IND vs NZ Final: பைனலில் பயம் காட்டுமா மழை…? இந்தியா – நியூசிலாந்து போட்டியில் வானிலை எப்படி?
Ahmedabad Weather Update: மழை பெய்யும் அபாயம் இல்லாவிட்டாலும், வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. அகமதாபாத்தில் பகலில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை எட்டும். இரவில் வெப்பநிலை சற்று குறைந்து 23 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2026 ஐசிசி டி20 உலகக் கோப்பை (2026 T20 World Cup) இப்போது கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. டி20 உலகக் கோப்பை போட்டியின் இறுதிப்போட்டியில் இந்தியாவும், நியூசிலாந்தும் இறுதிப் போட்டியில் மோதுகின்றன. இந்த பிரமாண்ட போட்டியானது வருகின்ற 2026 மார்ச் 8ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும். போட்டி இந்திய நேரப்படி இரவு 7:00 மணிக்கு தொடங்கும். முன்னதாக, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியது. அதனை தொடர்ந்து, இந்தியா – இங்கிலாந்து (Ind vs Eng) இடையிலான 2வது அரையிறுதி போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. தற்போது, இந்தியா – நியூசிலாந்து இடையிலான இறுதிப்போட்டியில் வானிலை எப்படி இருக்கும்? மழையால் போட்டி பாதிக்குமா உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்வோம்.
ALSO READ: அகமதாபாத் இந்திய அணிக்கு ராசியானதா? புள்ளி விவரங்கள் கூறுவது என்ன?
வானிலை எப்படி இருக்கும்.?
இந்தியா – நியூசிலாந்து இடையிலான இறுதிப்போட்டி நடைபெறும் நாளான 2026 மார்ச் 8ம் தேதி அகமதாபாத்தில் மழை பெய்யும் வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது. வானிலை முன்னறிவிப்பின்படி, வானம் தெளிவாக இருக்கும் என்பதால், போட்டி எந்த தடங்கலும் இல்லாமல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




மழை பெய்யும் அபாயம் இல்லாவிட்டாலும், வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. அகமதாபாத்தில் பகலில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை எட்டும். இரவில் வெப்பநிலை சற்று குறைந்து 23 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டி இரவு 7 மணிக்கு தொடங்கும், எனவே பகலில் கடுமையான வெப்பம் ஓரளவு குறையக்கூடும். இருப்பினும், சூடான மற்றும் சற்று ஈரப்பதமான காற்று வீரர்களின் உடற்தகுதியை சோதிக்கும்.
ரிசர்வ் டே உண்டா..?
ஒருவேளை மழை உள்ளிட்ட இயற்கை காரணிகளால் காரணத்தால் போட்டி தடைபட்டால், அதற்கு ஒரு ரிசர்வ் டே ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது 2026 மார்ச் 8ம் தேதி போட்டி முடியாவிட்டால், 2026 மார்ச் 9ம் தேதி ரிசர்வ் டே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இரு அணிகளுக்கும் போட்டியை முடிக்க கூடுதலாக 120 நிமிடங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் ஒவ்வொரு அணியும் குறைந்தது 10 ஓவர்கள் விளையாட அனுமதிக்கப்படுகிறது.
ALSO READ: டி20 உலகக் கோப்பை 2026 பைனலுக்கான டிக்கெட்டின் விலை எவ்வளவு? முன்பதிவு செய்வது எப்படி?
ரிசர்வ் டேக்குப் பிறகும் போட்டி நடத்தப்படாமல், போட்டி முடிவு இல்லாமல் தொடர்ந்தால், இரு அணிகளும் கூட்டு வெற்றியாளர்களாக அறிவிக்கப்படும். இருப்பினும், தற்போதைய வானிலை முன்னறிவிப்பைப் பொறுத்தவரை, போட்டி முழுமையாக நடைபெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.