IND vs NZ Final: அகமதாபாத் இந்திய அணிக்கு ராசியானதா? புள்ளி விவரங்கள் கூறுவது என்ன?
T20 World Cup 2026 IND vs NZ Final: இந்திய அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி வருகின்ற 2026 மார்ச் 8ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும். அரையிறுதியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அதே நேரத்தில், பலம் மிக்க தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி நியூசிலாந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
அரையிறுதியில் இந்திய அணி (Indian Cricket Team) இங்கிலாந்தை வீழ்த்தி ஐசிசி ஆண்கள் 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தங்களது இடத்தை உறுதியுள்ளனது. வருகின்ற 2026 மார்ச் 8ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, சாண்டனர் தலைமையிலான நியூசிலாந்து அணியை (New Zealand Cricket Team) எதிர்கொள்கிறது. இருப்பினும், 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி இதே ஸ்டேடியத்தில் தோற்றது எந்தவொரு இந்திய ரசிகர்களுக்கும் மறக்கமுடியாத ஒன்று. இந்தநிலையில், இறுதிப்போட்டிக்கு முன், நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியாவின் சாதனை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
ALSO READ: அதிரடி மழையில் பயம் காட்டிய இங்கிலாந்து.. இறுதி வரை போராடி பைனலுக்கு முன்னேறிய இந்தியா..!
அகமதாபாத்தில் இரு அணிகளின் சாதனை:
இந்திய கிரிக்கெட் அணி நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 10 போட்டிகளில் விளையாடி, 7 போட்டிகளில் வெற்றி பெற்று, 3ல் தோல்வியடைந்துள்ளது. மறுபுறம், நியூசிலாந்து இந்த ஸ்டேடியத்தில் 2 போட்டிகளில் விளையாடி, 2லும் தோல்வியடைந்துள்ளது.




- இந்தியா : 10 போட்டிகள் – 7 வெற்றிகள், 3 தோல்விகள்
- நியூசிலாந்து: 2 போட்டிகள் – 0 வெற்றி, 2 தோல்விகள்
2026 டி20 உலகக் கோப்பையில் நரேந்திர மோடி ஸ்டேடியம் எப்படி..?
2026 டி20 உலகக் கோப்பையில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இதுவரை 6 போட்டிகள் நடைபெற்றுள்ளன. முதலில் பேட்டிங் செய்த அணிகள் 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. அதே நேரத்தில், சேஸிங் செய்த அணிகள் 2ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி டையில் முடிந்தது.
2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் நினைவுகள்
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 2023 ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இங்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதியது. இறுதிப் போட்டி வரை தோல்வியே சந்திக்காமல் உள்ளே வந்த ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்தது. இது மில்லியன் கணக்கான ரசிகர்களின் நம்பிக்கையை உடைத்தெறிந்தது. இந்த முடிவின் காரணமாக, பல கிரிக்கெட் ஆர்வாளர்கள் இந்தியா நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் எப்படி விளையாடும் என்ற பயத்தை வெளிப்படுத்துகின்றனர்.
மார்ச் 8 ம் தேதி இறுதிப் போட்டி:
இந்திய அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி வருகின்ற 2026 மார்ச் 8ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும். அரையிறுதியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அதே நேரத்தில், பலம் மிக்க தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி நியூசிலாந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்தியா தனது 4வது டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. அதே நேரத்தில், நியூசிலாந்து 2வது முறையாக டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியை எட்டியுள்ளது. எந்த அணி கோப்பையை வென்று வரலாற்றைப் படைக்கும் என்பதைப் பார்க்க இரு நாட்டு ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.