IND vs NZ Final: நியூசிலாந்துக்கு எதிரான பைனல்.. இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி?
T20 World Cup Final India Possible Playing 11: இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதியில் ஒரு சில விஷயங்களில் சொதப்பலை வெளிப்படுத்தியது. இது இறுதிப்போட்டிக்குள் சரிசெய்வது முக்கியம். இந்தநிலையில், இது இந்தியாவின் விளையாடும் பதினொன்றில் மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது. அந்தவகையில், நியூசிலாந்திற்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
இந்திய கிரிக்கெட் அணி (Indian Cricket Team) தொடர்ந்து இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையின் (T20 World Cup 2026) அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. நேற்று அதாவது 2026 மார்ச் 6ம் தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்தை 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. சஞ்சு சாம்சன் தொடர்ச்சியாக இரண்டு அரைசதங்களை அடித்து இந்திய அணிக்காக கலக்கி வருகிறது. பந்துவீச்சில் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, சிவம் துபே மற்றும் ஹர்டிக் பாண்ட்யா ஆகியோரும் அற்புதமாக செயல்பட்டு வருகின்றனர். இப்போது, இந்தியா தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன்களாகி வரலாறு படைக்க விரும்பினால், வருகின்ற 2026 மார்ச் 8 ம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிராக சிறப்பாக செயல்படுவது முக்கியம்.
இருப்பினும், இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதியில் ஒரு சில விஷயங்களில் சொதப்பலை வெளிப்படுத்தியது. இது இறுதிப்போட்டிக்குள் சரிசெய்வது முக்கியம். இந்தநிலையில், இது இந்தியாவின் விளையாடும் பதினொன்றில் மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது. அந்தவகையில், நியூசிலாந்திற்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
ALSO READ: டி20 உலகக் கோப்பை 2026 பைனலுக்கான டிக்கெட்டின் விலை எவ்வளவு? முன்பதிவு செய்வது எப்படி?




வருண் சக்ரவர்த்தி வெளியேறுவாரா?
இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் ஐசிசி டி20 பந்துவீச்சு தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ள வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்களில் 64 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றினார். கடந்த 4 போட்டிகளிலும் இதுவே நடந்தது. அந்த வரிசையில் உங்களுக்கு ஒரு ஆல்ரவுண்டர் பந்துவீச்சாளர் தேவையெனில், வாஷிங்டன் சுந்தரை அணிக்குள் கொண்டு வரலாம். ஆனால் இந்திய அணி நிர்வாகம் அவரை விளையாடும் லெவன் அணியில் இருந்து நீக்க வாய்ப்பில்லை. வருண் சக்ரவர்த்தி தற்போது 13 விக்கெட்டுகளை வீழ்த்தி டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
அபிஷேக் சர்மா தொடர்ந்து சொதப்பல்:
இந்திய அணியில் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, அவருக்கு இறுதிப் போட்டியில் நிச்சயமாக வாய்ப்பு கிடைக்கும். இதற்கிடையில், சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் இந்திய பேட்டிங்கின் முதுகெலும்பாக உள்ளனர். நடுத்தர வரிசையில், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹார்டிக் பாண்ட்யா மற்றும் சிவம் துபே ஆகியோர் தொடர்ந்து குறைந்த அளவில் ரன்களை குவித்தாலும், முக்கியமான இன்னிங்ஸ்களை விளையாடி வருகின்றனர். பந்துவீச்சு வரிசையில் எந்த மாற்றங்களும் ஏற்பட வாய்ப்பில்லை. ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹார்டிக் பாண்ட்யா ஆகியோர் 3 வேகப்பந்து வீச்சாளர்களாக இருப்பார்கள், அதே நேரத்தில் வருண் சக்ரவர்த்தி மற்றும் அக்சர் படேல் ஆகியோர் சுழற்பந்து வீச்சாளர்களாக இருக்கலாம். கூடுதல் பந்துவீச்சாளர் தேவை எனில் அபிஷேக் சர்மாவுக்கு பதிலாக குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு வழங்கலாம்.
ALSO READ: பைனலில் பயம் காட்டுமா மழை…? இந்தியா – நியூசிலாந்து போட்டியில் வானிலை எப்படி?
கணிக்கப்பட்ட இந்திய பிளேயிங் லெவன் விவரம்:
சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா , வருண் சக்ரவர்த்தி