IND vs NZ Final: இந்தியா vs நியூசிலாந்து டி20 உலகக் கோப்பை பைனல்.. களமிறங்கும் அம்பயர் லிஸ்ட் ரெடி!
Umpires For India vs New Zealand Final: வருகின்ற 2026 மார்ச் 8ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடப்பு சாம்பியனான இந்தியா நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. சஞ்சு சாம்சனின் அபாரமான பேட்டிங் செயல்திறனால் இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதியில் அதிக ஸ்கோர் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்தியா இறுதிப் போட்டிக்குள் நுழைகிறது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து (IND vs NZ) அணிகளுக்கு இடையிலான 2026 டி20 உலகக் கோப்பை (2026 T20 World Cup) இறுதிப் போட்டிக்கான போட்டி அதிகாரிகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அதிகாரப்பூர்வமாக நியமித்துள்ளது. வருகின்ற 2026 மார்ச் 8ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில், மிகவும் அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் குழு நடவடிக்கைகளை மேற்பார்வையிடும். தென்னாப்பிரிக்கா – நியூசிலாந்து இடையிலான முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதேநேரத்தில், இந்தியா – இங்கிலாந்து இடையிலான 2வது அரையிறுதி போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பைனலுக்குள் கால் வைத்தது. இதையடுத்து, இந்தியா – நியூசிலாந்து இடையிலான டி20 உலகக் கோப்பை 2026 போட்டியின் இறுதிப் போட்டியின் அழுத்தத்தை சரியாக கையாள ஐசிசி அனுபவம் வாய்ந்த போட்டி நடுவர்களை களமிறக்கியுள்ளது.
ALSO READ: பைனலில் பயம் காட்டுமா மழை…? இந்தியா – நியூசிலாந்து போட்டியில் வானிலை எப்படி?
போட்டி அதிகாரிகள் யார்..?
- கள நடுவர்கள்: ரிச்சர்ட் இல்லிங்வொர்த் (இங்கிலாந்து) & அலெக்ஸ் வார்ஃப் (இங்கிலாந்து)
- 3வது நடுவர் (டிவி அம்பயர்): அல்லாவுதீன் பலேக்கர் (தென் ஆப்பிரிக்கா)
- 4வது நடுவர்: அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக் (தென்னாப்பிரிக்கா)
- போட்டி நடுவர்: ஆண்டி பைக்ராஃப்ட் (ஜிம்பாப்வே)
நடுவர்களின் அனுபவம் என்ன..?
ரிச்சர்ட் இல்லிங்வொர்த்தின் ஸ்ட்ரீக்:
இது இல்லிங்வொர்த்தின் தொடர்ச்சியான இரண்டாவது டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியாகும். முன்னதாக, 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியிலும் கள நடுவராக இருந்தார். இது மட்டுமின்றி, 2023 ஒருநாள் உலகக் கோப்பை பைனல் மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி பைனலிலும் நடுவராக பணியாற்றிய அனுபவமும் அவருக்கு உண்டு.




அலெக்ஸ் வார்ஃப்:
2023 ஒருநாள் உலகக் கோப்பை உட்பட ஐசிசி போட்டிகளில் வார்ஃப் நிறைய அனுபவத்தைக் கொண்டிருந்தாலும், ஆண்கள் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு கள நடுவராகப் பணியாற்றுவது இதுவே முதல் முறை.
கடந்த 2026 மார்ச்4ம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நியூசிலாந்தின் அரையிறுதி வெற்றியின்போது இல்லிங்வொர்த் மற்றும் வார்ஃப் இருவரும் கள நடுவர்களாக பணியாற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில், 3வது நடுவர் அல்லாஹுதீன் பலேகர் டிஆர்எஸ் மற்றும் சர்ச்சைக்குரிய கேட்ச்களையும், 4வது நடுவர் அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக் எல்லைக் கோடு கடமைகள் மற்றும் விதிகளையும் கையாள்வார்கள்.
ALSO READ: நியூசிலாந்துக்கு எதிரான பைனல்.. இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி?
சாம்பியன் பட்டம் யாருக்கு..?
வருகின்ற 2026 மார்ச் 8ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடப்பு சாம்பியனான இந்தியா நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. சஞ்சு சாம்சனின் அபாரமான பேட்டிங் செயல்திறனால் இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதியில் அதிக ஸ்கோர் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்தியா இறுதிப் போட்டிக்குள் நுழைகிறது. இதற்கிடையில், ஃபின் ஆலனின் சாதனை படைத்த 33 பந்துகளில் சதம் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய பிறகு, நியூசிலாந்து அணி உத்வேகத்துடன் இறுதிப்போட்டியில் அடியெடுத்து வைக்கிறது.
இந்தியா தொடர்ச்சியாக 2வது முறை சாம்பியன் பட்டத்தை வெல்ல முயற்சிக்கும். அதேநேரத்தில், நியூசிலாந்து அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை தூக்க போராடும்.