T20 World Cup 2026 Final: டி20 உலகக் கோப்பையை தூக்கும் அணிக்கு அடிக்கும் லக்.. பரிசுத் தொகையாக பல கோடி.. வாரி வழங்கும் ஐசிசி!
T20 World Cup Prize Money: 2026 டி20 உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு 3 மில்லியன் டாலர்கள் அல்லது தோராயமாக ரூ.27.48 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்படும். அதேநேரத்தில், 2ம் இடம் பிடிக்கும் அணிக்கு 1.6 மில்லியன் டாலர்கள் அல்லது தோராயமாக ரூ.14.65 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்படும்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 (2026 T20 World Cup) கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக திருவிழா போல் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் (IND vs NZ) இடையிலான இறுதிப் போட்டியானது நாளை அதாவது 2026 மார்ச் 8ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த உலகக் கோப்பையில் வெற்றி பெறும் அணிக்கு வெறும் கோப்பை மட்டுமல்ல, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பரிசுத் தொகையும் வழங்கப்படும். அந்தவகையில், இந்த முறை வெற்றி பெறும் அணிக்கு ஐசிசி போட்டியின் பரிசுத் தொகையை அறிவித்துள்ளது. அதன்படி, இத்தனை கோடி ரூபாய் இந்தியாவிற்கு செல்லுமா அல்லது நியூசிலாந்து அணிக்கு செல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
பரிசுத் தொகை எவ்வளவு..?
2026 டி20 உலகக் கோப்பைக்காக ஐசிசி மொத்த பரிசுத் தொகையாக 13.5 மில்லியன் டாலரை ( இந்திய மதிப்பில் ரூ. 120 கோடிக்கு மேல்) நிர்ணயித்துள்ளது. இது 2024 டி20 உலகக் கோப்பை பரிசுத் தொகையை விட தோராயமாக 20 சதவீதம் அதிகம். இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்ற இந்த 2026 டி20 உலகக் கோப்பை போட்டி, குறிப்பிடத்தக்க ஒளிபரப்பு மற்றும் ஸ்பான்சர்ஷிப் வருவாயை பெற்று தந்தது. இது பரிசுத் தொகை அதிகரிக்க வழிவகுத்தது.
ALSO READ: இந்தியா vs நியூசிலாந்து டி20 உலகக் கோப்பை பைனல்.. களமிறங்கும் அம்பயர் லிஸ்ட் ரெடி!




இரண்டாம் இடம் பெறும் அணிக்கு எவ்வளவு பரிசுத்தொகை..?
2026 டி20 உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு 3 மில்லியன் டாலர்கள் அல்லது தோராயமாக ரூ.27.48 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்படும். அதேநேரத்தில், 2ம் இடம் பிடிக்கும் அணிக்கு 1.6 மில்லியன் டாலர்கள் அல்லது தோராயமாக ரூ.14.65 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்படும்.
இப்படியான சூழ்நிலையில் இந்தியா அல்லது நியூசிலாந்து அணிகளில் யார் வெற்றி பெற்றாலும், இரு அணிகளுக்கும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பரிசுத் தொகை கிடைப்பது நிச்சயம்.
அரையிறுதி மற்றும் சூப்பர்-8 அணிகளும் பரிசுத் தொகை உள்ளதா..?
2026 டி20 உலகக் கோப்பையில் அரையிறுதி மற்றும் சூப்பர் 8ல் இடம் பிடித்த அணிகளுக்கும் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அரையிறுதியில் தோல்வியடைந்த இரண்டு அணிகளும் ரூ. 7.24 கோடி வழங்கப்படும். சூப்பர் 8ல் விளையாடிய 8 அணிகள் தோராயமாக தலா ரூ. 3.48 கோடி மொத்த பரிசுத் தொகை கிடைக்கும்.
மீதமுள்ள அணிகளுக்கும் பரிசுத் தொகை உள்ளதா?
டி20 உலகக் கோப்பையில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்றன. லீக் ஸ்டேஜ் போட்டிகளில் விளையாடி வெளியேறிய அணிகளுக்கு தோராயமாக தலா ரூ. 22.9 லட்சம் கிடைக்கும்.
ALSO READ: பைனலில் இந்தியா நியூசிலாந்தை வெல்ல முடியுமா? புள்ளிவிவரங்கள் யாருக்கு சாதகம்?
கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை:
2026 டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகை கிரிக்கெட் வரலாற்றில் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது. இது டி20 கிரிக்கெட்டின் வளர்ந்து வரும் வணிகத்தை தெளிவாகக் காட்டுகிறது. மேலும் ஐசிசி போட்டிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லவும் இது உதவுகிறது.
சாம்பியனாகும் அணி எது?
2026 டி20 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்தியாவும், நியூசிலாந்து அணிகளும் நாளை அதாவது 2026 மார்ச் 8ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இரவு 7 மணிக்கு மோதுகிறது. இதில், வெற்றி பெறும் அணி கோப்பையுடன் பல கோடிகளையும் அள்ளும்.