Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

OG படத்திற்கு மக்கள் கொடுத்த வரவேற்பு – நெகிழ்ந்த பிரியங்கா மோகன்

Priyanka Mohan: தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை பிரியங்கா மோகன். இவரது நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் ஓஜி. இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் படத்தின் வெற்றிக்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

OG படத்திற்கு மக்கள் கொடுத்த வரவேற்பு – நெகிழ்ந்த பிரியங்கா மோகன்
பிரியங்கா மோகன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 29 Sep 2025 11:43 AM IST

கன்னட சினிமாவில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ஓந்த் கதே ஹெல்லா என்ற படத்தின் மூலம் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆனார் நடிகை பிரியங்கா மோகன் (Actress Priyanka Mohan). அதனைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் நடிகர் நானியின் நடிப்பில் வெளியான நானிஸ் கேங்ஸ் லீடர் என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் நடிகையாக வலம் வந்த நடிகை பிரியங்கா மோகன் கடந்த 2021-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான டாக்டர் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. டார்க் காமெடி பாணியில் வெளியான இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார் நடிகை பிரியங்கா மோகன்.

தொடர்ந்து தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை பிரியங்கா மோகன். அதன்படி தற்போது தெலுங்கு சினிமாவில் ஓஜி படத்தில் நாயகியகா நடித்துள்ளார் நடிகை பிரியங்கா மோகன். இந்தப் படத்தில் நடிகர் பவன் கல்யாண் நாயகனாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தை இயக்குநர் சுஜீத் எழுதி இயக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்தப் படத்தை டி.வி.வி என்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரிப்பாளர்கள் டி.வி.வி.தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகை பிரியங்கா மோகன்:

மேலும் இந்தப் படத்தின் வெற்றிக்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடிகை பிரியங்கா மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மிகவும் அர்த்தமுள்ள நினைவுகளின் துளிகள். எங்கள் படத்தின் மீது இவ்வளவு அன்பைப் பொழிந்ததற்கு அனைவருக்கும் நன்றி. எங்கள் இதயங்கள் நன்றியால் நிரம்பி வழிகின்றன, உங்கள் அருகிலுள்ள திரையரங்குகளில் எங்கள் திரைப்பட OG ஐ கண்டு மகிழுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

Also Read… கரூரில் விஜயின் பரப்புரையில் நேர்ந்த சோகம் – வேதனை தெரிவிக்கும் நடிகர்கள்

பிரியங்கா மோகன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… டிராகன் பட ஷூட்டிங் அனுபவம் குறித்து ஓபனாக பேசிய கயாடு லோஹர்