AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs ENG Semi Final: அரையிறுதியில் மீண்டும் ஒரு அசால்ட்.. சொற்ப ரன்களில் அபிஷேக் அவுட்!

Abhishek Sharma Flop: 2026 டி20 உலகக் கோப்பை இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா மீண்டும் ஏமாற்றத்தை கொடுத்தார். வெறும் 7 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து, முக்கிய நாக் அவுட் போட்டிகளில் விக்கெட்டை இழந்தார். கடந்த 5 இன்னிங்ஸ்களில் அபிஷேக் சர்மா ஆப் ஸ்பின்னரிடம் தனது விக்கெட்டை இழப்பது இது 3வது முறையாகும்.

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 05 Mar 2026 20:34 PM IST
2026 டி20 உலகக் கோப்பை இந்தியாவிற்கு எதிரான அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசத் தேர்வு செய்தது. ரெஹான் அகமதுவுக்குப் பதிலாக ஜேமி ஓவர்டன் அணிக்குத் திரும்புவதாக கேப்டன் ஹாரி புரூக் அறிவித்தார். இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் வபிளேயிங் லெவன் அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை. அதன்படி, அபிஷேக் சர்மா மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்த போதிலும், அணி நிர்வாகம் அவர் மீது நம்பிக்கை வைத்தது.

1 / 5
2026 டி20 உலகக் கோப்பையில் அபிஷேக் சர்மா தனது 5 இன்னிங்ஸ்களில் ஆஃப்-ஸ்பின்னர்களுக்கு எதிராக 27 பந்துகளில் வெறும் 29 ரன்கள் எடுத்தார். இதன்போது, அவரது ஸ்ட்ரைக் ரேட் 107.40 ஆக இருந்தது. இதற்கிடையில், அபிஷேக் ஆஃப்-ஸ்பின்னர்களுக்கு எதிராக 3வது முறையாக தனது விக்கெட்டை இழந்தார். அரையிறுதியில், அபிஷேக் சர்மா வில் ஜாக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

2 / 5
நடப்பு 2026 டி20 உலகக் கோப்பையில் அபிஷேக் சர்மா தனது முதல் 3 போட்டிகளில் டக் அவுட்டானார். அதாவது, அமெரிக்கா, பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்துக்கு எதிராக ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். உடல்நலக்குறைவு காரணமாக, நமீபியாவுக்கு எதிரான போட்டியில் அவரால் விளையாட முடியவில்லை.

3 / 5
ஜிம்பாப்வேக்கு எதிரான சூப்பர் எட்டு போட்டியில் களமிறங்கிய அபிஷேக் சர்மா 55 ரன்கள் எடுத்தார். இதன்பிறகு, அபிஷேக்  சர்மா தனது இழந்த ஃபார்மை மீண்டும் பெறுவார் என்று தோன்றியது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 10 ரன்களிலும், தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக 9 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

4 / 5
இதுவரை நடந்த டி20 உலகக் கோப்பையில் 7 போட்டிகளில் அபிஷேக் 7 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 12.71 என்ற மோசமான சராசரியுடன் 89 ரன்கள் எடுத்துள்ளார். இந்தக் காலகட்டத்தில், அபிஷேக் சர்மா ஒரு அரை சதம் மட்டுமே அடித்துள்ளார். இந்த 7 இன்னிங்ஸ்களில் மூன்றில், அபிஷேக் ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளார்.

5 / 5
Follow Us