலைக்கார பெண்ணை நியமித்திருந்தார். கடந்த 4 மாதங்களாக சுர்ஜா அந்த வீட்டில் இருந்து கஸ்தூரியை கவனித்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கை, கால் கட்டப்பட்ட நிலையில் படுக்கையில் பிணமாக கிடந்த கஸ்தூரி

இந்த நிலையில் நேற்று காலை கஸ்தூரி தனது வீட்டில் உள்ள படுக்கையறையில் கட்டிலில் கை, கால் கட்டப்பட்ட நிலையில் வாயில் துணி வைத்து அடைக்கப்பட்டபடி பிணமாக கிடந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் கிடைத்ததும் கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் கார்த்திகேயன், உதவி போலீஸ் கமிஷனர் வசந்தராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

கண்காணிப்பு கேமராவில் பதிவான சந்தேக காட்சி

பின்னர் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கஸ்தூரியின் வீட்டில் இருந்து வேலைக்கார பெண் சுர்ஜாவுடன் ஒரு ஆண் வெளியேறும் காட்சி பதிவாகி இருந்தது. இந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். தொடர்ந்து நடந்த விசாரணையில் சுர்ஜா மற்றும் ஒரு ஆண் இணைந்து கஸ்தூரியை கொலை செய்து நகைகளை திருடிவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது.

நகை, பணம் இருக்கும் என திட்டமிட்டு நடந்த கொலை

போலீசார் நடத்திய விசாரணையில் மேலும் பல தகவல்கள் வெளியாகின. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்த சுர்ஜா, கஸ்தூரியின் வீட்டில் அதிக நகை மற்றும் பணம் இருக்கும் என்று எதிர்பார்த்து அதை கொள்ளையடிக்க கூட்டாளிகளுடன் திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் கடந்த மாதம் 28-ந்தேதி கஸ்தூரியின் மகன் டாக்டர் ராம்குமார் குட்டி வெளிநாடு சென்றிருந்தார். இதை பயன்படுத்தி வீட்டில் கொள்ளை நடத்த சுர்ஜா திட்டமிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

கணவரை கோவைக்கு வரவழைத்து நடத்திய குற்றம்

இதற்காக சுர்ஜா தனது கணவரை கோவைக்கு வருமாறு முன்கூட்டியே அழைத்துள்ளார். சம்பவத்தன்று கஸ்தூரி தனது வீட்டில் இருந்து சிங்காநல்லூரில் வசிக்கும் தனது மகள் சுஜாதா வீட்டிற்கு காரில் சென்றார். அப்போது வேலைக்கார பெண் சுர்ஜாவும் அவருடன் காரில் சென்றுள்ளார். பின்னர் இரவு 7 மணியளவில் இருவரும் மீண்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.

நள்ளிரவில் கட்டி கொலை

வீட்டிற்கு திரும்பிய பிறகு சுர்ஜா தனது கணவரை தொடர்பு கொண்டு கஸ்தூரியின் வீட்டிற்கு வருமாறு தெரிவித்துள்ளார். அதன்பிறகு இரவு 12 மணியளவில் சுர்ஜா மற்றும் அவரது கணவர் இணைந்து கஸ்தூரியின் வாய், கை, கால்களை சேலை, துப்பட்டா மற்றும் துண்டு மூலம் கட்டி கொலை செய்துள்ளனர். பின்னர் வீட்டில் நகை மற்றும் பணம் இருக்கிறதா என்று தேடியுள்ளனர்.

எதிர்பார்த்த நகை கிடைக்காததால் சங்கிலி பறிப்பு

ஆனால் அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு நகை அல்லது பணம் கிடைக்கவில்லை. இதனால் கஸ்தூரி கழுத்தில் அணிந்திருந்த சுமார் 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பின்னர் குடியிருப்பின் சுற்றுச்சுவரை தாண்டி குதித்து அந்த இடத்திலிருந்து தப்பியோடியது விசாரணையில் தெரியவந்தது.

8 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடுதல்

இந்த சம்பவத்தை தொடர்ந்து தப்பி ஓடிய வேலைக்கார பெண் சுர்ஜா மற்றும் அவரது கணவரை பிடிக்க போலீசார் 8 தனிப்படைகளை அமைத்துள்ளனர். தனிப்படை போலீசார் பெங்களூரு, சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று பல்வேறு குழுக்களாக பிரிந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். சுர்ஜாவை கைது செய்தால் தான் இந்த கொலை சம்பவம் குறித்து முழுமையான தகவல்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.

Follow Us