AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

SA vs NZ Semi Final: பைனலில் கால் வைத்த நியூசிலாந்து.. அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை அலறவிட்ட சைஃபர்ட் – ஆலன் ஜோடி!

T20 World Cup 2026 Semi Final: 2026 டி20 உலகக் கோப்பையின் முதலாவது அரையிறுதியில் இன்று அதாவது 2026 மார்ச் 4ம் தேதி தென்னாப்பிரிக்காவும், நியூசிலாந்தும் மோதியது. இந்த போட்டியில் 170 என்ற இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 12.5 ஓவர்களில் வென்றது. இதன்மூலம், நியூசிலாந்து அணி 2026 டி20 உலகக் கோப்பைக்கு முன்னேறியது. 

SA vs NZ Semi Final: பைனலில் கால் வைத்த நியூசிலாந்து.. அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை அலறவிட்ட சைஃபர்ட் – ஆலன் ஜோடி!
நியூசிலாந்துImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 04 Mar 2026 22:44 PM IST

2026 டி20 உலகக் கோப்பையின் (2026 T20 World Cup) முதலாவது அரையிறுதியில் இன்று அதாவது 2026 மார்ச் 4ம் தேதி தென்னாப்பிரிக்காவும், நியூசிலாந்தும் (SA vs NZ) மோதியது. இந்த போட்டியில் 170 என்ற இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 12.5 ஓவர்களில் வென்றது. இதன்மூலம், நியூசிலாந்து அணி 2026 டி20 உலகக் கோப்பைக்கு முன்னேறியது. ஃபின் ஆலன் வரலாற்றுச் சிறப்புமிக்க சதம் அடித்து நியூசிலாந்துக்கு சாதனை வெற்றியை பதிவு செய்தார். இந்தத் தோல்வியின் மூலம், தென்னாப்பிரிக்காவின் டி20 உலகக் கோப்பையை வெல்லும் கனவு மீண்டும் தகர்ந்தது.

ALSO READ: இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி.. வான்கடேவில் இந்திய அணியின் செயல்திறன் எப்படி?

2026 டி20 உலகக் கோப்பையின் முதல் அரையிறுதியில், முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 169 ரன்கள் எடுத்தது. 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, வெறும் 12.5 ஓவர்களில் 173 ரன்கள் எடுத்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நியூசிலாந்து அணிக்காக தொடக்க வீரர் பில் ஆலன் 33 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 100 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினார். இதன்மூலம், நியூசிலாந்து இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியை எட்டியுள்ளது.

பின் ஆலனுடன் தொடக்க வீரராக களமிறங்கிய டிம் சீஃபர்ட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சீஃபர்ட் 33 பந்துகளில் பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உதவியுடன் 58 ரன்கள் எடுத்தார். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 55 பந்துகளில் 117 ரன்கள் பதிவு செய்தனர். பின்னர் ரச்சின் ரவீந்திர மற்றும் ஃபின் ஆலன் இரண்டாவது விக்கெட்டுக்கு 22 பந்துகளில் 56 ரன்கள் சேர்க்க, நியூசிலாந்து அணி 43 பந்துகள் மீதம் வைத்து வெற்றியை பெற்றது.

டி20 உலகக் கோப்பையில் வேகமான சதம்:

டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஃபின் ஆலன் அதிவேக சதத்தை பதிவு செய்தார். முன்னதாக, வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல், டி20 உலகக் கோப்பையில் அதிவேக சதம் அடித்த சாதனையைப் படைத்திருந்தார். இவர் கடந்த 2016 டி20 போட்டியில் கெய்ல் 47 பந்துகளில் சதத்தை எட்டினார். தற்போது ஃபின் ஆலன் வெறும் 33 பந்துகளில் சதம் அடித்தார்.

தென்னாப்பிரிக்கா அனைத்திலும் சொதப்பல்:

முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்கா பேட்டிங் செய்தபோது 77 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பிறகு, மார்கோ ஜான்சனின் அதிவேக அரைசதத்தால் 160 ரன்களை தொட்டது.

ALSO READ: அரையிறுதியில் மோதும் இந்தியா – இங்கிலாந்து.. வில்லனாகுமா மழை? மும்பை வானிலை நிலவரம்!

தென்னாப்பிரிக்காவின் அனைத்து பந்து வீச்சாளர்களும் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இதன் காரணமாக, நியூசிலாந்து அணி ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்தது. தென்னாப்பிரிக்க அணிக்காக மார்கோ ஜான்சன்  2.5 ஓவர்களில் 18.70 என்ற எகானமியில் 53 ரன்கள் விட்டுக்கொடுத்தார். கார்பின் போஷ் 2 ஓவர்களில் 35 ரன்களும் கேசவ் மகாராஜ் 3 ஓவர்களில் 33 ரன்களும், லுங்கி நிடிகி 2 ஓவர்களில் 22 ரன்களும், ககிசோ ரபாடா 3 ஓவர்களில் 28 ரன்களும் விட்டுக்கொடுத்தனர்.

Follow Us